அசிங்கம்..

This entry is part 41 of 41 in the series 23 செப்டம்பர் 2012

ஜே.பிரோஸ்கான்- நேற்று ஒரு நாள் நானும் அவனும் நண்பர்கள் அசுசியான வார்த்தை அறுத்தல்கள் என்றும் எமக்குள் இருந்ததில்லை நட்பாகிய பொழுதுகளில். என் வெளியில் விஸ்த்தீரணம் பிரபஞ்சம் தாண்டி பேசப்படுவதாய் அவனுக்குள்ளாடிய சலசலப்பில் தானே தோற்றுப் போனதாய் கவலையாகி கண்கள் கசக்கி உறவுகள் உடைத்தெரிந்து வெட்கித்து தவிக்கிறான். எனக்கு கிஞ்சித்தும் கவலையில்லை இன்று அவனது உறவுழப்பதில். –

முனகிக் கிடக்கும் வீடு

This entry is part 29 of 31 in the series 16 டிசம்பர் 2012

  கதவு காத்துக் காத்து தூர்ந்து கிடக்கும்.   இரவு பகல் எட்டி எட்டிப் பார்க்கும்.   அறை ஜன்னல்களின் அனாவசியம் காற்றடித்துச் சொல்லும்.   அறைக்குள் சிறைப்பட்ட வெளியைக் குருவிகள் வந்து வந்து விசாரித்துச் செல்லும்.   நடுமுற்றம் நாதியற்றுக் கூச்சலிடும்.   வெயிலில் காய்ந்தும் மழையில் நனைந்தும் காலத்தின் மொழியை அது கற்றிருக்கும்.   ஒற்றையடிப் படிக்கட்டு உச்சியில் நாய்க்குட்டி போல் ஆகாயம் காத்துக் கிடக்கும்.   முழுநிலா வெளிச்சத்தில் இறந்து போன மனிதர்கள் […]

தாகூரின் கீதப் பாமாலை – 44 உன்னுள்ளே கலந்து விட்டது என்மனம் !

This entry is part 21 of 31 in the series 16 டிசம்பர் 2012

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா நீ யிங்கு வர இயலாது  போயினும் அது ஓர் காரண மாகுமா நீ என்னை ஒதுக்கிட ? என் உள்ளத்தில் நீ இல்லையா என்முன் நீ நில்லா திருப்பினும் ? உன்னுள்ளே கலந்து விட்டது என்மனம் எப்படி நீ எனை நீக்கி விட முடியும் ? வெறுப்பு மௌனத்துடன் நான் வெளியேறி விட்டாலும் வஞ்சிக்கப் படாது  என் காதல் ! ஊசியால் குத்துவதை […]

வால்ட் விட்மன் வசன கவிதை -2 மௌனத்தில் ஆழ்ந்த சிந்தனை

This entry is part 7 of 31 in the series 16 டிசம்பர் 2012

[Walt Whitman Image] (1819-1892) (புல்லின் இலைகள் -1) மௌனத்தில் ஆழ்ந்த சிந்தனை மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி […]

ஆத்ம சோதனை

This entry is part 23 of 26 in the series 9 டிசம்பர் 2012

மு.கோபி சரபோஜி இலக்கணம் படித்து இலக்கியம் படைக்க வா என்றபோது இடித்துரைத்தோம். மரபுகளை கற்று மரபை மீறு என்றபோது மறுப்பு செய்தோம். புதுக்கவிதை செய்து புது உலகம் படைக்க புறப்பட்டவர்கள் நாங்கள் – என்றோம். இறுக்கங்களை இலகுவாக்கி மறுப்புகளை மரபாக்கியவர்களோடு சேர்ந்தோம். நம் கூட்டணியின் கூட்டல்களில் குயில்களின் கூவல்களை கேட்க வைத்தோம். கால ஓட்டத்தில்………… பாதை காட்டியவர்கள் பயிராய் வளர பாதசாரியாய் வந்த நாமோ பதர்களாகி போனோம். அளவில்லா கற்பனையில் அர்த்தமில்லா அனுமானத்தில் அவரவர் இஷ்டத்திற்கு எழுதிக் […]

