காலச்சுவடு வணக்கம் வரும் ஞாயிற்றுக்கிழமை (11.11.2011) அன்று மாலை 5:45 மணிக்குச் சென்னை புக் பாயிண்ட் அரங்கில் வைத்து கிரிஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள் நூல் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. தங்கள் வருகையை எதிர்பாக்கிறோம். தங்கள் அனைவரையும் நிகழ்வில் கலந்துகொள்ள வரும்படி அன்புடன் அழைக்கிறோம். பொறுப்பாசிரியர் காலச்சுவடு
அன்பின் ஆசிரியருக்கு, இத்துடன் மலேசிய இலக்கிய வரலாற்றில் முதன்முதலாக நிகழவுள்ள பெண் இலக்கியவாதிகளின் ஆய்வரங்கம் குறித்த நிகழ்வின் அழைப்பிதழை அனுப்பியுள்ளேன். அன்பு கூர்ந்து திண்ணை இணைய தளத்தில் இச்செய்தியை பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அன்புடன் கமலாதேவி அரவிந்தன். ஆய்வரங்கம்
சக்தி சக்திதாசன் எனக்குள்ளே என்னைப் பரப்பி அதற்குள்ளே அதனைத் தேடி எதற்காக இத்தனை ஏக்கம்? விடைகாணா வினாக்களின் முழக்கம் நினவாலே இசைத்திடும் சங்கீதம் கனவோடு கலந்திடும் சிலநேரம் முடிவோடு தொடக்கம் முடியாமல் ப்கலோடு இரவாகத் தெரியாமல் இது என்ன மாற்றம்? இதுதானா சீற்றம் ? தெரியாத ஊருக்கு ஏனோ புரியாத பயணம் புலராத் பொழுதொன்றில் முடியாத கனவு சுகமான சுமைகளை சுமந்திடும் தோள்கள் கனக்கின்ற எடைகளை களைகின்ற மேடை சொல்லொன்று தீட்டிய ஓவியத்தை கண்ணில்லா மனிதனிடம் காட்டிய […]
சாரதா அந்தத் திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன் மனதில் வந்து ஒட்டிக் கொண்டது அந்தத் துக்கம். இதே மனநிலையில்தானே மாலையிலும் இருந்தேன். பின் எப்படி இதை ஒதுக்கிவிட்டு உள்ளே நுழைந்தேன் என்று அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். ஆனாலும் இந்த ஆண்கள் பெரிய சாமர்த்தியசாலிகள். எப்படியாவது மனநிலையை மாற்றி தங்கள் காரியத்தைச் சாதித்துக் கொள்கிறார்கள். சட்டென்று இந்த நினைப்பு வந்தபோது பின்னால் அவனும் வருகிறானா என்று திரும்பிப் பார்த்தாள். படிகளில் இறங்கிக் கொண்டிருந்தான் பாண்டியன். தான் கிளம்பிய […]
1999-ம் வருடம். டிஸம்பர் மாத முதல் வாரத்தில் ஒரு நாள் காலை. தில்லியில் கழித்த ஒரு அரை நூற்றாண்டு வாழ்க்கை அரசுப் பணியிலிருந்து ஒய்வு பெற்ற பிறகு, தில்லியை விட்டுப் பிரிய மனமில்லாது சில வருடங்கள் கழிந்தன. இருந்தாலும் சிறு வயதில் பதிந்திருந்த தமிழ் வாழ்க்கையின் காட்சிகள், மனிதர்கள், உறவுகள் மனதில் அவ்வப்போது திரையோடும். இழந்து விட்டவை அவை. நினைவுகளாகவே ஜீவிப்பவை. இருப்பினும் தமிழ் நாடு இழந்துவிட்ட தாயின் மடியைப் போல சோகத்தோடு தான் நினைவுகளைக் கிளறும். […]
Che Guevara – A Revolutionary Life , by Jon Lee Anderson வாழ்க்கைச் சரிதைகள் சலிப்பூட்டும் வகையில் ஒரே புகழ்ச்சி மயமாக இருக்கும். இலலையென்றால், சர்ச்சைக்குரிய நிகழ்வுகள்(?) அங்கங்கே வேண்டுமென்றே வீசப்பட்டு, கண்மூடித்தனமான குற்றச்சாட்டுகளின் தொகுபபாக, சில புகழ் விரும்பிகளின் உழைப்பாக பதிக்கப்படும். இரண்டுக்கும் மத்தியிலே, எதைப்படிப்பது என்பது கத்தி மேல் நடப்பதைப் போல. பல சரித்திர நாயகர்களின் வாழ்வுச்சரிதைகள் இப்படித்தான் வருகின்றன. செ குவாரா இந்த விசயத்தில் சற்றே அதிர்ஷ்டமானவர். ஜோன் லி […]
பா. சத்தியமோகன். விற்காமல் வீசப்பட்ட சுருங்கல் மாலைகள் அதிகாலைத் தெருவில் வதங்கிக் கிடக்கும் கீரை மூட்டை இறக்கிப்போடுவதற்கு கல்யாணிக் கிழவி பேருந்து முன் நின்று இன்றும் கூவுகிறாள் விடை பெற்றுக் கொண்டிருக்கிறது கோடைகாலத்தின் மார்பில் ஒட்டியிருக்கும் குளிர் புலரப் போகும் இந்த உலகம் இன்னும் சற்று நேரத்தில் விரைந்து இயங்கத் துவங்கும் எவர் அறியக்கூடும் – விடிந்து கொண்டிருக்கும் இந்த உலகம் இன்று எதில் எதில் ஆழ்ந்து போகும்? எத்தனை இலட்சம் குழந்தைகளுடன் நகரப்பேருந்து நெரிசல் இயங்கத் […]
மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா “கடவுள் உனக்குக் கொடையாக அளித்துள்ளார் ஆன்மீக இறக்கைகளை ! அவற்றின் மூலம் நீ காதல் விரி வான்வெளிக் கோட்டையில் விடுதலையாகப் பறக்கலாம். நீ உன் கையாலே உன் இறக்கைகளை வெட்டி, உன் ஆத்மாவை நசுக்கி மண்ணில் நெளியும் புழுவாய் நகர்வது வருந்தத் தக்க நிகழ்ச்சி இல்லையா ?” கலில் கிப்ரான் (ஞானியின் பொன்மொழிகள்) +++++++++++ அறிவும். பகுத்தாய்வு நெறியும் அறிவுக் கல்வி இல்லாது […]
ஆங்கில மூலம் : கோல்மன் பார்க்ஸ் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா இறைவன் திருநாம உச்சரிப்பு (சென்ற வாரத் தொடர்ச்சி) வழிப் பயணிகள் பின்னே நடந்து செல் விளக்கேற்றிய சில விளக்குகள் அணைந்து விட்டன விரைவாக ! விடிவு வரை நீடிக்கும் சில. ஆவி அடங்கும் சில. தீவிர மாய் எரியும் சில ! எண்ணெய் ஊட்டப் பட்டவை எல்லா விளக்கும் ! வீடு ஒன்றில் விளக்கு அணைந்தால் பக்கத்து வீட்டில் பாதிப் பில்லை ! […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் இவையெல்லாம் எனக்கு சுவையான விவரங்கள். ஆனால் ராய்க்கு இவையெல்லாம் விஷயமே அல்ல. சட்டென என் பேச்சை நிறுத்தினார். ”ஏம்ப்பா இலக்கியம் பத்தி அவர் பேசவே இல்லையா?” என்று கேட்டார். ”பேசினாப்ல எனக்கு ஞாபகம் இல்லை. அப்பிடி இலக்கியம் பத்தி எப்பவுமே பேசிட்டிருக்கிற எழுத்தாளர் அல்ல அவர். எழுத்து பத்தி உள்ளே அசைபோடுவாரே தவிர எல்லாத்தையும் பேசிற மாட்டார், அவர் சுபாவம் அப்பிடின்னு நினைக்கிறேன். எங்க கியுரேட்டுக்கு புத்தகம் வாசிக்கக் குடுப்பார். […]