“சொந்தக்குரல்” எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணனின் ‘சொந்தக்குரல்’சிறுகதைபற்றிய என்குரல்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

    நாள்தோறும் கவிதை எழுதிக்கொண்டிருந்தாலும், கவிதையில் சிந்தித்துக்கொண்டிருந்தாலும் என்னுடைய வாசிப்பு இப்போது சிறுகதைகள் பக்கம் திருப்பப்பட்டிருக்கிறது. அப்படியொரு கட்டாயத்தை நானே எனக்கு உருவாக்கிகொண்டேன்.நூல்களைப்படித்த விவரங்களைக் குறித்துவந்திருப்பதுபோல், படித்த சிறுகதைகளைப்பற்றிய விவரங்களையும்கூட குறித்துவைத்திருக்கிறேன்.நினைவில் வைத்துச்சொல்வதற்கு கைவசம் ஒரு சிறுகதைகூட இல்லை. ஆனால்,என்னுடைய கதைகளைத்தான் சொல்லமுடியும். காரணம் அவை என்னுடைய கதைகள்.நினைவிலிருந்து நழுவும் நிலை கதைகளுக்கு ஏற்படுவதால் அதைத் தவிர்க்கவே உடனடியாக இப்படிப்பதிவுசெய்கிறேன். அப்படித்தான் ஒரு சிறுகதை வாசிப்பாளனாக என்னை நிலைநிறுத்துகிறேன். அண்மையில் சிங்கப்பூர் கிளிமண்டி நூலகத்தில் ஐந்து […]

சீதை, அமுதா, நஞ்சா, தீயா?

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

ஜயலக்ஷ்மி   ராமாயணம் சிறையிருந்தாள் ஏற்றம் கூறும் காப்பியம்.. காப்பியத்தலைவி சீதை. இத் தலைவியை அமுதமென்றும் நஞ்சு என்றும் தீ என்றும் கதை மாந்தர்கள் கூறுவதைப் பார்ப்போம். கவிஞன் இவளை அமுதம் என்றே வருணிக்கிறான். முதன் முதலாக சீதையை நமக்கு அறிமுகம் செய்கிறான். கன்னிமாடத்தில் தோழிகள் அவ ளைச் சூழ்ந்திருக்கிறார்கள். இவள் அழகை மன்மதனாலும் வரைய முடியாதாம். இவள் அழகை ஓவியத்தில் தீட்ட முடியாமல் அவன் இன்னும் திகைத்துக் கொண்டிருக்கி றானாம். மதனற்கும் எழுதவொண்ணாச் சீதையைக் கவிஞன் […]

தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழா-21, 22.06.2014

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

அன்புள்ள ஆசிரியருக்கு வணக்கம் தினமணி நாளிதழ் நடத்திய இலக்கியத் திருவிழாவில் 21, 22.06.2014 இரண்டு நாட்களும் கலந்துகொண்டு அந்த இன்பத்தை பருகியதில் மட்டற்ற மகிழ்ச்சி. வரவேற்பு தொடங்கி திட்டமிட்டு வகையாக வரிசைபிரித்து, அவரவர்க்கு ஏந்த அட்டைகளைக் கொடுத்து, வழி காட்டி அமரச் செய்தது, சிறப்பு விருந்தினர்களை வரவேற்று அழைத்துக் சென்றது அவரவர்களுக்கான இருக்கைகள் ஒதுக்கியது என ஒவ்வொன்றும் மிக நேர்த்தியாக நடந்தேறின. உலகம் முழுக்க பல்வேறு தமிழ்ச் சங்கங்கள் இலக்கிய அமைப்புகள் பல்வேறு குழுக்களாக தங்களால் இயன்ற […]

தொடுவானம் 29. சென்னை கிறிஸ்துவக் கல்லூரி

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

        தாம்பரம்.         சென்னை  கிறிஸ்துவக் கல்லூரி உலகப் புகழ் வாய்ந்தது!  இது சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கிறிஸ்துவக்  கல்லூரி.          1837 ஆம் ஆண்டில் தாம்பரத்தில் 375 ஏக்கர் கொண்ட சேலையூர் காட்டில் இதை உருவாக்கினர் ஸ்காட்லாந்து திருச்சபையினர். டாக்டர் வில்லியம் மில்லர் என்பவர் இதன் துவக்க காலத்தில் அரும் பணியாற்றினார்.           ஆசியாவின் மிகப் பழமையானது சென்னை கிறிஸ்துவக் கல்லூரி.           மத வித்தியாசமின்றி அனைத்து பிரிவினருக்கும் […]

வண்ணவண்ண முகங்கள் விட்டல்ராவின் நாவல் ‘காலவெளி’

