வாழ்க நீ எம்மான் (2)

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

1.ஹரிஜன் என்கிற வார்த்தை மாபெரும் முனிவரான நரசிம்ம மேதாவினால் உபயோகிக்கப்பட்டதாகும்.நரசிம்ம மேதா நாகர் பிராம்ண சமூகத்தைச்சேர்ந்தவர்.தீண்டத்தகாதோர் தம்முடைய சொந்த மனிதர்கள் என்று கூறி தமது சமூகம் முழுவதையும் எதிர்த்து நின்றவர். 2.ஒரு தனி ஹரிஜனுக்காக காசி கோவில் மூடப்பட்டிருந்தால் கூட அந்த ஹரிஜனுக்கு அது திறக்கப்படும் வரையில் அந்தக்கோவிலில் காசி விசுவ நாதர் குடிகொண்டிருக்க மாட்டார். 3.எனது மதம் என்னைப்படைத்தோனுக்கும் எனக்கும் மட்டுமுள்ள ஒரு விஷயமாகும். 4.ஆயிரம் இந்து ஆலயங்கள் தகர்த்துப்பொடி செய்யப்பாட்டாலும் ஒரு மசூதியைக்கூட நான் […]

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் – தி.க.சி. அஞ்சலி

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

26.03.2014 அன்று காலையில் நண்பர் விஜயன் கைப்பேசியில் அழைத்து தி.க.சி. மறைந்துவிட்ட செய்தியைச் சொன்னார். “தினமணியில செய்தி போட்டிருக்குது. நேத்து ராத்திரி பத்தரை மணிக்கு உயிர் பிரிஞ்சிருக்குதுபோல” என்றார். நான் அப்போதுதான் செய்தித்தாளையும் பாலையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தேன். சில நாட்களுக்கு முன்புதான் ஏதோ ஒரு பத்திரிகையில் வரவிருக்கிற தி.க.சி.யின் தொண்ணூறாவது பிறந்தநாள் என்றொரு செய்தியைப் படித்த நினைவை அவருடன் பகிர்ந்துகொண்டேன். பிறகு தன்னையே ஓர் இயக்கமாக உருமாற்றிக்கொண்டு வாழ்ந்த அவரைப்பற்றி சட்டென மனத்தில் உதித்த சில […]

நீங்காத நினைவுகள் 40

This entry is part 2 of 22 in the series 30 மார்ச் 2014

1925 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் பிறந்த எழுத்தாளர் பெரியவர் திரு தி.க. சிவசங்கரன் அவர்கள் இவ்வாண்டின் மார்ச் மாதம் 25 ஆம் நாளில் காலமானார். இவரது அறிமுகம் 1980 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் எனக்குக் கிடைத்தது. அதுவரையில் அவரது பெயரை மட்டுமே அறிந்திருந்தேனே யல்லாது, அவரை நேரில் பார்த்தது கூட இல்லை.  சி.எல்.எஸ். என்று சுருக்கமாய் அழைக்கப்பட்டு வந்த ‘க்றிஸ்டியன் லிட்டரேச்சர் சொசையட்டி’ – கிறிஸ்துவ இலக்கியக் கழகம் – என்கிற அமைப்பு அந்நாள்களில் ஆண்டுதோறும் […]

புகழ் ​பெற்ற ஏ​ழைகள் ​ 51

This entry is part 2 of 22 in the series 30 மார்ச் 2014

(முன்​னேறத் துடிக்கும் இளந்த​லைமு​றையினருக்கு ​வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்​கைத் ​தொடர் கட்டு​ரை) மு​னைவர் சி.​சேதுராமன், தமிழாய்வுத் து​றைத்த​லைவர், மாட்சி​மை தங்கிய மன்னர் கல்லூரி, புதுக்​கோட்​டை.                                     E. Mail: Malar.sethu@gmail.com      51. நீக்​ரோ இன மக்களின் நம்பிக்​கை நட்சித்திரமாய்த் திகழ்ந்த ஏ​ழை….. “அ​தோ அந்தப் பற​வை ​போல வாழ ​வேண்டும் இ​தோ இந்த அ​லைகள் ​போல ஆட ​வேண்டும்” அட என்னங்க வரும்​போ​தே பாடிகிட்டு  வர்ரீங்க…என்ன ​போன வாரம் ​கேட்ட ​கேள்விக்குரிய வி​டையக் கண்டுபிடுச்சுட்டீங்களா…என்னது இல்​லையா…அப்பறம் என்னங்க […]

தொடுவானம் 9. ஒளித்து வைத்த ஓவியங்கள்

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

  திராவிட முன்னேற்றக் கழகத்தின் கிளையில் விடுதலை, முரசொலி, தென்றல், மன்றம் ஆகிய திராவிட ஏடுகள் கிடைத்தன. அவற்றை விரும்பி படித்தேன். தேசிய நூலகத்தில் பல நூல்களை இரவல் வாங்கிப் படிக்கப் படிக்க என்னுடைய தமிழ்ப் பற்றும், திராவிட உணர்வும் மேலோங்கியது. தமிழ் மக்கள் எவ்வளவு அறியாமையில் மூழ்கியுள்ளனர் என்பதைக் கண்டு வியந்து போனேன்.           தங்களுடைய எழுத்தாற்றல் மூலமாக எவ்வாறு இளைய தலைமுறையினரை பகுத்தறிவுப் பாதையில் கொண்டுச் செல்ல திராவிட இயக்கம் முயன்று வருவதையும் உணரலானேன். […]

