மகாதீரா மாவீரனாக டப் செய்யப்பட்டபோது, லோக்கல் தியேட்டரில் என்பதால், பார்த்து, ஓரளவு இம்ப்ரெஸ் ஆனவன் என்கிற வகையில், காசுக்கு நட்டமில்லை என்கிற மினிமம் கியாரண்டி எதிர்பார்ப்புடன் பார்த்த படம். கூடவே கிரேசி மோகன் வசனம் ( Misplaced ), சந்தானம் ( just a pickle) இருந்ததால் கொஞ்சம் கூடுதல் ஆர்வம். கன்னட சுதீப் (பா) அதே பெயரில் வில்லன். தெலுங்கு நானி அதே பெயரில் கதை நாயகன். கலர்புல்லுக்கு சமந்தா பிந்துவாக. அப்புறம் கிராபிக்ஸ் ஈ.. […]
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் கிளை ஒன்று போரூரில் இயங்கி வருகிறது என்பது எனக்கு சமீபத்தில்தான் தெரிந்தது. சுபம் டிராவல்ஸ் தண்டபாணி வீட்டில் ஒரு கூட்டம் நடந்ததாக அன்பர் ஒருவர் சொன்னார். இடம் பிடிபடவில்லை. அப்படியே விட்டுவிட்டேன். ஒரு மாலை நடைப்பயிற்சியில் கண்ணில் பட்டது அந்தச் சுவரொட்டி. மனிதநேயக் குறும்படங்கள் திரையிடல் என்று முகவரி கொடுத்திருந்தார்கள். பொறியியல் நிறுவனம் நடத்தும் செல்வம் அதை ஏற்பாடு செய்திருந்தார். அவரிடம் பெயரும் செல்பேசி எண்ணும் கொடுத்தபிறகு, நிகழ்வு பற்றிய தகவல் […]
ரொறொன்ரோ சுயாதீன கலைத் திரைப்படச் சங்கத்தின் பத்தாவது குறுந்திரைப்பட விழா கடந்த சனிக்கிழமை (23-06-2012) ஸ்காபரோ சிவிக் சென்ரறில் வெற்றிகரமாக நடந்தேறியது. தமிழகத்தின் பிரபல எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார். நண்பகல் 12 மணிக்கு ஆரம்பமான விழாவின் முதல் அங்கமாக, இரு விசேட திரைப்படங்கள் திரையிடப்பட்டன. தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ‘பாலை’ ஒரு அரங்கிலும், கனடிய தயாரிப்பான ‘ஸ்ரார் 67’ பிறிதொரு அரங்கிலும் காண்பிக்கப்பட்டன. முடிவில் இவ்விரு திரைப்படங்களையும் பார்வையிட்ட இரசிகர்கள் […]
“ Busy city பசி Citizen “ சகுனி படத்தில், அறிமுகக் காட்சியில், கார்த்தி பேசும் முதல் வசனம். காதில் விழுந்தவுடனேயே, நிமிர்ந்து உட்காருகிறார்கள் போருர் கோபாலகிருஷ்ணாவில், முதல் நாள் மாலைக்காட்சிக்கு வந்திருந்த 200 சொச்சம் ரசிகர்கள். (!) படம் மொத்தமே இந்த வசனத்தில் அடங்கி விடுகிறது என்றால் மிகையில்லை. பசி என்பது உணவு சம்பந்தப்பட்ட விசயம் மட்டுமில்லை என்பது தான் 158 நிமிடப் படத்தின் கதை. கார்த்தி ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார். “ சகுனி படத்தின் […]
காதல் கோட்டையில் ஆரம்பித்து, மௌனராகத்தில் கொஞ்சம் கலந்து, தேவதாஸ் பாணியில் முடித்து விட வேண்டும். நவீனத்திற்கு லண்டன், மெடிக்கல் காலேஜ், புகழ் பெற்ற டாக்டர் என்று சில மசாலாப் பொடிகளைத் தூவ வேண்டும். டிரம்ஸ் இசையுடன் டிஜிட்டலில் எடுத்து விட்டால் தமிழ் சினிமாவுக்கு ஒரு பேல் பூரி ரெடி. ஜீவா முத்துசாமி ( அனிருத் ) புகழ் பெற்ற சர்ஜன். இந்தியாவே கொண்டாடும் ஜூனியஸ். கூடவே கவிக்கோ என்கிற பெயரில் கவிதைகள் எழுதுபவன். அவன் படித்த மருத்துவக்கல்லூரி, […]
