மலர்த் தோட்டத்தினுள் அந்த மலர்ப் பதுமை மெதுவாக நடந்தாள்! குவளையும் முல்லையும்! கனகாம்பரமும் செண்பகமும்! செவ்வந்தியும் செங்காந்தளும்! நீலோத்பலமும் நாகலிங்கமும்! சம்பங்கியும் ரோஜாவும்! எத்தனை மலர்கள்! தோட்டத்திலுள்ள மலர்களைச் சொல்லவில்லை! இவ்வளவும் வனப்புமிக்க அவள் பொன்னுடலில் பூத்திருக்கின்றன! தன் மேனியில் இத்தனை மலர்கள் பூத்திருக்க அவளுக்கு இன்னும் ஆசையைப் பாருங்கள்! மங்களகரமான மஞ்சள் நிறங்காட்டும் சூரிய காந்தியைப் பறித்துக் கொண்டு, “நீ என் முகத்திற்கு இணைதானோ?” என்று கிண்கிணிக் குரலில் கேள்வி எழுப்ப, “இணையெப்படி யாகும் இனியவளே!” […]
(ரெ.கார்த்திகேசு) இருபது மாணவர்கள் சளசளவென்று பேசிக்கொண்டிருந்தார்கள். பேராசிரியர் வேன்டன்பர்க் வழக்கமாக தாமதமாக வருபவர்தான். ஆனால் பத்து நிமிடத்துக்கு மேல் தாமதமாகாது. பதினைந்து நிமிடம் வரை பேராசிரியர் வரவில்லையென்றால் மாணவர்கள் கலைந்து செல்லலாம் என்ற விதி உண்டு. இருந்தும் மாணவர்கள் காத்திருந்ததன் காரணம் வேன்டன்பர்கின் வகுப்பு சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும். அதை எதிர்பார்த்துத்தான்…! அமெரிக்காவின் மிசௌரி பல்கலைக் கழகத்தில் பரவெளி ஆய்வு மையத்தின் ஆய்வுக் கூடத்தில் காத்திருந்த மாணவர்கள் இருபது பேரும் பரவெளிக் கோள்களில் கனிம வளங்கள் பற்றி […]
”எப்பப் பார்த்தாலும் வாங்கின சம்பளம் பூரா ஏதாவது செலவு பண்ணிடுறே. போன மாசம் 4 செட் ட்ரெஸ், மூணாம் மாசம் காஸ்ட்லி கெடிகாரம்., இந்த மாசம் ஷூ., எப்பத்தான் சேமிப்பே.. பாங்க் அக்கவுண்ட்ல ஒரு சேவிங்ஸும் இல்லை. ” ”சம்பளம் இன்னும் அதிகம் வரட்டும்மா.. எப்பப்பாரு டெபாசிட் போடு அப்பிடிங்கிறீங்க. அப்புறம் எப்பத்தான் லைஃபை என்ஜாய் செய்றது”. மகன் வேலைக்கு சேர்ந்து முணு மாதமாக வீட்டில் நடக்கும் வாக்குவாதம்தான் இதெல்லாம். சொல்லிப் பிரயோஜனமில்லை என பால்கனிக்கு காற்று […]
துளி சத்தம் இன்றி அதை வைத்து விட்டுப் ப+னை போல் நழுவினான் அவன். எந்தப் ப+னைக்கு பயந்து ‘ஒரு சத்தம் கொடுப்பா’ என்று அக்கறையாக நான் சொல்லியிருந்தேனோ அதைப் பொருட்படுத்தாமல் அவனே ப+னைபோல் பதுங்கினால்? தற்செயலாக நான் எழுந்துவர அடர்ந்து தலை கவிழ்ந்து நிழலாய்க் கவிழ்ந்திருந்த வாசல் மரத்தின் கிழே தலையைப் பதவாகமாய்க் குனிந்து சைக்கிளை மிக மென்மையாக மிதித்து நகர்ந்தான். “Nஉற…Nஉற…பார்த்தியா…பார்த்தியா…சொல்லாமப் போறான் பாரு…எவ்வளவு சைலன்ட்டா நழுவுறாம்பாரு…” அது அவன் காதில் நிச்சயம் விழுந்திருக்காது. அவன்தான் […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா எம்மைத் தவிர மற்ற எல்லோரையும் ஏழையாய் ஆக்குகின்றீர். நீங்கள் யாவரும் வறுமைக்கு அடிமை ! ஏழ்மையே உமது இறைவன், மதம் எல்லாம் ! உமது கண்முன் ஏழை, எளியவர், எல்லாம் இழந்தவர் உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி உயிரிழப்பதை எப்படி நியாயப் படுத்துவாய் ! நமக்கு ஏழ்மை ஒழிய வேண்டுமா ? அல்லது சீரும், செல்வச் செழிப்பும் நிறைய வேண்டுமா […]
