ஜாக்கி சான் -9. பள்ளி அனுபவம்

This entry is part 3 of 27 in the series 29 செப்டம்பர் 2013

  பாவ் தந்தையின் நேரடிப் பார்வையில் பல விஷயங்களைக் கற்றுக் கொண்டான்.   தந்தையுடன் அதிகாலையில் செய்யும் கஷ்டமான உடற்பயிற்சிகள் உடல் வலியைத் தரும். இருந்தாலும், இருந்த இடத்தின் வனப்பும், காலைச் சூரியனின் மிதமான சூடும், தகதகக்கும் கடலின் எழிலும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது.   அந்த நேரங்களையே தன்னுடைய சந்தோஷமான நாட்களாக இன்றும் ஜாக்கி சான் நினைவு கூர்கிறார்.   அதே வீட்டிலேயே, தாய்க்கு உதவி செய்து கொண்டும் தந்தை காய்கறியை வெட்டிக் […]

திண்ணையின் இலக்கியத் தடம் – 1

This entry is part 19 of 26 in the series 22 செப்டம்பர் 2013

அன்புக்குரிய திண்ணை ஆசிரியருக்கு, வணக்கம். திண்ணை இதழ்கள் அனைத்தையும் முழுமையாக வாசிக்க வேண்டும் என்னும் ஆசை பல காலமாகவே இருந்தது. ஆனால் ஒரு கட்டாயம் இருந்தாக வேண்டும். வாசிப்பதை சுருக்கமாக வரா வாரம் வாசகருடன் பகிர்ந்தால் நான் கண்டிப்பாக வாசிப்பேன் என்று தோன்றியது. திண்ணையின் முதல் இதழ் முதல் வாசிக்கத் துவங்கி உள்ளேன். ஒவ்வொரு கட்டுரையில் இரண்டு மாதங்களின் பதிவுகளை அலச விரும்புகிறேன். இரண்டு மாதங்களில் வரும் சுமார் எட்டு பதிப்புகளை நான் வாசித்து, கட்டுரைகளின் சாராம்சத்தைத் […]

குகப்பிரியானந்தா – சித்த வித்தியானந்தா..

This entry is part 5 of 26 in the series 22 செப்டம்பர் 2013

ஆண்டு, அனுபவித்து ஓய்ந்து போனவர்கள் சந்நியாசம் வாங்கிக்கொண்டு அமைதியாக ஹரே, ராமா, சிவ… சிவா.. என்று உட்கார்ந்தால் நிம்மதி தேடி ஆண்டவனின் பாதத்தில் சரணடைந்திருக்கிறார்கள் என்று ஏற்றுக்கொள்ளலாம்.  விவேகானந்தரின் குருவான, 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இராமகிருஷ்ணபரமஹம்சர்  சிறு வயதிலேயே ஆன்மீக விசயங்களில் ஆழ்ந்த ஞானம் உடையவராயிருந்தவர் மற்றும் பல அற்புத சக்திகளைக் கொண்டவர். அனைத்து மதங்களும் ஒரே இறைவனை அடையும் வெவ்வேறு வழிகளே என்பதை தன் அனுபவங்கள் மூலம் உணர்ந்ததோடு  அதனை  வலியுறுத்தியவர். குருவை மிஞ்சிய சீடனாக […]

ஆகஸ்டு-15. நாவல். குமரி.எஸ்.நீலகண்டன் – எளிமையும் இலட்சியமும்

This entry is part 3 of 26 in the series 22 செப்டம்பர் 2013

  இந்தியா சுதந்திரநாடாக மலர்ந்து அறுபத்தாறு ஆண்டுகள் கடந்துவிட்டன. சுதந்திரப்போராட்டத்தில் நேரிடையாக ஈடுபட்ட தலைமுறையும் கண்ணாரக் கண்ட தலைமுறையும் மெல்லமெல்ல மறைந்து வருகிறது. பொதுத்தேர்தல் வழியாக நம்மை ஆள்வோரை நாமே தேர்ந்தெடுக்கும் அதிகாரமும் பொறுப்பும் நமக்குக் கிடைத்துள்ளன. நம்முடைய தேர்வின் வழியாக நம்மை ஆளும் பிரதமரையும் அமைச்சர்களையும் நாம் பலமுறை தேர்ந்தெடுத்து அனுப்பிவைத்துள்ளோம். மாபெரும் தலைவர்களும் வழிகாட்டிகளும் அவர்களுடைய பிறந்தநாள் அன்றும் இறந்தநாள் அன்றும் மட்டும் நினைக்கப்படுகிறவர்களாக இன்றைய சூழல் மாறிவிட்டது. சுதந்திரப்போராட்டத்தைப்பற்றி புத்தகங்களில் படித்துத் தெரிந்துகொள்ளும் […]

ஜாக்கி சான் 8. தற்காப்புக் கலை குங்பூவைப் பற்றி

This entry is part 17 of 26 in the series 22 செப்டம்பர் 2013

    நம் சாகச நாயகன் ஜாக்கி சான் மக்கள் உள்ளங்களைக் கவரக் காரணமான குங்பூ பற்றி இந்தத் தொடரில் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.   சீனத் தற்காப்புக் கலையான குங்பூ என்ற சொல்லிற்கு “நீண்ட பயிற்சியினால் பெறப்படும் திறமை” என்பது பொருள். இந்தக் கலையில் இருக்கும் சண்டைப் போக்கு, ஸ்டைல் மிகவும் சிக்கலானது, கடினமானதும் கூட.   குங்பூவின் வரலாறு என்று பார்க்கும் போது, அது ஹ_னான் மாகாணத்தில் இருந்த சொங் ஷான் ஷவோலின் மடத்தில் […]

