கல்விமுறை பல விவாதங்களுக்கும், பொதுக் கருத்து உருவாக முடியாத படி தடங்கல்களுக்கும் பிறகு தி மு க ஆட்சிக் காலத்தில் சமச்சீர் கல்வி என்ற பெயரில் வேறு வேறு சரடுகளாகவும் பிரிந்து செயல்பட்டுக் கொண்டிருந்த கல்வித் திட்டங்களை ஒருங்கே கொண்டு வந்து ஒருமைப் படுத்தும் திட்டமாக முன்வைக்கப் பட்டது. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின்பு சமச்சீர் கல்விக்கு எதிராகவோ, ஆதரவாகவோ எந்தக் கருத்தும் முன்வைக்கப்படாமல், திமுகவின் செயல் திட்டம் என்ற முத்திரை குத்தி பாடப் புத்தகங்கள் வினியோகமும், […]
நரியும் பேரிகையும் ஒரு வட்டாரத்தில் ஒரு நரி இருந்தது. அது பசியால் வாடி தொண்டை வறண்டு போய் இரை தேடியபடி காட்டில் சுற்றித்திரிந்தது. காட்டின் மத்தியில் அரசனின் போர்க்களத்தைப் பார்த்தது. அங்கே நரி ஒரு நிமிஷம் நிற்பதற்குள் பலத்த சத்தம் ஒன்று கேட்டது. அதைக் கேட்டதும் நரிக்கு மனக்கலக்கமும் கவலையும் உண்டாயிற்று. ”ஐயோ, ஆபத்து வந்து விட்டதே! இனி நான் செத்த மாதிரிதான். யார் இப்படிச் சத்தமிடுகிறார்கள்? என்ன மிருகமாயிருக்கக் கூடும்?” என்றது யோசித்தது. இங்குமங்கும் […]
CAKES AND ALE WILLIAM SOMERSET MAUGHAM A NOVEL >> தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 2011 வில்லியம் சாமர்செட் மாம் பாரிசில் 1874ல் பிறந்தார். லண்டனின் மருத்துவராகப் பயின்றுகொண்டிருந்தபோது தமது ஆரம்பகட்ட நாவல்களை அவர் எழுத ஆரம்பித்தார். 1907ல் அவர் ‘சீமாட்டி ஃப்ரிதரிச்’ நாவல் மூலம் புகழ்பெற்றார். 1908ல் ஒரே சமயத்தில் அவரது நான்கு நாடகங்கள் லண்டனில் அடுத்தடுத்து பலமுறை அரங்கேறின. 1926ல் பிரான்சின் ஃபெரத் முனையில் வீடுவாங்கிக் குடியமர்ந்தார். அது அநேக எழுத்தாளர்களின், கலைஞர்களின், […]
அந்தி வெளிச்சம் வருகிறது..! காற்றே வழிவிடு ஆயிரங்கொண்டலோடி வருகிறது… மின்மினிப் ப+தமாய் சூரியன் மறைகிறான் சிவந்த கனல்களால் விண்ணிலே உரசுகிறான்… மேற்கிலே உலை மூட்டுகிறான் மேக கணங்களும் தீப்பிடிக்கின்றன… அந்தி வெளிச்சம் வருகிறது காற்றே வழிவிடு! அவசரமாய் மறைந்து விடப்போகிறது… கதிரவனின் தோல் உரிந்து விட்டதோ? கடலும் படம் எடுக்கிறது ஓசை படாமல் ஒப்பாரி வைக்கிறது… அந்தி வெளிச்சம் வருகிறது… ஆனால் சூரியன் மறைகிறது… சூரியன் மறையும் போதும சுகமான வெளிச்சங்கள்… ஜுமானா ஜுனைட், இலங்கை.