தமிழில் எஸ். சங்கரநாராயணன் பளபள மஞ்சள் ரோல்ஸ் ராய்ஸ் காரில் நாங்கள் போனோம். பிளாக்ஸ்டேபிளில் இருந்து ஃபெர்ன் கோர்ட் மூணு மைல் தொலைவு. சாந்துக்கலவை பூச்சு வீடு. ஒரு 1840 வாக்கில் கட்டப்பட்டிருக்கலாம். அலட்டல் இல்லாத அறையறையாய்ப் பிரித்த எளிய வீடு. நல்ல விஸ்திரணம். காம்பவுண்டில் ரெட்டைக் கதவு. அரைச்சந்திர வில்வளைத்த வாசல் நிலை. இதேபோல முதல்மாடியிலும் இதே வில்நிலைப்படி. தணிந்த கூரையை வெளிச்சுவர் மறைத்தது. ஒரு ஏக்ரா அளவு தோட்ட நடுவில் வீடு. நெரிசலாய் […]
நன்றி கெட்ட மனிதன் ஒரு ஊரில் யக்ஞதத்தன் என்றொரு பிராமணன் இருந்தான். அவனது குடும்பத்தைத் தரித்திரம் பிடுங்கித் தின்றது. ஒவ்வொரு நாளும் அவன் மனைவி அவனைப் பார்த்து, ”ஓய், பிராமணா! சோம்பேறி! கல்நெஞ்சனே! குழந்தைகள் பசியால் துடிக்கிறது. உன் கண்ணில் படவில்லையா? எப்படி நிம்மதியோடு இருக்க முடிகிறது உனக்கு? காடு மேடு எங்காவது போய்ச் சாத்தியமானதைச் செய்து சோறு கிடைக்க வழி பார்க்கிறதுதானே!” என்று சொல்லிக்கொண்டே இருப்பாள். தினசரி இதே பல்லவியைக் கேட்டுகேட்டுச் சலித்துப்போன அந்தப் […]
அது அஸ்தினாபுரத்தை நோக்கிச் செல்லும் இராஜபாட்டை. நாலு கால் பாய்ச்சலில் ஒரு குதிரை வாயு வேகமாகச் சென்றுகொண்டிருந்தது. ‘டக்டக்’ என்று அதன் குளம்படிச் சத்தம் ஏதோ ஒரு வேக கதியில் இன்னிசை எழுப்பிக்கொண்டிருந்தது. திடீரென்று குதிரையின் வேகம் தடைபட்டது. ஓடிய வேகத்தில் கொஞ்ச தூரம் மெதுவாகச் சென்ற குதிரையை அதன்மேல் அமர்ந்திருந்த வீரன், கடிவாளத்தை இழுத்துப் பிடித்து நிறுத்தி, வந்த வழியில் திரும்பி, குதிரையைக் சிறிது தூரம் நடத்தினான். அதோ! அங்கே கிடப்பது யார்? அவனுக்கு என்ன […]
காக்கைகள் எப்பொழுதும் அவன் தலையைத்தான் குறி வைத்தன. அவன் பகல் வேளையில் வெளியே வந்தால் போதும். தெருவின் கரண்ட் கம்பிகள், தொலைபேசிக் கம்பிகளில், வேலியோரப் பூவரச மரங்களில், வீட்டுக் கூரைகளில், மீன் வாடியிலெனக் காத்திருக்கும் காக்கைகள் அல்லது ஒற்றைக் காக்கையேனும் அவனது தலையைக் குறி வைத்துப் பறந்து வந்து கொத்திவிட்டுச் செல்லும். ஒரு முறை கொத்திவிட்டுப் போன காக்கை, திரும்ப அவன் வெளியில் அலைந்து வீடு திரும்பும் வரை கொத்துவதுமில்லை, துரத்துவதுமில்லை. அவன் வீட்டுக்குத் திரும்பி, […]
சித்தநாத பூபதி ஒன்று மட்டும் நிச்சயம். நாம் கொஞ்சம் நெகிழ்வாக இருந்து விட்டால் ஒரு நாள் இல்லாவிட்டால் ஒருநாள் இத்தகைய சூழ்நிலையச் சந்தித்துத்தான் ஆகவேண்டும் . மற்றவர்களுக்கு வரும் துன்பம் நமக்கு வரும்போது அது வெறும் தகவல் இல்லை. எனக்கு அப்படி ஒரு துன்பம் வந்தபோது துன்பமாகத்தான் இருந்த்து. அதைத் தனக்கு வந்த துன்பமாகவே கருதிய நண்பர் உங்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டால் பரவாயில்லை. எனக்காக வாருங்கள் என்று வழக்கமான மனைவி செண்டிமெண்ட்டைப் பிடித்துக் கொண்டு […]