சொல்ல வல்லாயோ….

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) சொல்சொல்லாய் உள்ளிறங்குகிறது……. சில நீர்த்துளிகளாய், சில தீக்கங்குகளாய், சில பூஞ்சிறகுகளாய், சில பெரும்பாறைகளாய், சில பூங்காற்றின் சிலுசிலுப்புத் தூவல்களாய், சில பேய்க்காற்றின் கொலைவாள் சீவல்களாய், சில இன்சொப்பனங்களாய், சில கொடுங்கனாக்களாய்…… சிலவற்றில் நாம் சொஸ்தமாகிறோம் சிலவற்றில் பஸ்பமாகிறோம்…

இரங்கற்பா

கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) அறுநூறு பக்க மொழிபெயர்ப்பில் ஆறேழு குறையை தன் முதுகைப் பார்த்தறியா எள்ளலும் காழ்ப்பும் மனம் நிரம்பி வழிய அதற்கென்றே தயாரிக்கப்பட்ட பூதக்கண்ணாடியும், மடிக்கணினி ஃபைண்டருமாய் அடிக்கோடிட்டுக் காட்டி அத்தனை உழைப்பையும் ’அள்ளித்தெளித்த கோலமா’க்கிவிடலாம்.  சில சக…

உள்ளது இல்லாதபடியான அச்சுப்பிரதி

_ ’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) Matt இல்லை Gloss என்பதாலோ என்னவோ முகப்பு அட்டையிலுள்ள அவருடைய முகத்தில் அறிவு தகதகத்துக்கொண்டிருக்கிறது _ அவராலேயே ஏற்றுக்கொள்ளமுடியாத அளவு. வெறுப்பின் இருள் எப்போதும் மண்டியிருக்கும்  அவருடைய விழிகளில்தான் எத்தனை பரிவும் நேயமும் Photoshop finishing…

குரலற்றவர்களின் குரல்களாகிறவர்கள்

‘ரிஷி ’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதை குரலற்றவர்களின் குரலாக இருப்பதான பாவனையில் அவர்கள் நம் குரலாகிறார்கள்; ஊமையாக நாம் இருக்கவேண்டுமென்று விரும்புகிறார்கள் அவர்கள் நம்மை வாயடைத்துப்போகச் செய்கிறார்கள் அவ்விதமாய் நம்மை அவர்களின் ஊதுகுழல்களாகிவிடுகிறார்கள். அவர்கள் வா என்கிறார்கள்; நாம் வருகிறோம்; போ என்கிறார்கள்.…

பொருள்பெயர்த்தல்

நல்லதோர் நாலுவரிக்கவிதையென்றார் ஒருவர். கேட்டு நாலுவரியே கவிதையென்று சொல்லாமல் சொல்வதாய் நாலுவரிகளாக கூட்டிப்போட்டு எழுதிக்கொண்டே போனார் ஒருவர். நாலுவரிகள் வரைந்து நவீனசித்திரக்கவிதையென்றார் ஒருவர். சொத்துவரி, வருமானவரி என்று இன்னுமிரண்டை சேர்த்தெழுதிக்கொண்டிருந்தார் ஒருவர். இன்னொருவர் ‘நாலு வரி’ என்றெழுதி பூர்த்திசெய்தார் கவிதையை.

குறியீட்டளவிலான சித்திரக்குள்ளர்கள்

அடிமுடி மண் விண் என்றிருக்கும் ஆகிருதியைப் பெற்றிருக்கும் நல்லவரை வல்லவரை வெல்லத் துடிக்கும் குறியீட்டளவிலான சித்திரக்குள்ளனை அசலோ அசல் அல்லது ‘ஸர்ரியலிஸ’ ’மாஜிகல் ரியலிஸ’ வீரபராக்கிரமசாலியாக ஆளாளுக்கு உருவேற்றிக்கொண்டிருந்தார்கள் ஆயிரம் hidden agendaக்களோடு அவரிவர். கேட்டுக் கேட்டுத் தன்னை யதுவாகவே நம்பத்தொடங்கிவிட்ட…

தீர்ப்பும் விசாரணையும்

“அது அராஜகச் சட்டம்” ”அப்படியல்ல. வாருங்கள், சற்று அகல்விரிவாகப் பேசுவோம்” ”பகலிரவாய் அதைப்பற்றிப் பேச நான் என்ன உன்னைப் போல் வேலையில்லாத உதவாக்கரையா? அரைகுறை அறிவைக் கொண்டு என்னிடம் கட்டம்கட்டி விளையாடப் பார்க்கவேண்டாம்.  ஆயிரம் சொன்னாலும் அது தோல்வியடைந்த திட்டம்தான்” ”அப்படியல்ல…
உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை

உயிருள்ள கெட்ட ஆவியொன்று என்னுள் கூடுவிட்டுக் கூடு பாய்ந்ததில் உருவான கவிதை

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) கவிதையா ?கட்டாயம் நான் திறனாய்வு செய்தாக வேண்டும். இப்போதே. கதையா? அதே யதே – சபாபதே. கட்டுரையா? என்னை விட்டால் யாருண்டிங்கே மதிப்புரை யெழுத ? பதவுரை பத்திகளிலில்லாமல் குறைந்தபட்சம் ஏ4 அளவிலான மொத்தம் 500 போல்…
அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..?

அம்மாவுக்கு எப்படி நன்றிசொல்வது…..?

லதா ராமகிருஷ்ணன் ’அன்னையர் தினம்’ அங்கங்கே கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது அலங்கார விளக்குகள் தொங்கும் அதி யகன்ற அரங்குகளில். அதனால் என்ன? அம்மாவும் சரி அன்பும் சரி முகடுக்கும் அடிவாரத்திற்கும் இடையேயான அதலபாதாளத்தை வென்றுவிட்டது தெரிந்தது தானே! கைத்தட்டலுக்காக மட்டுமே எழுதாதவரை எந்தக் கவிதையும்…
தொடுவானம்

தொடுவானம்

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ’ஒரேயொரு வார்த்தையை மட்டும்  துணைக்கு அழைத்துக்கொண்டுபோகலாம்; ஒரு நிமிடத்திற்குள் அந்தச் சொல்லைத்  தெரிவுசெய்து தெரியப்படுத்திவிட வேண்டும்’  என்ற நிபந்தனையோடு _ அந்தரவெளியிலிருந்த தீவு ஒன்றிற்கான  இலவசப் பயணச்சீட்டு் ஒன்று  அலைபேசிவழியே நீட்டப்பட்டது. எவரிடமும் கேட்கவில்லை; எந்தப் போட்டியிலும்…