இரண்டு இறுதிச் சடங்குகள்

This entry is part 1 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

பெலிக்ஸ் மேக்ஸிமஸ் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனத்தில் வாழத்தகுந்த கிரகம் என்ற தலைப்பில் உரையாற்றுவதற்காக முன்னால் இந்திய ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் சில்லாங்கிற்கு செல்கிறார். சுமார் 5.40 மணியளவில் சில்லாங்கை வந்தடைகிறார். அங்கு அவருக்கு எப்பொழுதும் போல் ராஜ மரியாதை வழங்கப்படுகிறது. சிறிது நேரம் ஓய்வு எடுத்து பின் ‘வாழத்தகுந்த கிரகம்’ என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்த்துகிறார். யாரும் எதிர் பாராத விதமாக ஐந்து நிமிடத்தில் அப்துல் கலாம் அவர்கள் சரிந்து விழுகிறார். வேகமாக விரைந்து, […]

இசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்

This entry is part 2 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

இசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன் இது எண்பதுகளின் தொடக்கத்திலோ அல்லது நடுவிலோ எப்போதோ எழுதப் பட்டது. சரியாகச் சொல்ல இது வெளியான பத்திரிகை இப்போது தேடிக் கிடைத்த பாடில்லை. எந்த அலுவலகத்தில் உட்கார்ந்து எழுதியது, அதற்கு முன்னும் பின்னுமான நினைவிருக்கும் நிகழ்வுகளை வைத்துக் கொண்டு உத்தேசமாக, எண்பதுகளின் இடைவருடங்கல் என்று சொல்ல வேண்டும். எழுதியது ஆங்கிலத்தில். கேட்டது ஒரு ஹிந்தி இதழ். மத்திய அரசின் இதழ். ஆஜ்கல் என்று […]

தொடுவானம் 79. தரங்கம்பாடி – பாடும் அலைகள்.

This entry is part 3 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

டாக்டர் ஜி. ஜான்சன் 79. தரங்கம்பாடி – பாடும் அலைகள். மாயவரம் ( மயிலாடுதுறை ) வந்தடைந்தபோது நன்றாக விடிந்துவிட்டது.பிரயாணப் பையை எடுத்துக்கொண்டு குதிரை வண்டி மூலம் பேருந்து நிலையம் சென்றேன்.கடைத்தெருவில் பசியாறிவிட்டு பொறையார் பேருந்தில் அமர்ந்து கொண்டேன்.மன்னம்பந்தல், ஆக்கூர் வழியாக தரங்கம்பாடி சென்றடைய ஒரு மணி நேரமானது. வழிநெடுக வயல்வெளிகளும் சிறுசிறு கிராமங்களும் காலைப் பனியில் கண்களுக்குக் குளிர்ச்சியான இன்பத்தை தந்தன. பேருந்து நின்ற இடத்தில் தேநீர்க்கடை இருந்தது. அதன் பின்புறம் கடலை நோக்கிச் செல்லும் […]

மிதிலாவிலாஸ்-28

This entry is part 4 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

மிதிலாவிலாஸ்-28 தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com இரவு ஆகி விட்டது. அன்னம்மா கிழவி கொசுவை, எறும்பை வாய்க்கு வந்தபடி ஏசிவிட்டு தூங்கி விட்டாள். மைதிலியின் மனம் வேறு எங்கேயோ இருந்தது. சித்தார்த்தா அருகில் வந்தான். “மம்மி!” என்று அழைத்தான். மைதிலி தலையைத் திருப்பிப் பார்த்தாள். அவன் முழங்காலில் அமர்ந்து கொண்டு கையில் இருந்த காகிதத்தை அவளிடம் காண்பித்தான். “இன்றுடன் நம் பணக் கஷ்டம் தீர்ந்து விட்டது. ரோஷான்லாலுடன் ஒப்பந்தம் ஆகிவிட்டது. சம்பளமும் அதிகம். […]

காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 2

This entry is part 5 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

( 2 ) எடுத்த எடுப்பிலேயே மறுத்தான் பாலன். முடியாதுப்பா…நீங்க சொல்ற ஆளு ஒர்க் க்வாலிட்டி இல்லாத ஒப்பந்ததாரர். கடந்த மூணு வருஷமா அவர் மேல நிறையப் புகார். அதனால் அவருக்கு எந்தக் கான்ட்ராக்டும் வழங்கக் கூடாதுன்னு உத்தரவு… அதிர்ந்து போனார் நாகநாதன். தன் பையன் இத்தனை கரெக்டாகப் பேசுவது குறித்து பிரமித்தார். நீ ஒரு வார்த்தை போட்டு வை உங்க ஆபீசர்கிட்ட…அது போதும்….மத்ததை நான் பார்த்துக்கிறேன்….. இந்த மாதிரியான விஷயங்கள் எதுலயுமே நான் தலையிடுறதில்லப்பா…தயவுசெய்து என்னை […]

கற்பு நிலை

This entry is part 6 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

சேயோன் யாழ்வேந்தன் கற்றறிந்த சான்றோர்கள் யாருமில்லாத சபையொன்றில் ஒரு கட்டத்தில் என்னைக் கட்டங்கட்டி நாக்கில் நரம்பில்லாத சிலர் தாக்குதலைத் தொடுத்தபோது உன் சொல்வன்மை என் உதவிக்கு வருமென்று ஒருபாடு நம்பிக்கையோடு கலங்காது நின்றிருந்தேன் ஆனாலும் நண்பா உன் நாக்கு இறுகிய உதடுகளுக்கு உள்ளே பற்களின் அரணுக்குப் பின்னால் பதுங்கியே இருந்தது அதுகூடப் பரவாயில்லை, அன்று அகம் பேசாத உன் நாக்கு பின்பு புறம் பேசிய செய்தி பிறர் கூறத் தெரிந்துகொண்டேன் நேருக்கு நேர் நின்று நான் கேட்கும்போது […]

விலங்குகள் பற்றிய நினைவுகளோடு குழந்தை மனம் கொண்டவர்களும் பூனார்த்தி – இறையன்புவின் சிறுகதைத் தொகுப்பு

This entry is part 7 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

சுப்ரபாரதிமணியன் இறையன்புவின் மொத்த சிறுகதைகளின் இயல்பை தத்துவதரிசனங்களால் மனிதர்களின் வாழ்க்கையை வளப்படும் செயல்கள் பற்றிய எண்ணங்கள்,விலங்குகள் மீதான கரிசனம், முதியோர்களின் உலகம், காதல் வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையின் கீறல்கள் என்று சிலவற்றை வடிவமைத்துக் கொள்ளலாம். இந்த சட்டகத்தினையே இறையன்புவின் பூனார்த்தி சிறுகதைத் தொகுப்பிலும் காண நேர்ந்தது. எளிமையான கதைகள், செய்திகளைச் சொல்லும் இயல்பில் பூடகத்தன்மை, தீவிரமான அனுபவங்களைச் சொல்கிறபோதும் வெகு இறுக்கமானகதை சொல்லல் பாணியையும் வாக்கிய அமைப்புகளையும் கொண்டிராமல் எளிமையாகவே சொல்லும் இயலபு ஆகியவற்றையே அவரின் சிறப்புத்தன்மை […]

அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்

This entry is part 8 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

வே.ம.அருச்சுணன் – கிள்ளான் இந்த நூற்றாண்டில் மக்கள் அதிகம் உச்சரித்த பெயர் அப்துல் கலாம் ஏழையாப் பிறந்தாலும் உழைப்பால் உயர்ந்து காட்டிய புனித ஆத்மா……….! வெட்டியாய்த் திரியாமல் கனவு காணுங்கள் என்றே போதிமர புத்தனாய் இளைஞர் பட்டாளத்து தளபதியானாய்…….! அக்கினி பூக்களாய்க் கருத்துக் கருவூலங்கள் நாடி நரம்புகளில் பிரளயம் செய்தாய் நாட்டின் தலைமகன் தமிழ் உள்ளங்களின் தவப்புதல்வன் ஆணவம் காணா அறிஞன் மனிதரில் மாமனிதர் மனுக்குலத்தின் பிதாமகன் முத்தானக் கருத்துக்கு மட்டுமே முகம் காட்டும் முகமூடி அணியா […]

வாராது வந்த மாமணி – எங்கள் அப்துல்கலாம்

This entry is part 9 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

அப்துல் கலாம் மறைந்துவிட்டார்.ஆம் நம் கண்கள் பனிக்கின்றன. இந்திய சாதாரண மக்களின் உள்ளம் கவர்ந்த கள்வன். விதிவசத்தால் கால்கள் ஊனமாகி ஆனால் எப்படியும் நடக்கத்தான் வேண்டும் என முயலும் மனிதர்க்குத்தரப்படும் செயற்கைக்காலகள் எடைமிகக்குறைந்து அவனுக்கு அது சுகம் தரவேண்டுமென எண்ணி அதன் பாரம் குறைத்த.குணவான். ஒரு அணு விஞ்ஞ்ானி இந்திய விண்ணியல் செயல்பாடுகள் உலகை பிரமிக்கவைக்க அடித்தளமிட்ட மாமனிதர்களின் திருக்கூட்டத்துத்தலைவன். ராமேசுரம் எனும் குட்டித்தீவில் தீவில் ஒரு அரசாங்கத்து ஆரம்பப்பள்ளியில் தமிழ் வழி பயின்றதால் கூட அக்னிச்சிறகுகள் […]

மாஞ்சா

This entry is part 10 of 25 in the series 2 ஆகஸ்ட் 2015

சத்யானந்தன்   காற்றாடிகள் வெறும் காட்சிப் பொருள் உங்களுக்கு   அதனாலேயே மாஞ்சாக் கயிறு உங்கள் புகார்ப் பட்டியலில் மட்டும்   பட்டம் விடுவதில் வீரமும் போட்டியும் துண்டித்தலும் தனித்து மேற்செல்லுதலும் மாஞ்சாவன்றி சாத்தியமேயில்லை   நீங்களோ என் காத்தாடியின் வெற்றி பற்றி நான் பேசத் துவங்கினாலே மாஞ்சா செய்த​ காயங்கள் பற்றி புலம்பத் துவங்குகிறீர்கள்   வீரத் துக்கும் காற்றாடிக்கும் விளையாட்டுக்கும் மட்டுமல்ல நீங்கள் எனக்கும் அன்னியமே