ஒரு கறுப்பு வெள்ளை திரைப்படக்காலத்துக் கதையை எடுத்து, அதேபோல் உருவம் கொண்ட நடிகர், நடிகையைத் தேர்ந்தெடுத்து, கொஞ்சம் வண்ணம் சேர்த்து டிஜிட்டலில் எடுத்தால் அது நவீனப் படமாகிவிடுமா? இந்தப் படத்தைப் பார்த்தவுடன் என் மனதில் எழுந்த கேள்வி இதுதான். கதாநாயகன் பிரவீன், ஏ வி எம் ராஜனின் கறுப்பு ஜெராக்ஸ். கதாநாயகி பிரிந்தா, அப்படியே சின்ன வயது புஷ்பலதா. பழைய காலத்து சாராய வியாபாரி ( பாலாசிங் ), குடிகாரர்கள் நிறைந்த கிராமம். இது நடுவே விடலைக் […]
மதியழகன் சுப்பையா காஞ்சிபுரம் இலக்கியக்களம் அமைப்பு சார்பாக வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த்து. இதில் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில் கவிஞர் அ. வெண்ணிலா தலைமை தாங்க நான், அஜயன் பாலா மற்றும் பகலவன் ஆகியோர் வழக்கு எண் 18/9 திரைப்படம் குறித்த எங்கள் மதிப்பீடுகளை வைத்தோம். ஏற்புரையின் போது பாலாஜி சக்திவேல் குறைகளை கண்டிப்பாக திருத்திக் கொள்வதாகச் சொன்னார் மற்றும் […]
தி பாய் இன் ட ஸ்டிரிப் பைஜாமாஸ் (The boy in the striped pyjamas))) திரைப்படம் தொலைக்காட்சியில் பார்த்த போது அந்த புருனோவாக நடித்தப் பையனின் முகமும் அந்த யூதர் பையனின் முகமும் இப்போதும் மனசில் நிற்கிறது. அந்தக் கதையை அத்துடன் விட்டுவிட முடியவில்லை. கல்லூரியில் வரலாற்றுப் பிரிவில் அறிந்த பாடத்திட்டங்களில் இடம் பெறாத எத்தனையோவரலாற்று நிகழ்வுகளை அறிந்துக் கொள்ளும் ஒரு தேடலில் ஹோலோகொஸ்ட் என்ற சொல்லை அந்தச் சொல்லுக்குள் ஒளிந்திருக்கும் பயங்கரமான அதிர்ச்சி தரும் […]
ஒரு சாதாரணக் குடிமகனை ஜெட் லீயாக ஆக்கும் கதைகள் சாகாவரம் பெற்றவை. அப்படி ஒரு கதைதான், தடையறத் தாக்க. இம்மாதிரிப் படங்கள், சரியான திரைக் கதையும், பாத்திரங்களும், சம்பவங்களும், தேர்ந்த நடிகர்களும் சேரும்போது, சூப்பர் டூப்பர் வெற்றியாகின்றன. அப்படி ஒரு வெற்றி பெற்ற படம், சமீபத்திய ‘ நான் மகான் அல்ல ‘ இம்மாதிரிப் படங்களுக்கு, ரசிகனை யோசிக்க விடாமல் செய்யும், பர பர காட்சிகள் முக்கியம். எதிர்பாராத திருப்பங்கள் அவசியம். கடைசியில் நாயகன் வென்றே தீர […]
சிறகு இரவிச்சந்திரன். சினிமாவுக்கான கோணங்களைக் கொண்டு, ஒரு தொலைக்காட்சித் தொடர் எடுத்தால் எப்படியிருக்கும்? இந்தப்படத்தைப் போல் இருக்கும். அப்படி வரும் எண்ணத்தை மனதை விட்டு பிடுங்கி எறிய முற்பட்டாலும் சிவகார்த்திகேயன் அந்த முயற்சியை முறியடித்து விடுகிறார், க்ளோஸப்பில் முகம் காட்டி, டி டி எஸ்ஸில் குரல் காட்டி. ஒரு சராசரிக் கதையைத், தேர்ந்த நடிகர்களே, இன்னொரு தளத்துக்குக் கொண்டு போவார்கள் என்று, திடமாக நம்புபவன் நான். அதே சமயம், ஒரு திறமையான இயக்குனர் பளிச்சிட, தேர்ந்த நடிகர்கள் […]