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

  நிறங்களுக்கும் மனித குணங்களுக்கும் இருக்கும் உறவை உணர்த்துவதுதான் ஓவியத்தின் பாலபாடம். முகங்களே இன்றி, வண்ணத்தீற்றல்களைமட்டுமே கொண்ட ஓவியங்கள்கூட மறைமுகமாக மனித குணங்களை, மானுட உணர்வுகளை, வாழ்வின் கோலங்களை உணர்த்துபவையாகவே உள்ளன. ஓவியங்களுக்குள் பல்வேறு முகங்கள் புதைந்திருப்பதுபோலவே ஓவியர்களுக்குள்ளும் பல்வேறு முகங்கள் புதைந்திருக்கின்றன. நட்பை விரும்பும் முகம். நட்பை நிராகரிக்கும் முகம். தன்னை முன்னிறுத்தி முன்னேற விழையும் வேட்கைமுகம். தன் முயற்சியின் முழுமைக்காக அல்லும்பகலும் பாடுபடும் முகம். விட்டல்ராவின் காலவெளி நாவல் ஓவியர்கள் தீட்டும் வண்ணமுகங்களையும் ஓவியர்களுக்குள் […]

உம்பர் கோமான்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்             எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்                  கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே             எம்பெரு மாட்டி யசோதா அறிவுறாய்             அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த             உம்பர்கோ மானே உறங்கா தெழுந்திராய்             செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா              உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய இது திருப்பாவையின் பதினேழாவது பாசுரம். இதற்கு முந்திய பாசுரத்தில் ஆயர்குலப் […]

தினம் என் பயணங்கள் -29 மாற்றுத் திறனாளிகளுக்கு ஓர் அறக்கட்டளை

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

எப்போதேனும் ஒரு நினைவு வந்துவிட்டு போகும், நாம் இதை செய்ய வேண்டும் அதை செய்ய வேண்டும் என்றொரு ஆத்மார்த்த வெற்றிக்கான எண்ணம். எனக்கு எப்போதும் வந்துக்கொண்டிருந்தது அது ஒன்று தான். எங்கும் கல்வி கூடங்களை அமைக்க வேண்டும். கல்வி தரமானதாக இருக்கவேண்டும். கட்டணம் ஏதும் வசூலிக்கப்படக் கூடாது. அதையும் தாண்டி என் முழுமையான கனவு என்பது மாற்றுத்திறனாளிகளை உள்ளடக்கியதே! நான் எதையெல்லாம் வலியாக உணர்ந்தேனோ அந்த வலிகளை நிவர்த்திக்க கூடிய வகையில் அநேகருக்கு வேலை வாய்ப்பை தரும் […]

உயிரோட்டமுள்ள உரைநடைக்கு உரைகல் பாரதி!

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

1911, டிசம்பர் 6ம் தேதி மகாகவி பாரதியின் “ஆறில் ஒரு பங்கு” என்ற ஒரு நூல் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தால் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த நூலில் தடை செய்யும் அளவிற்கு அப்படி என்னதான் இருக்கிறது என்று அறியும் ஆர்வம் எழாமல் இல்லை. இதற்கு இன்னொரு முக்கியமான காரணம் 1912 ம் ஆண்டுக்குப் பிறகு பாரதியாரின் படைப்புகள் ஒரு கட்டுக்குள் வந்திருக்கிறது. தம் வாழ்நாளில் எஞ்சிய அந்த ஒன்பது ஆண்டுகள், வறுமையின் கொடுமையில் சிக்கி, சின்னாபின்னமாகிவிட்டது. இந்த காலகட்டத்தில் மகாகவி […]

ஆழியாள் கவிதைகள்=மேகத்துக்குள் இயங்கும் சூரியன்.

This entry is part 20 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

க.பஞ்சாங்கம். புதுச்சேரி-8 1               drpanju49@yahoo.co.in ஈழப்போராட்டமும் அங்கு நடந்த உறைய வைக்கும் வன்முறைகளும் அறம் எதிர்கொண்ட தோல்விகளும் நமது கேடுகெட்ட காலகட்ட்த்தின் மிகப் பெரிய மனித அவலம்.இத்தகைய நெருக்கடிக்கு நடுவில் வாழுமாறு விதிக்கப்பட்ட சீவன்களின் துக்கமும் அலக்கழிப்புகளும் இழப்புகளும் எழுத்துக்களாக்க் குவிந்த வண்ணம் இருக்கின்றன.இதற்குப் புலம்பெயர் வாழ்க்கை தந்த கூடுதலான் வாய்ப்புக்கள் ஒரு காரணம்.இத்தகைய வாய்ப்பைப் பெற்ற ஒரு கவிஞர் ஆழியாள்.ஆனால் ஆழியாள் கவிதை பெரும்பாலான ஈழத்துக் கவிதைகள் போல் இல்லை என்பதை முத்ல் வாசிப்பிலேயே உணர […]

தினம் என் பயணங்கள் -28 பாராட்டு விழா

This entry is part 5 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

தினம் என் பயணங்களைத் தொடர்ந்து எழுத வாய்ப்புக் கிடைத்துக் கொண்டே இருக்க, மொத்த கட்டுரையும் எடுத்து படித்த போது சோர்ந்து போனேன். என்ன செய்து கொண்டிருக்கிறேன் ? என் சோகத்தை உலகம் எங்கிலும் பந்தி வைத்துக் கொண்டிருக்கிறேன். எல்லோரும் வாங்க, கூடி ஒப்பாரி வைப்போம் என்று அழைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த உண்மை எனக்கு புரிந்த போது, மனம் சோர்ந்தது. நான் எதை செய்யக் கூடாது என்று எண்ணுகிறேனோ அதைச் செய்கிறேன். அதைச் செய்ய முனையும் போது அதை […]