சோம. அழகு Rocket Scienceஐ காட்டிலும் கடினமான கேள்வி இது. உண்மையில் நமது எண்ணவோட்டங்களின் சங்கிலித் தொடரை விவரிக்கவே இயலாது. அந்தக் கட்டற்ற காட்டாற்றின் வழிப் பாதைகள் ஒன்றுக்கொன்று சம்பந்தப்பட்டிருக்க வேண்டியதில்லை. சம்பந்தப்பட்டிருப்பினும் அந்த இடையிணைப்பிற்குச் சமயத்தில் பெரிய பொருளோ காரணமோ இருக்காது. அதுதான் பிரச்சனையே. அதுதான் அதன் அழகும் கூட! உச்சகட்டமாக ஒன்றுமே யோசிக்காமல் வெறுமனே எதையோ பார்த்துக் கொண்டே கூட இருந்திருப்பேன் சில சமயம். இது புரியாமல் இக்கேள்வியை அடிக்கடி கேட்பதில் என்னதான் […]
சோம. அழகு பிற உயிரின் துயருக்கு நெக்குருகும் கண்ணோட்டம் வாய்க்கப் பெற்ற மனங்களெல்லாம் ஆசீர்வதிக்கப் பெற்றவையா? அல்லது கொடுஞ்சாபத்திற்கு உள்ளானவையா? மிகச் சாதாரண காட்சிகளே போதுமானவையாக இருக்கின்றன, நம்மை மொத்தமாக உருக்குலையச் செய்ய. பரவலான பொருளில் பயன்படுத்தியிருக்கிறேன் எனினும் ‘சாதாரணம்’ என்பதற்கு இங்கு அளவுகோல் என்ன? உங்கள் சாதாரணங்கள் எனக்குப் பெரும்பாலும் ‘ரணங்கள்’. உதாரணமாக, நம் தாத்தா பிறப்பதற்கு முன்பிருந்தே நிற்கும் மரம் ஒன்று ‘சாலை விரிவாக்கம்’, ‘மின்கம்பிக்கு இடைஞ்சல்’… போன்ற அற்பக் காரணங்களுக்காக வெட்டப்படுவதை யாரேனும் […]
சோம. அழகு வயதாக வயதாக (ரொம்ப ஒண்ணும் இல்ல… ஒரு 32 தான்!) வாழ்க்கை பற்றிய… அதாவது மனிதர்களைப் பற்றிய கண்ணோட்டமே மாறுகிறது. மகிழ்ச்சி, நிறைவு, நிம்மதி போன்றவை புதிய இலக்கண மாற்றம் பெறுகின்றன. யாருக்கெல்லாம் நம்மைப் பிடிக்கிறது என்பதை விட யாருக்கெல்லாம் நம்மைப் பிடிக்கவில்லை அல்லது யாரையெல்லாம் நமக்குப் பிடிக்கவில்லை என்பது நம்மை இன்னும் தெளிவுற வரையறுப்பதாக அவதானிக்கிறேன். ஏனெனில் நம் மீது உமிழப்படும் வெறுப்பிற்கான காரணங்களும் அக்காரணங்களை நமக்கெதிரான பதாகைகளாக உயர்த்திப் […]
குரு அரவிந்தன் கனடாவில் இந்த வருடத் தமிழ் மரபுக் கொண்டாட்டங்கள் முடிவுக்கு வந்திருக்கின்றன. சென்ற ஞாயிற்றுக்கிழமை 28-1-2024 அன்று ‘கிராமத்து வதனம் பெண்கள் அமைப்பின்’ பொங்கல் விழாவும் மரபுத்திங்களும் மிகவும் சிறப்பாக ஒன்ராறியோ, எத்தோபிக்கோவில் கொண்டாடப்பட்டது. மங்கள விளக்கேற்றிக் கனடா தேசிய கீதம் தமிழ், ஆங்கிலம், பிரஞ்சு மொழிகள் கலந்து பாடப்பெற்றது. தொடர்ந்து தமிழ்வாழ்த்தும் அகவணக்கமும் இடம் பெற்றன. தமிழர்களின் பாரம்பரியத்திற்கு அமைய பொங்கல் பற்றிய உரையும், மற்றும் மொழி, கலாச்சார, பண்பாட்டு நிகழ்வுகளும் இடம் பெற்றன. […]
ஜெயபாரதனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது
புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2022
புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2022 விளக்கு இலக்கிய அமைப்பு (அமெரிக்கா) புதுமைப்பித்தன் நினைவு விருதுகள் – 2022 விருது பெறுபவர்கள் : 1. பொ.வேல்சாமி – புனைவற்ற படைப்புகள் 2. சு.தமிழ்ச்செல்வி – புனைவிலக்கியம் வரவேற்பு : வாஷிங்டன் சிவா விளக்கு அறிக்கை, விருது வழங்குதல் : மு.சுந்தரமூர்த்தி விளக்கு அமைப்புச் செயலர் சு.தமிழ்செல்வி படைப்புகள் பற்றி அசதா இலக்குமிகுமாரன் ஞானதிரவியம் இரா.காமராசு பொ.வேல்சாமி பங்களிப்புகள் பற்றி காளிங்கன் கடற்கரய் மத்தவிலாச அங்கதம் யுகபாரதி ஏற்புரை […]