தொடுவானம் 65. முதல் நாள்

This entry is part 8 of 26 in the series 26 ஏப்ரல் 2015

மருத்துவக் கல்லூரி வகுப்பின் முதல் நாள். காலையிலேயே மிகுந்த உற்சாகத்துடன் புறப்பட்டேன். விடுதி உணவகத்தில் புது மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து பசியாறினோம். அங்கு ஓரளவு அறிமுகம் செய்துகொண்டோம். இனி பார்வையாளர்களின் கண்காணிப்பு இல்லை. ஆனால் சீனியர் மாணவர்கள் எங்களைக் கவனித்தவண்ணமிருந்தனர். இனி வகுப்புகள் முடிந்து மாலையில்தான் ரேகிங் தொடரும்.அதுவரை கவலையில்லை. முதல் நாள் என்பதால் நாங்கள் ஒருவரைப்பற்றி ஒருவர் அதிகம் தெரிந்துகொள்ள முடியவில்லை. அதில் அவசரம் தேவையில்லை. இனி ஆறரை வருடங்கள் ஒன்றாகத்தானே பயணிக்கப்போகிறோம். பெயர்களை மட்டும் […]

சாந்தா தத்தின் “வாழ்க்கைக் காடு” ஒரு பார்வை

This entry is part 12 of 26 in the series 26 ஏப்ரல் 2015

புலம்பெயர் வாழ்வின் இருப்பையும் இருப்பின்மையையும் ஈழத்து எழுத்தாளர்கள் வலிமையுடன் பதிவு செய்திருப்பார்கள். நம் தேசத்தில் இருக்கும் ஒரு மாநிலத்தில் பிரிவு ஏற்படும்போது வர்க்கபேதம் ஜாதிபேதமின்றி மக்களுக்குள்ளே ஏற்படும் பிரிவையும் வேறுவழியின்றி யதார்த்தத்தை ஏற்றுக் கொள்ளும் வலியையும் அப்படியே தன்னுடைய எழுத்துக்களில் பதிவு செய்திருக்கிறார் எழுத்தாளர் சாந்தாதத் தன்னுடைய வாழ்க்கைக்காடு என்ற சிறுகதைத் தொகுப்பில் 35 ஆண்டுகள் ஆந்திராவிலேயே வசித்து வருவதால் ஆந்திரா தெலுங்கானா பிரிவினை பற்றியும் அதன் பின்னான வாழ்க்கை பற்றியும் கதைகளில் கூறியுள்ளார். ஐந்து மொழிகளில் […]

ஞானக்கூத்தன் கவிதைகள் “கடற்கரையில் சில மரங்கள்” தொகுப்பை முன் வைத்து…

This entry is part 13 of 26 in the series 26 ஏப்ரல் 2015

இச்சிறு தொகுப்பில் 27 கவிதைகள் உள்ளன. 1960 களில் எழுதப்பட்ட கவிதைகளும் இதில் உள்ளன. கருப்பொருள் தேர்வு செய்வதில் வித்தியாசமான தனித்தன்மை காணப்படுகிறது. ” மூலைகள் ” தத்துவ நோக்கு கொண்டது. ” மூலை ” என்ற சொல் ” உரிய இடம் ” என்ற பொருளில் கையாளப்படுகிறது. கவிதை மிகவும் எளிமையாக இருக்கிறது. பூமியிலிருந்து சூரியன் வரைக்கும் அடுக்கிக் கொண்டு போகலாம் உலகில் உள்ள மூலைகளை எல்லாம் கணக்கெடுத்தால் இருந்தாலும் மூலை சமமாகக் கிடைப்பது கிடையாது […]

முக்காடு

This entry is part 14 of 26 in the series 26 ஏப்ரல் 2015

உள்ளும் புறமும் எனக்குள் தீபிடித்துக்கொண்டது. அமைதியாக வந்துபோன எனக்குள் ஏன் இத்துணைத் தவிப்பு. இந்த வயசிலும் இப்படியா? இதுக்கு வயது வேறு இருக்கிறதா? எல்லாம் ஏமாற்றுவேலை. அனுபவத்திற்கு ஆளாகும்போதுதானே எல்லாம் வெளிச்சமாகிறது. வயசுக்கு இங்கு என்ன வேலை? பார்த்ததும் தவிர்க்கவோ, செய்யும் பணியில் கவனத்தைக்கூட்டவோ ஏன் என்னால் முடியவில்லை? அதன் கவர்ச்சி வலையில் சிக்காதவர்கள் இருக்கமுடியும் என்று நான் நம்பவில்லை. அந்த நம்பிக்கை எனக்கில்லை. சும்மா இருந்த நான் அப்படித்துடிப்பதற்கு எது காரணம்? ஏன் துடிக்கவேண்டும்? மனிதன் […]

சொப்பன வாழ்வில் அமிழ்ந்து

This entry is part 15 of 26 in the series 26 ஏப்ரல் 2015

  இது கனவு சீசன் போலிருக்கிறது. முதலில் கன்னடத்தில் ‘லூசியா’ வந்து சக்கை போடு போட்டது. போதை மாத்திரை தருவிக்கும் மாயா ஜால பிம்பங்களே அதன் முடிச்சு. அதையே தமிழில் “ எனக்குள் ஒருவன்” என பேசியது சித்தார்த் படம். படம் கன்னட வெற்றியைப் பெறவில்லை என்றாலும் பரவாயில்லை என ஓடியது. ஆனால் கணிப்பொறி விளையாட்டுகளை உருவாக்க, அதில் வேலை செய்யும் இளைஞர்கள் / யுவதிகளுக்கு டானிக் மாத்திரை என போதை மாத்திரைகளைக் கொடுத்து தற்கொலை வரை […]

