In the mood for love (ஹாங்காங், இயக்குநர் – வொங் கர் வாய்)

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

ஷைன்சன் ஒரு கலை என்கிற அளவில் திரைப்படம் எப்படித் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது? ஓவியக்கலை வண்ணங்களின் மூலமாகவும், காட்சிப்படுத்தல்களின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இசை ஒலியின் மூலமாகவும், ஒலிகளுக்கிடையில் ஏற்படும் அமைதியின் மூலமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. இதைப் போன்று திரைப்படம் காட்சியில் சலனங்கள் மூலமாகவும், பின்னணியில் தவழும் இசையின் மூலமாகவும், சொற்களின் மூலமாகவும் தனது கலைத்தன்மையை வெளிப்படுத்திக் கொள்கிறது.   திரைக்கலையில் முழு வெளிப்பாடுகளில் In the mood for love திரைப்படமும் ஒன்று. […]

மெய்த்திரு, பொய்த்திரு

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

எஸ் ஜெயலட்சுமி                                  ஒரு நாடென்பது அதன் நீள அகலத்தில் மட்டும் அமைந்திருக்கவில்லை. அந்த நாட்டின் இயற்கை வளம், பாதுகாப்பு. அந்நாட்டு மக்கள். அவர்களின் நடை உடை பாவனை, கல்வி, கலைவியும், இவற்றையும் உள்ளடக்கியதே. நேர்மையான ஆட்சி முறையும் நேர்மை யான வழியில் சேர்த்த செல்வமும், அரச பதவியும், மக்கள் அச்சமின்றி வாழ்வதும் ஒரு நல்ல நாட்டுக்கு இலக்கணம்.   கோசல நாட்டின் வளத்தைப் பேச வந்த கம்பன் ஐந்தறிவு படைத்தவைகளும் எப்படி ஒன் றுக் […]

அருளிச்செயல்களில்வாலியும்சுக்ரீவனும்

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

  வளவ. துரையன்   தாயுரை கொண்டு தாதை உதவிய தரணிதன்னைத் தீவினை என்று நீத்துக் கானகம் சென்றான் இராமன். அங்கே ஏழை வேடன் குகனைச் சகோதரனாக ஏற்றான். சூர்ப்பனகை வந்து தகாத வார்த்தைகள் பேச அவளை மூக்கறுத்து அனுப்புகிறான் இலக்குவன். அவள் இலங்கை வேந்தன் இராவணனிடம் முறையிட்டு அவன் மனத்தில் சீதையைப் பற்றி வர்ணித்து ஆசையை மூட்டுகிறாள். இராவணன் மாரீசனை மாயமானாக அனுப்பி அதன் மூலம் இராம இலக்குவர்களைப் பிரித்துத் தனியாக இருந்த சீதையைச் சிறை […]

இரு ஓவியர்களின் உரையாடல்கள்

This entry is part 1 of 28 in the series 17 நவம்பர் 2013

  இரு ஓவியர்கள், நெடு நாள் நண்பர்கள் தம் சாவகாசமான பேச்சில் என்ன பேசிக்கொள்வார்கள்? தில்லி மும்பை ஒவியர்களாக இருந்தால் சர்வ தேச தளங்களில் தம் ஒவியங்களுக்கு திடீரென கிடைத்துவரும் திடீர் மவுஸ் பற்றி, ஹுஸேனும் ரஸாவும் டி சோஸாவும் இந்திய ஒவியங்களுக்கு ஏற்படுத்தியுள்ள கவனிப்பு பற்றி, பேசியிருக்கக் கூடும்.  ஆனால் தமிழகத்து ஒவியர்களுக்கு அப்படியான சிந்தனைகள் செல்ல வாய்ப்பில்லை. இன்னம் அவர்களுக்கு அத்தகைய வாய்ப்பு கிட்டியிருக்க வில்லை. ஒவியங்கள் பற்றி, தம் புதிய முயற்சிகள் பற்றி, […]

தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை

This entry is part 24 of 34 in the series 10 நவம்பர் 2013

தமிழ் எழுத்தில் ஒரு புதிய உலகின் நுழைவு – வெங்கடேஷின் நாவல், இடைவேளை கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்து  தகவல் தொழில் நுட்பம் சார்ந்த வளர்ச்சி, இந்திய படித்த இளைஞர்களிடையே ஒரு பெரிய கனவுலகத்தைச் சிருஷ்டித்தது. அவர்கள் என்றும் நினைத்தும் பார்த்திராத பொருளாதார வளத்தையும் அவர்கள் காண்பது கனவல்ல என்ற நினைப்பையும் தந்தது. தகவல் தொழில் நுட்பம் நுழையாத துறை இல்லை என்று ஆகியது. அது இல்லாது வளர்ச்சி அடையும் துறை இல்லை என்றாகியது. எல்லா பொறியியல் […]