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா மெழுகு வர்த்தி வெளிச்சம் விரிந்து பரவி விரைவாய் என்னை விழுங்கி விட்ட தென்ன ? திரும்பி வா என்னரும் நண்பா ! நாம் காதலிக்கும் வழிமுறைகள் வடிக்கப் பட்டவை அல்ல ! எதுவும் உதவா தெனக்கு அழகத்துவம் தவிர ! என் ஆத்மா உன் ஆத்மா விடம் ஏதோ ஒன்றைக் கேட்ட காலைப் பொழு தொன்று நினைவுக்கு வருகிறது ! நீர் அருந்தினேன் […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “வாழ்க்கை என்பது வெவ்வேறு இணைப்புகள் பல பின்னிய ஒரு சங்கிலிப் பிணைப்பு. துயரம் என்பது தற்காலத்துக்கும், நம்பிக்கை உறுதி ஊட்டும் எதிர்காலத்துக்கும் உள்ள ஓர் பொன்னிணைப்பு.. அது தூங்குவதற்கும் விழிப்பதற்கும் இடைப்பட்ட ஓர் எழுச்சி.” கலில் கிப்ரான் (அன்பு மயமும் சமத்துவமும்) விரிந்த அறிவும் விவேக நியாயமும் வாழ்க்கை அனுபவமும் இல்லாமல் எப்படி என்னை நான் மதிப்பிடு வேன் மனிதரின் ஒரு மந்திரியாய் […]
அரசு என்னமோ, நம்பர் பிளேட்டிற்கு வரைமுறைகள் சட்டம் வைத்திருக்கு… இதோ இந்த சட்ட வல்லுநர் ( கார் கண்ணாடியின் வலது மேலோரம் வக்கீல் குறியீடு ) நம்பர் பிளேட்…. சொல்வது… கீழிருப்பது, பொது ஆஸ்பத்திரியல்ல… சென்னை அப்போலோ நுழைவுதாண்டி உள்ள காஃபி பார் ஓரம் கிடக்கும் ஒரு நோயாளி…. நிர்வாகத் […]
இந்தியாவின் உள்துறை அமைச்சர் வேதனையான முகத்துடன் , ”அன்னா ஹாசாரேவை கைது செய்யும் முடிவு வலிதரக்கூடைய விஷயம்” – என்று தொலைக்காட்சியில் சொன்ன போது தான், இந்திய குடிமகன்கள் பலருக்கு வலி பரவியது ஆரம்பித்தது… அதன் வெளிப்பாடு தான் இன்று இந்தியா எங்கும் திரளும் இந்த ஆதரவு… “பாரத் மாத்தா கி ஜெ…” “இன்குலாப் ஜிந்தாபாத்..” எனும் கோஷங்கள் கிளர்ந்தபடி, சைக்கிள், பைக், கார், வேன் நடை… என்று பாரத தேசிய மணிக்கொடியை கையில் ஏந்தி திரளுகிறதே […]
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பாக ஆண்டுதோறும் இலக்கியப் பரிசுப்போட்டி நடத்தப்படுகின்றது, 2010ஆம் ஆண்டுக்கான இப்போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன, அதன் விவரம் வருமாறு: அமரர் க.சமுத்திரம் நினைவுப் பரிசு ரூ10 ஆயிரம்,விளிம்புநிலை மக்கள் பற்றிய படைப்புக்கு பரிசு பெறுபவர் சோலை சுந்தரபெருமாள், படைப்பு – வெண்மணியிலிருந்து – வாய்மொழி வரலாறு, வெளியீடு – பாரதி புத்தகாலயம். நாவலாசிரியர் கு.சின்னப்ப பாரதியின் பெற்றோர் அமரர் பெருமாயி-குப்பண்ணன் நினைவுப்பரிசு ரூ5000, சிறந்த நாவலுக்கான பரிசு பெறுபவர்டி.செல்வராஜ், நூலின் பெயர்-தோல், வெளியீடு-NCBH புதுமைப்பித்தன் நினைவுப் பரிசு ரூ4000, சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசு பெறுபவர் ச.சுப்பாராவ். நூலின் […]
பேராசிரியர் பெஞ்சமின் லெபோ, பிரான்சு ‘சோளக்கொல்லை பொம்மைக்கு’ச் சாகித்திய அக்காதமி பரிசு – செய்தி கேட்டுச் செவி குளிர்ந்தேன் ; மனத்தில் மகிழ்ச்சிப் பூக்கள். காரணம், அந்நூலின் ஆசிரியர், பேராசிரியர் ம. இலெ.தங்கப்பா அவர்கள் அடியேனின் நண்பர். புதுச்சேரித் தாகூர் கலைக் கல்லூரியில் 1970 -ஆம் ஆண்டு, பணியில் யான் சேர்ந்த போது, அவரும் அங்கே முன்னதாகச் சேர்ந்து இருந்தார். “இவர்தாம் தங்கப்பா…” – என் இனிய நண்பர் பேராசிரியர் அ.பசுபதி (தேவமைந்தன்) அவரை எனக்கு அறிமுகம் செய்த போது […]