கார்த்திக் பாலா வீட்டிற்கு வெளியிலிருந்து வந்த அந்த அழுகைச் சத்தம் சுவர்களைப் பிளந்து வீட்டுக்குள் எதிரொலித்தது. அந்தி மங்கி இருள் வியாபிக்கத் தொடங்கியிருந்த அந்த வேளையில் அவ்வலறல் அம்பு துளைத்த ஒரு காட்டுப் பன்றியின் கதறலைப் போலிருந்தது. அப்பா வீட்டின் நடுவில் நடுஞ்சாடையாகப் படுக்க வைப்பட்டிருந்தார். அம்மாவும், அத்தையும், சுற்றி அமர்ந்து அழுது கொண்டிருந்தார்கள். அழுது அழுது அவர்களின் கண்கள் இரத்தச் சிவப்பேறி வீங்கிப் போயிருந்தன. காலையிலிருந்து பச்சைத் தண்ணீர் கூட குடிக்காமல் வறண்டு போயிருந்தது அவர்களின் […]
ஜப்பானில் கசுமியும் இசிரௌவும் திருமணம் செய்து கொண்டு, மகிழ்ச்சியுடன் வாழ்க்கையை ஆரம்பித்தனர். ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல, குழந்தை இல்லாததால், அவர்கள் வாழ்வில் துயரம் எட்டிப் பார்த்தது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, பல வேண்டுதலுக்குப் பிறகு, ஒரு அழகிய மகனை ஈன்றெடுத்தாள் கசுமி. மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி, “அதிர்ஷ்டச் சிறுவன்” என்ற பொருள் படும்படி, குழந்தைக்கு “கிசிரௌ” என்று பெயரிட்டனர். கசுமியும் இசிரௌவும் மகனைப் பெரிதும் நேசித்தனர். அவனுக்கு எதையும் இல்லை என்று சொல்லாமல், அழுதாலும், கோபித்தாலும், […]
“என்னடா உனக்கு காய்ச்சல் இப்படி வந்திருக்கிறது. என்ன தண்ணியிலே ஏதாவது விளையாடினாயா?” என்று சரவணனிடம் கேட்டார் அம்மா. “இல்லையே” என்று பதில் கூறினான் அவன். “இல்லை நீ ஓயாம வெயில்லேயும் தண்ணியிலேயும் விளையாடிக் கிட்டுதான் இருக்கிறே. எவ்வளவு தடவை சொல்லி இருப்பேன். கேட்க மாட்டேங்கிறே. இப்போ உனக்கு இப்படி காய்ச்சல் வந்திருக்கிறது” என்று கூறியபடியே அவனை மருத்துவரிடம் கூட்டிச் சென்றார் அம்மா. அவனுக்கு காய்ச்சலால் உடம்பு நன்கு கொதித்தது. மருத்துவமனை கொஞ்சம் தொலைவில் இருந்தது, அதனால் பேருந்து […]
எங்களோடு படித்தவர்களில் மாரிச்சாமி இப்போது அமைச்சராக இருக்கிறான். படிக்கும் காலங்களில் ரொம்பவும் விளையாட்டுத்தனமாக இருந்தவன். படிப்பில் விளையாட்டுத்தனமாக இருந்த அவன் விளையாட்டில் படு விளையாட்டுத்தனமாக இருந்தான் என்பதையும் கவனிக்கத்தான் வேண்டும். அவன் இப்போது மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர். வெறுமே விளையாடிட்டிருந்தவன்ட விளையாட்டா சேர்ந்து போச்சுறா காசு…என்றான் மாஞ்சா. ஏதோ அவனுக்குக் கிடைத்த சொத்து போல் சொல்லிக் கொண்டான். சொந்த ஊர் வரும்போதெல்லாம் மாரிச்சாமி அவன் செலவுக்குக் காசு கொடுத்து விட்டுப் போனான். அதென்ன அப்படியொரு தனி கவனிப்பு? […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “வேண்டாம் என் தந்தை பணம், மிஸிஸ் பெயின்ஸ் ! இரத்தக் கறை பிடித்த பணத்தில் ஏழைகளின் பசி தீரக் கூடாது ! பட்டினி கிடந்தாலும் தந்தையின் பீரங்கி அன்னமிட வேண்டாம் பாமரருக்கு ! வெடி மருந்து விற்ற பணம் சாவடிக்கு உயிர் கொடுக்க வேண்டாம் !” ஜார்ஜ் பெர்னாட் ஷா (மேஜர் பார்பரா) மேஜர் பார்பரா நாடகத்தைப் பற்றி : […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் திரிஃபீல்ட் தம்பதியர் என்மேல் ஏன் இத்தனை பரிவு பாராட்டினார்கள் என்பதே புரியாப் புதிராய் இருந்தது. இயல்பான இதயத்தின் கனிவே அது. வேறு விளக்கம் இல்லை. சகஜமாய்ப் பேசாத சங்கோஜிதான் நான். என்மேல் டெட் திரிஃபீல்ட் ஆர்வப்பட்டார் என்றால் நானே அறியாத ஏதோ ஒன்றுதான் அதன் காரணமாக இருக்க முடியும். ஒருவேளை எனது கழுத்து உயர்த்திய கர்வத்தினால் அவர் கவரப்பட்டிருக்கலாம். ஒரு மிஸ் உல்ஃபின் கோர்ட் குமாஸ்தாவின் மகனையிட்டு எனக்கு ஒரு மட்டமான அபிப்ராயம் […]
அன்னமும் ஆந்தையும் ”ஒரு காட்டில் பெரிய ஏரி ஒன்றிருந்தது. அங்கே மதரக்தன் என்கிற அன்னப்பறவை ஒன்று இருந்தது. அது பலவிதமாய் விளையாடி ஆனந்தமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தது. இப்படி வெகு காலம் சென்றபிறகு, ஒருநாள் அதற்கு யமனாக ஒரு ஆந்தை அங்கு வந்து சேர்ந்தது. அதைப் பார்த்த அன்னம், ”எங்கிருந்து வருகிறாய் நீ? இது ஜன சஞ்சாரமில்லாத காடாயிற்றே!” என்று கேட்டது. அதற்கு ஆந்தை; ‘உன் குணங்களைக் கேட்டுத்தான் இங்கு வந்தேன். நான் நற்குணத்தைத் தேடி உலகம் […]
“தமிழு….தமிழு…” – பொழுது விடிந்தும் விடியாத வேளையில் படுக்கையில் இருந்தமேனிக்கே குரல் கொடுத்தான் மாரிச்சாமி. வாசலில் ‘சளப்…சளப்’ – எனத் தண்ணீர் தெளிக்கும் சத்தம். “ஏண்டா அதுக்குள்ளாறயும் தமிழு…தமிழுங்குறே…? ஒந்தங்கச்சி விடியங்காட்டி எப்டி வந்து உம்முன்னாடி நிக்கும்? சூரியன் உதிச்சு வெயிலு போட வேணாமா?” ராமுத்தாயி மகனுக்குப் பதில் சொல்லிக் கொண்டே வாசலைப் பெருக்க ஆரம்பித்தாள். மாரிக்கு அப்படிப் பதில் சொல்லி விட்டாளே தவிர அவள் மனதிலும் ஒரு கலக்கமிருக்கத்தான் செய்தது. அப்படியான ஒரு சஞ்சலத்தோடுதான் மகனையும் […]
காற்றில் மிதந்து வருகிற மாதிரி பரவச நிலையில் வந்துகொண்டிருந்த கவிஞரை அவர்கள் எதிர்கொண்டனர். விடியிருளில் நிழலுருவாய்த்தான் அவரது வடிவம் புலப்பட்டது. ஆனால் அவரது நடை, உடை, பாவனைகள் வருவது அவர்களுடைய கவிஞர்தான் என்பத்தை வெகு எளிதாய்ப் புலப்படுத்திவிட்டது கவிஞர் அருகில் வந்த பிறகு அவரது நிறம் மங்கிய கறுப்பு அல்பாகா கோட்டில் எல்லாம் மணல் படர்ந்து கிடப்பதும் தலையில் குலைந்துபோன பாகையிலும் திட்டுத் திட்டாக மணல் அப்பி யிருப்பதும் தெளிவாகவே தென்பட்டது. “என்ன பாரதி இது, நாங்களானால் […]
அது ஒரு நூறு அடுக்கு மாடிக் கட்டிடம். அந்த நகரத்தில் மட்டுமல்லாமல், அந்த நாட்டிலேயே அது தான் உயர்ந்த கட்டிடம். கட்டிடக் கலைக்கே பெருமையும் புகழும் தேடித் தரத்தக்க அவ்வளவு அழகான கட்டிடம்! வந்தவரைப் பிரமிக்க வைக்கும் வரவேற்பு அறை! வழவழக்கும் மொஸைய்க் தரை! வடிவழகு மிளிர தலைக்கு மேல் ஆறடி உயரத்திலிருக்கும் விதானம். அறைக்கு அறை அழகாகப் பொருத்தப்பட்டிருக்கும் வாயிற் கதவுகள்! சுவரே தெரியாமல் அதன் மேல் பதிக்கப் பெற்று, சுத்தமாக ‘வார்னிஷ்’ செய்யப்பட்டுப் பளபளத்துக் […]