ஒருவர் சுயத்தனம் பற்றி எனது பாடல் -1 (1819-1892) (புல்லின் இலைகள் -1)

This entry is part 11 of 26 in the series 9 டிசம்பர் 2012

  மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா   வால்ட் விட்மன் வாழ்க்கை வரலாறு: அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன் 1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார்.  தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார்.  அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார்.  ஆகவே அவர் சிறு […]

தாகூரின் கீதப் பாமாலை – 43 சதுப்பு நிலப் பாடல்கள்

This entry is part 10 of 26 in the series 9 டிசம்பர் 2012

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பாசான நீர்க்கொடி போன்ற எனது பாடல்கள்  அலை வெள்ள அடிப்பில் பாதை தவறி எப்போதும் திசை மாறிப் போகும் ! நங்கூரம் இல்லை அவற்றுக்கு ! ஆதார மற்ற காற்றிலே அவை ஏன் ஆடி வருகின்றன  ?  அவை ஏன் இடம் மாறிப் போகின்றன, தடம் ஏதும் விடாது தானியம் ஏதும் விளையாது ? எம்முயற்சியும்  இல்லை  அவற்றுக்கு ! ஒன்றைக் குறிவைத்து […]

கண்ணீர்ப் பனித்துளி நான்

This entry is part 9 of 26 in the series 9 டிசம்பர் 2012

  மயிர் கூச்செரியும் கடுங்குளிரில் நிலவுமறியாது பனிக்கட்டிகளுக்குள் மறைந்திருக்கும் கண்ணீர்ப் பனித்துளி நான்   ஆயிரக்கணக்கில் தாரகைகள் பூக்கும் ஆகாயம் அனுப்பும் ஒளிக்கீற்று மேல் காதலுற்று சூரியனுக்கே காதல் கடிதங்களை வரையும் கண்ணீர்ப் பனித்துளி நான்   நாளை உதிக்கவிருக்கும் விடிகாலையில் உனது வெளிச்சத்தை முத்தமிட்டு அந்த உஷ்ணத்திலேயே உருகிக் கரைந்துவிடும் கண்ணீர்ப் பனித்துளி நான்   – ரொஷான் தேல பண்டார தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

என்னைப் போல் ஒருவன்

This entry is part 27 of 31 in the series 2 டிசம்பர் 2012

என்னை யாரோ பின்தொடருகிறார்கள் எனக்கு  பகைவரென்று யாருமில்லை கடன் வாங்கி கொடுக்காமல் இருந்ததில்லை எடுத்தெறிந்து யாரையும் பேசுவதில்லை அடுத்தவர் மனைவியை நிமிர்ந்து  பார்ப்பது கூட இல்லை தீவிரவாதியோ என சந்தேகப்படுவார்கள்  என்று தாடி கூட  வைப்பதில்லை சர்ச்சைக்குரிய  நாவல் எதையும் நான் எழுதவில்லை வெளிநாட்டுக்கு உளவறிந்து சொன்னதில்லை என் குழந்தையைத்  தவிர வேறெந்த குழந்தையையும் தூக்கி  கொஞ்சுவதில்லை அருகாமையில் எந்த குண்டுவெடிப்பும்  நடக்கவில்லை எந்த ஒரு  சித்தாந்தமும் என்னை ஈர்த்ததில்லை என்னைப் போல் ஒருவன் இருப்பானோ என்று […]

ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் (Shakespeare’s Sonnets : 47) ஓர் உடன்படிக்கை

This entry is part 16 of 31 in the series 2 டிசம்பர் 2012

மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் பாக்கள் ஆங்கில மொழியில் வடிக்கப் பட்டுள்ள காதற் கவிதைகள். அவை […]