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்

This entry is part 23 of 34 in the series 10 நவம்பர் 2013

முனைவர் மு.பழனியப்பன் தமிழாய்வுத் துறைத்தலைவர் மன்னர் துரைசிங்கம் அரசு கலைக்கல்லூரி சிவகங்கை     மண்ணுலகம், பூவுலகம், மக்கள் உலகம் என்று இந்த பூமி பல பெயர்களால் அழைக்கப்படுகிறது.  மண்ணால் நிரம்பியிருப்பதால் இதனை மண்ணுலகம் என்கிறோம். இந்த உலகம் பூமி என்றழைக்கப்படுவதால் பூவுலகம் எனப்படுகின்றது. மக்கள் நிரம்பி வாழ்வதால் இதனை மக்கள் உலகம் என்று அழைக்கிறோம். ,மக்கள் உலகம், பூவுலகம் இவற்றையெல்லாம் விட மண்ணுலகம் என்று சொல்லுவதில்தான் பொருள் ஆழம் அதிகம். மண் தனக்குள் முளைக்கும் திறனைக் கொண்டுள்ளது. […]

நுகம்

This entry is part 20 of 34 in the series 10 நவம்பர் 2013

 – சிறகு இரவிச்சந்திரன் படித்த, இன்றைய சமுகக் கட்டமைப்பு மேல் கடும் கோபம் கொண்ட ஒரு இளைஞனை, தன் நாச வலைக்குள் இழுக்கிறது ஒரு அயல்நாட்டு தீவிரவாத கும்பல். பணத்தாசை காட்டி, இந்திய வெளியுறவு துறை அமைச்சரைக் கொல்ல ஏவுகிறது. இடையில் சேரும் இன்னொருவனால், தீவிரவாதம் திசை மாறுகிறது. அப்பாவி இளைஞனின் கதி என்ன ஆயிற்று என்பதை இரண்டேகால் மணி நேரத்தில் சொல்லியிருக்கிறார்கள். சொல்ல வந்த விசயம் உன்னதமானது தான்.. ஆனால் சொன்ன விதம்தான் அரைவேக்காடாக இருக்கிறது. […]

நெய்தல் நிலத்து குறுந்தொழில்கள்

This entry is part 17 of 34 in the series 10 நவம்பர் 2013

முனைவர் ந.பாஸ்கரன் நெய்தல் நிலத்து கடல் தொழில்களான மீன்பிடித்தல், உப்பு விளைத்தல், உலர் மீன் தயாரித்தல், மீன் அல்லது உப்பு விற்பனை செய்தல், முத்தெடுத்தல் போன்றவற்றை நெய்தல் நிலத்து பெருந்தொழில்களாகச் சுட்டலாம்; கொல்லர் தொழில், தச்சுத்தொழில், பொற்கொல்லர் தொழில், கால்நடைவளர்ப்புத்தொழில், குடிசைகள் கட்டும் தொழில் மறறும் பணியாளர்த் தொழில் என்று பலவகையானக் குறுந்தொழிலிகள் நெய்தல் நிலம் சார்ந்தவையாக சங்க இலக்கியங்களின் வழி காணமுடிகிறது கொல்லர் அல்லது தச்சர் தொழில் ஐந்திணை மக்களின் தொழில்புரி கருவிகளிலும் கொலலர் மற்றும் […]

ஆற்று நீரின் ருசி – “நண்டு புடிக்கப் போய்” – ராஜ்ஜாவின் சிறுகதைகள்

This entry is part 24 of 29 in the series 3 நவம்பர் 2013

நூலாய்வு எஸ். ஷங்கரநாராயணன் ஆற்று நீரின் ருசி (நண்டு புடிக்கப் போய் – ராஜ்ஜாவின் சிறுகதைகள். அலமேலு பதிப்பகம் 50 எல்லைக்கல் தெரு குறிஞ்சிப்பாடி 607 302. 160 பக்கங்கள். விலை ரூ 100/-) சிறுகதைகளில் தான் எத்தனை வகைமைகள். வாழ்க்கையின் சீரற்ற போக்கில் ஒரு லயத்தை ஒழுங்கை நியதிகளை, மனிதன் சமூகம் எனவும், பல்வேறாவகவும் கொண்டுவர முயல்கிறான். இதில் கலைக்கும் இலக்கியத்துக்கும் பெரும் பங்கு இருக்கிறது. வாழ்வினை ஈர்ப்புடன் கழிக்கவும் களிக்கவும் அவை கற்றுத் தர […]

சங்க இலக்கியத்தில் பண்டமாற்று முறை

This entry is part 12 of 29 in the series 3 நவம்பர் 2013

வளவ. துரையன். சங்க காலத்தின் பெருமையை விளக்கும் எட்டுத் தொகை நூல்களுள் அகநானூறும் ஒன்றாகத் திகழ்கிறது. அகநானூறு முழுதும் தலைவனும், தலைவியும் உலவும் அகத்திணைச் செய்திகளே விரவிக் கிடக்கின்றன என்றாலும் பண்டைத் தமிழரின் செல்வச் செழிப்பையும் அவர்களின் வாழ்க்கை முறையையும் சில பாடல்கள் காட்டுகின்றன. பண்டை வணிகமுறை பண்டம் மாற்று முறையிலேயே அமைந்திருந்தது. தன்னிடம் அதிகமாக உள்ள ஒரு பொருளைத் தந்து அதற்கு மாற்றாக தனக்குத் தேவையான வேறு ஒரு பொருளைப் பெற்றுக் கொள்வதே பண்டம் மாற்று […]