பட்டறிவுகளின் பாடங்கள் – [எஸ்ஸார்சியின் ‘தேசம்’ சிறுகதைத் தொகுப்பை முன்வைத்து]

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

”ஜரகண்டி”எனும் தலைப்பில் ஒரு சிறுகதை. மிகவும் எள்ளலானது. அரசு விழாக்கள் எப்படி இருக்கும் என்பதைக் காட்டுவது. ‘ஜரகண்டி’ என்ற சொல் மிகவும் பிரபலமானதாகும். முன்கூட்டிப் பதிவு செய்து திட்டமிட்டுத் திருமலை அடைந்து பதினைந்து மணி நேரம் அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுப், பெருமாளருகில் சென்று தரிசிக்கும் போது காதில் ஒலிக்கும் குரல் ஜரகண்டி. அதைச் சொல்லிக் கொண்டே நம்மை இழுத்து அப்புறப் படுத்தி விடுவார்கள். இதை அப்படியே ஒப்பிட்டு எஸ்ஸார்சி எழுத்தாளர் ஒருவர் அரசு விருது வாங்கும் விழாவுக்குச் […]

தினமும் என் பயணங்கள் – 10

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

    தோற்பதிலும் சுகம் எனக்கு   சில விடயங்கள் நம்புவதற்கியலா வகையில் நடந்தேறுவது உண்டு. அப்படி நிகழ்ந்து போன சம்பவங்களை நான் அசைப்போடும் விதமாகத்தான் இந்த பதிவு. கணிணிக்கே நான் புதியவள். அதை உயிர்ப்பித்து அதில் தட்டச்சு செய்து சேமிப்பில் தேக்கி வைக்கவே கற்றிருந்தேன். அந்த வகையிலேயே என் கணிணி அறிவின் தரம். வேலைக்கு வந்த புதியது என்பதால் அவ்வளவாக யாரும் என்னைப் பணி செய்தே ஆகவேண்டும் என்று கட்டாயபடுத்தியதில்லை. வேலை நேரமே எனக்கு பயிற்சி […]

திண்ணையின் இலக்கியத் தடம் – 28

This entry is part 1 of 22 in the series 30 மார்ச் 2014

சத்யானந்தன் மார்ச் 4, 2004 இதழ்: கோஷா முறை : தந்தை பெரியார்-திராவிட நாட்டு முஸ்லீம் சமுதாயத்துக்கிடையே பல கமால் பாஷாக்கள் தோன்ற வேண்டும். பல அமனுல்லாக்கள் கிளம்ப வேண்டும். முஸ்லீம் இளைஞர்கள் தங்கள் பெண்களின் கால்களில் கட்டப் பட்டுள்ள அடிமைச் சங்கிலியை உடைத்தெறிய வேண்டும். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403042&edition_id=20040304&format=html ) கண்ணகி கதை இலக்கியமா?- தந்தை பெரியார்- இந்தக் கதை இலக்கியமாக இருப்பது தமிழர்களின் மானக்கேடு தான். (www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20403045&edition_id=20040304&format=html ) யுக பாரதியின் தெப்பக் கட்டை- சேவியர்- சங்கூதும் […]

“மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரை -2

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

ஷாலி மார்பு எழுத்தாளர்கள்”-ஒரு பின்னூட்டக் கட்டுரைகம்பராமாயணத்தைப் பாடமாக வைக்கும்போது கல்லூரிகளில் இந்தச் சிக்கல் எழுவதாகப் பேராசிரியர்கள் சொல்லியிருக்கிறார்கள். சீதையின் முலைகளைப் பற்றிச் சொல்லாமல் கம்பன் முன்னகர்வதில்லை. கம்பனில் ஊறிய பேராசிரியர் ஒருவர் சொன்னார், ‘கனல் போல் கற்பினாளை’ மாணவர்கள் வேறு நோக்கில் எண்ணாமல் தடுக்க அவருக்கு வழிதெரியவில்லை ஆனால் மனத்தடைகளில்லாமல் இயற்கையின் அற்புதம் ஒன்றின் முன், கனிவும் அழகும் ஒன்றேயாகும் ஒன்றின் முன், தன்னை நிறுத்திக் கொண்ட கலைஞனின் தரிசனமே நான் கம்பனின் வரிகளில் காண்பது. ‘அருப்பு […]

தமிழ்த்தாத்தா உ.வே.சா. : கற்றலும் கற்பித்தலும் – 3

This entry is part 1 of 23 in the series 23 மார்ச் 2014

முனைவர் ந. பாஸ்கரன், தமிழாய்வுத்துறை, பெரியார் கலைக் கல்லூரி, கடலூர். உ.வே.சா- வின் கற்றல் மகாவித்வானாரிடம் மிகவும் சிறப்பாக நிகழ்ந்து வந்தது. மகாவித்வானார் கம்பராமாயணம் நடத்தியபோது அதற்கான புத்தகத்தை வாங்கவேண்டும் என்று உ.வே.சா- வின் மனம் விரும்பியது. கம்பராமயணத்தின் ஏழு தொகுதிகளும் ஏழு ரூபாய்க்கு விற்றார்கள். அதனை வாங்க வேண்டும் என்ற ஆசையில் சிறிய தந்தையிடம் சென்று பணம் கேட்டார். அப்பொழுது சிறிய தந்தை தன்னிடமிருந்த ரூபாய் எழுவதை கொடுத்து வாங்கிக் கொள்ளும்படி கூறினார். உ.வே.சா-வும் அப்பணத்தைக் […]