எலியனார் அப்தெல்லா டௌமாட்டோ கபிலா qabila (tribe) என்ற வார்த்தை வெறுமே உறவுக் குழுவை மட்டுமே குறிப்பிடுவது அல்ல. அது அந்தஸ்தையும் குறிப்பிடுவது. கபிலி குடும்பங்கள் அரபு மூதாதையர்களான அட்னன் அல்லது கதான் (Adnan or Qahtan,) ஆகியோரிடமிருந்து வழிவழியாக வருகின்றன. காதிரிகள் என்படுபவர்கள் (khadiri) (சுதந்திரமானவர்கள் ஆனால், அப்படிப்பட்ட ஒரு பாரம்பரியத்தை காட்டவியலாதவர்கள்). ஆகவே அத்னன் அல்லது கதான் ஆகியவர்களின் வழித்தோன்றல்களாக வரும் ஜாதிகள் தங்களை காதிரிகளிடமிருந்து தனிப்பட்டவர்களாகவும் மேலானவர்களாகவும் கருதிக் கொள்கின்றனர். காதிரிகள் பெரும்பாலான […]
டாக்டர் ஜி. ஜான்சன் தரங்கம்பாடியில் டேனிஷ் நாட்டவர் வாணிகம் செய்யத்தான் துறைமுகம் தேடி வந்தனர். அப்பகுதி ஆழ்கடலாக இருந்ததால் அவர்களுடைய கப்பல்கள் நங்கூரமிட வசதியாக இருந்ததை அறிந்தனர். அதனால் அவர்கள் தரங்கம்பாடி என்ற மீன் பிடிக்கும் கடலோரப் பகுதியை அப்போது தஞ்சையை ஆண்ட இரகுநாத நாயக்கரிடமிருந்து 1620ஆம் ஆண்டில் விலைக்கு வாங்கினர். அவர்கள் தொடர்ந்து 1845ஆம் வருடம் வரை அங்கிருந்து கடல் வாணிகம் செய்தனர். தங்களுடைய பாதுகாப்புக்காக ” டேன்ஸ்பர்க் ” கோட்டையை கடலோரத்தில் கட்டினர். அங்கு […]
பெலிக்ஸ் மேக்ஸிமஸ் ஆகஸ்ட் 5ம் தேதி புதனன்று காலையில், உதம்பூரிலுள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமின் மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில் இருவரில் ஒருவனை ஜம்மு கஷ்மீர் பாதுகாப்பு படையினர் உயிரோடு பிடித்துள்ளனர். மற்றொருவன் சுட்டு வீழ்த்தப்பட்டான். பயங்கரவாதியை உயிருடன் கைப்பற்றியது, 26/11 மும்பை தாக்குதலில் ஈடுபட்ட அஜ்மல் கசாப் உயிருடன் பிடிபட்டதற்கு பிறகு நிகழும் முதல்-பெரும் நகர்வு என கருதப்படுகிறது. கரும் நீல சட்டையும், பழுப்புநிறக் காற்சட்டையும் அணிந்த அந்த இளைஞனை பார்த்தால் உங்களால் அவனை […]
கோவிந்த் கருப் கிண்டி பொறியியற் கல்லூரியில் ஒரு பொன் காலைப் பொழுது… மிராகிள் அல்லது நல்லிதய சம்பவம் கிண்டி பொறியியற் கல்லூரியில் காலையில் அக்கல்லூரி முன்னாள் மாணவர்கள் மற்றும் அவர் தம் நண்பர்கள் நடையாடுதல் பார்க்கலாம். ஒரு காலத்தில் திரு. அப்துல்கலாம் காலை நடையாடிய பாதைகள். அது போல பல நல் இதயம் சுமந்து பல பாதங்கள் நடந்து கொண்டிருந்த காலை பொழுது… 8 ஆகஸ்ட் 2015, எல்லோராலும் நட்புடன் பழகும் கலகலப்பின் மையப்பகுதியாய் வலம் வரும், […]
என்.துளசி அண்ணாமலை “இராசாத்தி, இங்கே வந்துட்டுப்போ” கூடத்திலிருந்து மாமியார் அழைப்பது கேட்டது. வானொலியில் பழம்பாடல்களைக் கேட்டுக் கொண்டே துணிகளை மடித்துக் கொண்டிருந்த இராசாத்திக்கு வயது ஐம்பதைக் கடந்து விட்டது. அந்த வயதுக்கே வரக்கூடிய முட்டிவலி ஒரு நிமிடம் அவளை நகரவிடவில்லை. ஆனால் அதற்குள் மாமியாரிடமிருந்து இரு அழைப்புகள் வந்து விட்டன. “இதோ வந்துட்டேம்மா” என்று குரல் கொடுத்துக் கொண்டே கூடத்துக்கு வர, சன் தொலைக்காட்சியில் சக்தி விடைபெற்றுக் கொண்டிருந்தாள். அடுத்த நிகழ்ச்சியான திரைப்படத்தைக்காண இராசாத்தியின் கணவர் குமரன் […]
