1927 ஃபெப்ருவரி 27 அக்ஷய மாசி 15 ஞாயிறு பிரம்மாண்டமான பறவை சாவகாசமாக ஜலப் பிரவாகத்தில் மிதந்து கொண்டு அசைந்து ஆடுகிறதுபோல் அந்தக் கப்பல் நின்றது. புத்தம் புதுசு. கம்பமும், படியும், கொடியும், உருளைக் கம்பிகளும், இரும்புச் சங்கிலிகளும் பளபள என்று புதுக்கருக்கோடு சூரிய வெளிச்சத்தில் ஜ்வலித்தன. இவ்வளவு நீளமும் அகலமும் விஸ்தீரணமும் கொண்ட கப்பலை நான் என் ஆயுசுக்கும் பார்த்ததில்லை. தோணியிலோ கட்டு மரத்திலோ ஏறி நின்றபடிக்கு இந்த சுந்தர ஸ்வரூபமான சமுத்திர வாகனத்தை நாலு […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா ஏழ்மைக்கும், வறுமைக்கும் ஆழ்ந்து கவனம் செலுத்துபவன் நான். உனது ஆன்மீகவாதிகள்தான் வறுமைக்கும் ஏழ்மைக்கும் கவலைப் படாதவர் ! அவற்றைப் போக்கக் கையில் பணமில்லாவர் ! எந்த வழி முறையும் தெரியாதவர் ! நான் வறுமையில் ஏழையாய் வாடுவதற்குப் பதிலாகத் திருடனாக மாற விரும்புகிறேன் ! பிச்சைக்காரனாய் யாசிப்பதற்குப் பதிலாக வெடி மருந்துக் கொலைகாரனாக ஆக விழைகிறேன் ! . […]
தமிழில் சிறகு இரவிச்சந்திரன் ஜெரமியால் நம்பவே முடியவில்லை. அவனுக்கெதிரே அரபெல்லா உட்கார்ந்திருந்தாள். அவன் கல்யாணம் செய்து கொள்ளப் போகிற பெண். ·பியான்சி! அவர்கள் ரிட்ஸ் ஓட்டலில் உட்கார்ந்திருந்தார்கள். சுற்றி இருந்தவர்களெல்லாம், அவளைப் பார்த்தும், கையசைத்தும், பறக்கும் முத்தங்களை தந்தும் கொண்டிருந்தார்கள். அவள் சொன்னது போல இது அவளுடைய ‘ செட் ‘. அவள் அடிக்கடி இங்கே வந்து பழக்கப்பட்டவளாக இருந்தாள். வழக்கமாக வருபவர்களுக்கு அவளை நன்றாகத் தெரிந்திருந்தது. ஜெரமி அவளை முதலில் ஆஸ்காட் குதிரைப் பந்தய மைதானத்தில் […]
தனுஷ், சுருதிஹாசன், சுந்தர் இவர்கள்தான் அந்த 3. கதைப்படி ராம், ஜனனி, செந்தில். முதலில் படத்தைப் பற்றிய நல்ல விசயங்களை, அவை கொஞ்சம் தான் எனினும் சொல்லிவிடுகிறேன். இப்போதைய படங்களில், பழைய காலம் போல் எந்தப் பின்கதையும் இல்லாத பாத்திரங்கள். இதிலும் அதே அதே. தனுஷ், சுருதி, சுந்தர் – மூவரின் பண்பட்ட நடிப்பு. அப்பழுக்கில்லாத கேமரா கோணங்கள். நல்ல இசை, பாடல்கள். ரசூல் பூக்குட்டியின் ஒலிப்பதிவு. இவ்வளவு இருக்கிறதே, போதாதா என்று நீங்கள் கேட்பது, கேட்கிறது. […]
பாரதி கண்ட கனவுகளை நாம் சில்லறை வர்த்தகத்தில் விற்றுக் கொண்டோ அல்லது வாங்கிக் கொண்டோ தான் இருக்கிறோம். பாரதி கேட்ட பெண் விடுதலை பெண்களே சுயமுயற்சியில் பெற்றுக் கொண்டார்கள் கல்வியின் வெளிச்சத்தினால் !! ஆண்களோ முதுகெலுப்பை கழற்றி அரசியல் வாதிகளிடம் கொடுத்துவிட்டு சொந்ததில் விலங்கு அணிந்துக் கொண்டு சுதந்திரம் ,மகிழ்ச்சி என தாந்தானா பாடிக் கொண்டு இருக்கிறார்கள் . அஞ்சி அஞ்சி சாவார் இவர் அஞ்சாத பொருள் இல்லை அவனியில் முளை சோம்பலில் திளைத்து சூம்பி […]
(1) காட்டுக்குள் காலடி வைப்பேன். காடு நகைக்கும். ’ஒரு மிருகமோ நான்’ என்று ஒரு சந்தேகம் எனக்கு. காடு மறுபடியும் நகைக்கும். ”ஒரு மிருகமில்லையோ நான்” என்று மறு சந்தேகம் எனக்கு. இரண்டுமே நானோ? இன்னும் தீராது சந்தேகம் எனக்கு. காடு தொடர்ந்து நகைக்கும். காட்டுக்குத் தெரியுமோ? (2) ஏறி இறங்கி இறங்கி ஏறி அடுக்கு மலை தாலாட்டும். அடர்ந்த காடு துயில் கொள்ளும் அமைதியில். (3) அடர்ந்த காடு. பறவை ஒலிக்கும். காட்டின் அமைதி ஆழமாகும். […]
“தார் ரோட்டில் வார் அறுந்து தன்னை உணர்த்தியது செருப்பு..! ” —————————————————- மலர்போல் தான் சருகாகும்வரை மனித வாழ்வும்..! —————————————————– “இதோ..சென்றுவிட்டேன்.. சொல்கிறது நிமிடமுள்..! ” ————————————————— “நன்மைகள்… உயர்ந்திட ஊருக்குள் கோபுரங்கள் ..!” ———————————————————— “ஆபத்து….எனக்கு…. பரீட்சை வைத்தேன் நண்பனுக்கு..! ” —————————————————————- கடற்கரையில் தாகத்தோடு காதலர்கள்..! —————————————————————. இடியும்..மின்னலும்.. கோள்சொல்லியது – மேகம்..!” —————————————— “திருடர்களின் ஒளிவிளக்கு இரவு..! ‘ ——————————————– விரிந்த வானம் விஷமமாய் சிரிக்குது விரிசல் பூமி..!!” ———————————————— புத்தம் புதிய […]
எழில் இனப் பெருக்கம் ++++++++++++++++++++++++ உனக்கோர் மகன் வேண்டும் ++++++++++++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609 ஆம் ஆண்டிலே ஷேக்ஸ்பியரின் இலக்கிய மேன்மை அவரது நாடகங்கள் அரங்கேறிய குலோப் தியேட்டர் (Globe Theatre) மூலம் தெளிவாகி விட்டது. அந்த ஆண்டில்தான் அவரது ஈரேழ்வரிப் பாக்கள் தொகுப்பும் முதன்முதலில் வெளியிடப் பட்டது. ஷேக்ஸ்பியரின் ஈரேழ்வரிப் […]
ஒரு ஊரில் சாகரதத்தன் என்றாரு வியாபாரி இருந்தான். அவனுடைய மகன் ஒருசமயம் நூறு ரூபாய் கொடுத்து ஒரு புத்தகத்தை வாங்கினான். அதில் ‘’விதிப்படி உரிய பொருளை ஒருவன் அடைந்தே தீருவான்’’ என்று ஒரு வாக்கியம் காணப்பட்டது. அதை சாகரதத்தான் பார்த்துவிட்டு, ‘’மகனே, இந்தப் புத்தகத்தை என்ன விலைக்கு வாங்கினாய்?’’ என்று மகனைக் கேட்டான். ‘’நூறு ரூபாய் தந்தேன்’’ என்றான் மகன். ‘’சீ, மடையா! இந்த ஒரு அடிச்செய்யுள் மட்டுமே உள்ள இந்தப் புத்தகத்துக்கா நூறு ரூபாய் கொடுத்தாய்? […]
புதுமை பித்தன்,தமிழ் எழுத்தாளர், வறுமையில் இறந்தார். மகாகவி பாரதி , வறுமையில் இறந்தார். இன்றும், பல தமிழ் எழுத்தாளர்கள் , வறுமையில் வாடி வதங்கினாலும், எழுத்துடந்தான் வாழ்ந்து வருகின்றனர். ஆனால், சில பிழைக்க தெரிந்த, எழுத்தாளர்கள், அரசியலையும் கலந்து ஒரு, கலப்படமான, வாழ்க்கை வாழ்ந்து, பணமூட்டையுடனும், புகழுடனும் வாழ்கின்றனர். மற்றும் சில எழுத்தாளர்கள், சினிமாவை நோக்கி நகர்ந்தும், பணத்தை தேடுகின்றனர். ஆனால், இவர்கள் யாரும், தன், இறப்பிற்கு பிறகு, சமூகத்திற்கு அவர்களது படைப்புக்களைத்தான் விட்டு செல்வார்கள். […]