வைரமணிக் கதைகள் – 13 காலம்

This entry is part 16 of 26 in the series 26 ஏப்ரல் 2015

  காலம் மாறுகிறது. மாற வேண்டும். மாறா விட்டால் அது காலமில்லை. இப்படி தவிர சாமு காலத்தைப் பற்றி அதிகம் அலட்டிக் கொண்டதில்லை. அவனுக்கு வயது இருபத்திரண்டு.   அவனுடைய தாத்தா சபாபதி கவுண்டருக்கு எழுபத்தைந்து வயசாகிறது. ஆனாலும் கயிற்றுக் கட்டிலில் கிடந்து இறந்த காலத்தைப் பற்றி அசை போட்டு ஓயாமல் அலப்பும் ஆசாமியல்ல, விவசாயி.   மண் பேசும் பேச்சு எந்த மனுஷப் பேச்சையும் விட அர்த்தமுள்ளது என்று அனுபவப்பட்டவர். கண்ணும் பல்லும் கையும் இன்னும் […]

நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -3

This entry is part 17 of 26 in the series 26 ஏப்ரல் 2015

  கோபமா என்றான் ராகவ் ?   யாழினி பிள்ளையார் கோவிலின் சுவரில் சாய்ந்தபடி மறைவாக நின்றிருந்தாள்.   எதற்கு ?   உன்னிடம் முதலில் தெரிவிக்க வேண்டிய காதலை உங்கப்பாக்கிட்ட சொன்னதுக்கு   ச்சே இல்லை என்றாள்   என்னை பிடிச்சிருக்கா என்றபடி அவளின் கையைப் பற்றினான் ராகவ்   அச்சோ கோயில் இது.  கையை விடுங்க ராகவ் என்றாள் யாழினி   கட்டிக்கப் போறவன் தான யாழ் நான் கையைப் பிடிக்கக் கூடாதா?   […]

இரவீந்திர பாரதியின் “காட்டாளி” – யதார்த்தமான சம்பவங்களின் பின்னல்

This entry is part 19 of 26 in the series 26 ஏப்ரல் 2015

  [       இரவீந்திர பாரதியின் “காட்டாளி” நாவலை முன்வைத்து] நாவல் என்னும் வகைமை சார்ந்த இலக்கியம் பலவிதங்களில் இன்று ஆளப்படுகிறது. மிகப்பெரிய ‘மெகா’ நாவல்களின் காலமாக இது இருந்து வருகிறது. ஒரே ஒரு முடிச்சு வைத்து அதைக் கூறுவதாக இருப்பது சிறுகதை என்றும் பல முடிச்சுகள் கொண்டது நாவல் என்றும் முன்பு கூறினார்கள். இவற்றில் கூட முடிச்சை அவிழ்த்துக் காட்டி அதற்கு ஒரு தீர்வைச் சொல்ல வேண்டும் என்றும், வேண்டாம், வேண்டாம் வாசகனே முடிச்சை அவிழ்த்துப் பார்க்கட்டும் […]

இரு குறுங்கதைகள்

This entry is part 10 of 26 in the series 26 ஏப்ரல் 2015

1.    வௌவால் வீடு பாஸ்கர் அன்று வீடு திரும்ப மிகவும் நேரமாகிவிட்டது. சனசந்தடி மிகுந்த தியாகராயநகர் பிரதான சாலையில் உள்ள வங்கியில் அவன் காசாளன். உஸ்மான் சாலை சனங்களின் நெரிசலில் மூச்சு திணறிக் கொண்டிருக்கும் பண்டிகைக் காலம் அது. சேலைகள் சுடிதார்களோடும், சுடிதார்கள் மிடி டாப்ஸோடும் ஊர்ந்து கொண்டிருக்கும் பகுதியில் ஒரு நகைக்கடை முதல் தளத்தில் அமைந்திருந்தது அந்த வங்கிக் கிளை.  நகைக்கடைக்கு அதில்தான் கணக்கு. லட்சக் கணக்கில் கொண்டு வந்து கொட்டுவார்கள். எண்ணி முடிப்பதற்குள் மேல் […]

ஒரு துளி கடல்

This entry is part 20 of 26 in the series 26 ஏப்ரல் 2015

சேயோன் யாழ்வேந்தன் என் ஆடைகளை அவிழ்க்க விருப்பமில்லை என் ஒப்பனைகள் கலைவதை விரும்பவில்லை என் சுமைகளை இறக்கிட சம்மதமில்லை உண்மையின் ஆழத்தைக் காணும் உத்தேசம் ஏதுமில்லை உண்மை மாபெரும் கடல் போன்றதில்லை அது ஒரு துளி நீர்தான் என்றுனக்குப் புரியும்போது நான் பருகிக்கொள்வேன் seyonyazhvaendhan@gmail.com