-நாகரத்தினம் கிருஷ்ணா அ. இலக்கிய சொல்லாடல் -5 : ‘சுய சரித்திரம்'(Autobiographie) தமிழில் முதல் சுய சரித்திரம் உ.வே.சா. அவர்களுடையது, மேற்கத்தியர்களோடு ஒப்பிடுகிறபோது காலத்தால் பிந்தங்கியது, தவிர சில அறிஞர் பெருமக்களின் வற்புறுத்தலால் நிகழ்ந்தது என்கிறார்கள். பிரெஞ்சு இலக்கிய உலகில் ஒரு சுய சரித்திரத்தை வெறுமனே, எழுதிய மனிதரின் சொந்த வரலாறாகப் பார்ப்பதில்லை, அவர்களுக்கு அது ஓர் இலக்கிய வகைமை.பிரெஞ்சுத் திறனாய்வு அகராதியில் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தவிர்க்கமுடியாததொரு சொல்லாக உள்ளே நுழைந்துவிட்ட இலக்கிய வினை, ‘சுய […]
வளவ. துரையன் சிறுவயதிலிருந்தே எனக்குக் கிரிக்கெட் மீது கொஞ்சம் பைத்தியமுண்டு. எங்கள் தெருவின் அணியின் தலைவனே நான்தான். பிற்பாடு பெரியவனான பிறகு ஊரில் அணி ஒன்றைத் தொடங்கி வெளியூர்களெல்லாம் சென்று விளையாடிய காலம் ஒன்று உண்டு. எழுபுதுகளில் இலக்கியத்தின் மீது நாட்டம் அதிகமான போதும் கிரிக்கெட் ஆர்வம் குறையவில்லை. ஒருநாள் முழுதும் விளையாடிவிட்டு மாலையில் வேட்டி சட்டையுடன் [ இதுதான் பண்டைய தமிழ்ச் சொற்பொழிவாளர் உடை ] பட்டி மன்றம் பேசப் போயுள்ளேன். இந்த இருவித ஈர்ப்புகளினால் […]
(வள்ளுவர் சொல்லும் காமசூத்திரம் (7) அதிகாரம் 115: அலர் அறிவுறுத்தல்) “நெய்யூற்றி நெருப்பணையுமா” தூற்றுதல் தவிருங்கள் தூற்ற தூற்ற காமம் ஊற்றெனப்பெருகும் இரகசியம் உணருங்கள் இதைக் காதலரே விரும்புவர் ஊர்தூற்றும் எம்காதலும் அப்படித்தான் என் மலர்விழியாளின் அருமை. யாவரும் அறியாத காரணத்தால் எளியவள் என எல்லோரும் எள்ளியதால் எல்லோரும் எண்ணியதால் அவள் எனக்கு எளிதானாள் அவளை அடையாமலேயே அடைந்தநிலை நானடைந்தேன் நான் பெற்றேன் மது அருந்த அருந்த மயக்கம் கூடும் மதுவின்மீது விருப்பம் கூடும் கதலைத்தூற்ற தூற்ற […]
தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com மறுநாள் முழுவதும் அபிஜித்துக்கு மூச்சுவிட முடியாத அளவுக்கு வேலைகள் இருந்தன. ஜப்பான்லிருந்து ஒரு குழு விசிட் பண்ணுவதற்கு வருகிறது. அவர்களை அழைத்துச் சென்று தன்னுடைய பேக்டரியைச் சுற்றிக் காண்பித்து, பிறகு லஞ்ச் கொடுத்து, மீட்டிங் முடிந்த பிறகு மாலையில் அவர்களை கலாச்சார விழாவுக்கு அழைத்துச்சென்று ….. இப்படி ஏகப்பட்ட வேலைகள். முதல் நாள் இரவும் சரியானபடி தூக்கம் இல்லை. காலை முதல் ஓயாத வேலைகள். தலை பாரமாக […]
( 3 ) என்னா நாகு…என்னாச்சு விஷயம்…? – கான்ட்ராக்டர் பிச்சாண்டியின் குரல் கேட்டு அதிர்ந்துதான் போனார் நாகநாதன். கடையின் முன்னால் வந்து இப்படியா எல்லோர் முன்னிலையிலும் பளீர் என்று கேட்பது? விவஸ்தை என்பதெல்லாம் ஏது இந்தாளுக்கு? – நினைத்தவாறே பட்டென்று எழுந்து வந்தார் வெளியே. உள்ளே நுழைய எத்தனித்த ஆளை அப்படியே இடதுபுறமாகத் தள்ளிக்கொண்டு போனார். ஆமை நுழைந்தது போல் இவன் நுழைந்து வைத்தானானால் பிறகு இருக்கும் வியாபாரமும் படுத்துவிடும். வியாபாரம் வேறு. அரசியல் வேறு. […]