சேவை

This entry is part 6 of 26 in the series 22 செப்டம்பர் 2013

                              டாக்டர் ஜி. ஜான்சன்   அப்போது ஈழப் போர் தீவிரனாக நடந்து கொண்டிருந்தது. தமிழீழ மக்கள் அகதிகளாக மண்டபத்தில் குவிந்து கொண்டிருந்தனர். அங்கு செயல்பட்ட அகதிகள் முகாம் நிறைந்து விட்டது. ஆனால் அன்றாடம் படகுகளில் அவர்கள் வந்து கொண்டிருந்தனர்.           வேறு அகதிகள் முகாம்கள் இராமநாதபுரம், சிவகங்கை , மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு தங்க இடமும், உணவும் , சில அடிப்படை வசதிகளும் தமிழக அரசு செய்து தந்தது.           […]

நட்பு

This entry is part 3 of 22 in the series 15 செப்டம்பர் 2013

                                                 டாக்டர் ஜி. ஜான்சன் டிசம்பர் மாதம் இருபதாம் நாள் மாலை. வீட்டுத் தோட்டத்தில் மலர்களின் அழகில் மயங்கியிருந்த நேரம். வீட்டு வாசலில் ஒருவர் என்னைத் தேடி வந்திருந்தார். அவரை நான் அதற்குமுன் பார்த்ததில்லை. நான் அவரிடம் சென்று நின்றேன். அவரின் கையில் ஒரு பை இருந்தது.அவர் என் பெயரைச் சொல்லி அது நானா என்று கேட்டார் . நான் ஆம் என்றேன். ” டாக்டர், நான் குன்றக்குடி மடத்திலிருந்து வருகிறேன். இதை அடிகளார் உங்களிடம் சேர்ப்பிக்கச் […]

தனித்து விடப்பட்ட பாதையில் தனித்து நடந்து வந்த ஒரு மனிதர் – பி.என். ஸ்ரீனிவாசன்

This entry is part 8 of 22 in the series 15 செப்டம்பர் 2013

கடந்த சனிக்கிழமை செப்டம்பர் மாதம் 7-ம் தேதியன்று பி.என். ஸ்ரீனிவாசன் தனது 85-ம் வயதில் காலமானார் என்ற செய்தியை நான் இணையத்தில் தான் படித்தேன். அவ்வப்போது இலங்கைத் தமிழர் பற்றிய செய்திகளை, தமிழ் நாட்டுச் செய்திகளைத் தொகுத்து திருவள்ளுவர் இலக்குவனார் அனுப்பும் மடல் ஒன்றில் இந்த செய்தியும் இருந்தது. தமிழ்த் தினசரிப் பத்திரிகை எதிலும் இந்த செய்தி வந்துள்ளதா என்பது எனக்குத் தெரியாது. வாரப் பத்திரிகைகள் எதுவும் இதை ஒரு பொருட்டாகக் கருதுமா என்பதும் எனக்குத் தெரியாது. […]

ஐம்பது வருடங்களின் வளர்ச்சியும் மாற்றங்களும் – (3)

This entry is part 9 of 22 in the series 15 செப்டம்பர் 2013

இந்த இடத்தில், சந்தர்ப்பத்தில் சல்மா என்னும் கவிஞரைப் பற்றிப் பேசுவதும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணங்கள் சுவாரஸ்யமானவை பல. சல்மா தன் கவிதைகளில் தன் சொந்த துயரங்களையும் இழப்புகளையும் பற்றித் தான் பேசுகிறார் என்று தோன்றும். ஆனால் அவை உண்மையில் அத்தோடு நிற்பதில்லை. இறக்கை முளைத்துப் பறக்கத் தொடங்கி விடுகின்றன. அக்கவிதைகள் வேறு நிலைகளுக்கு நம்மை இட்டுச் செல்கின்றன. தன்  சொந்த துயரங்கள், தன் குடும்பத் துயரங்களாக, ஒரு சமூகத்தின் துயரங்களாக, அவர் சார்ந்திருக்கும் மதத்தின் நிலைப் […]

ஜாக்கி சான் 7. வாலுப் பையனாக வளர்ந்த கதை

This entry is part 6 of 22 in the series 15 செப்டம்பர் 2013

அதிகாலை நேரம்.   சார்லஸ் தூக்கிக் கொண்டருக்கும் மகனின் பக்கம் சென்று, “பாவ் பாவ், விடிச்சிடுச்சு. எழுந்திரு, எழுந்திரு!” என்று உரக்கக் கத்தினார்.   பாவ்வுக்கோ நல்ல உறக்கம்.   எழலாமா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டு இருக்கும் வேளையிலேயே,  போர்வை வேகமாக இழுக்கப்பட்டது.   பல முறை இப்படி இழுக்கப்பட்ட போது பாவ் தலை குப்புற விழுந்திருக்கிறான்.  பல முறை தலை தரையில் படாமல் தப்பிக்கப் பல சாகசங்களைச் செய்யதிருக்கிறான். இப்போது பழகிவிட்டிருந்ததால், தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு […]