பஞ்சதந்திரம் தொடர் – நட்பு அறுத்தல்

This entry is part 12 of 47 in the series 31 ஜூலை 2011

நட்பு அறுத்தல் இப்பொழுது நட்பு அறுத்தல் என்கிற முதல் தந்திரம் ஆரம்பமாகிறது. அதன் முதல் செய்யுள் பின்வருமாறு: காட்டில் சிங்கத்துக்கும் எருதுக்குமிடையே சிறப்பாக வளர்ந்து வந்த சிநேகத்தை, பேராசையும் போக்கிரித் தனமுமுள்ள ஒரு நரி நாசம் செய்தது. அது எப்படி என்று பார்ப்போம்: தெற்குப் பிரதேசத்தில், இந்திரலோகத்துக்கு ஈடாக மஹிளாரூப்யம் என்ற நகரம் ஒன்று உண்டு. அது சகல சுப லட்சணங்களும் பெற்றிருந்தது: பூதேவியின் கிரீடத்திலிருக்கும் சூடாமணி போல் சிறப்புற்றிருந்தது; கைலாசத்தில் முடி போன்ற ரூபத்துடன் இருந்தது. […]

தீராதவை…!

This entry is part 11 of 47 in the series 31 ஜூலை 2011

அம்மா கைகளில் குழந்தை… சும்மாச் சும்மா உம்மா கொடுத்துக் கொண்டிருந்தது அம்மா. கன்னங்களிலோ நெற்றியிலோ குத்து மதிப்பாக முகத்திலோ இன்ன இடம்தான் என்றில்லாமல் வாகாக வாய்க்கும் எந்த இடத்திலுமோ வென… வாகனங்களைக் காட்டியொரு உம்மா வானத்தைக் காட்டியொரு உம்மா மரங்களைக் காட்டியொரு உம்மா மனிதர்களைக் காட்டியொரு உம்மா கத்தும் குருவியைக் காட்டியும் கொத்தும் கோழியைக் காட்டியும் கழுவும் கறி மீனைக் காட்டியும் காத்திருக்கும் கரும் பூனையைக் காட்டியும் உம்மா கொடுத்துக் கொண்டிருந்தது அம்மா. இடது கையிலிருந்து வலது […]

சுப்புடு நினைவில் ஒரு இசைப்பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீடு

This entry is part 10 of 47 in the series 31 ஜூலை 2011

வணக்கத்துக்கு உரியவர்களுக்கு இத்துடன் வடக்கு வாசல் இசைவிழாவின் அழைப்பினை தங்களின் மேலான பார்வைக்கு இணைத்திருக்கிறேன். யதார்த்தா பெண்ணேஸ்வரன்

அட்ஜஸ்ட்

This entry is part 9 of 47 in the series 31 ஜூலை 2011

காதலியோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா அவளுக்கே கணவனா ஆகியிருக்கலாம், வாத்தியாரோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா இந்நேரம் டிகிரி முடிச்சிருக்கலாம், கூட்டாளிகளோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா பிஸினஸ்ல இன்னும் நல்ல ப்ராஃபிட் பாத்திருக்கலாம், பங்காளிகளோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா சொத்தில கொஞ்சமாவது அனுபவிச்சிருக்கலாம், ஊர்க்காரனுங்களோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா கண்ட ஊருக்கும் போயி வேலைக்கி அலையாம இருந்துருக்கலாம், பேங்க் மேனேஜரோடு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயிருந்தா தலயில துண்டப்போடாம கெளரவமா திரிஞ்சிருக்கலாம், […]

யாழ்ப்பாணத்தின் நாய்ச் சடல அரசியல்

This entry is part 8 of 47 in the series 31 ஜூலை 2011

மொழிபெயர்ப்புக் கட்டுரை – சுனந்த தேஸப்ரிய தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப், இலங்கை உங்களது வீட்டில் நீங்கள் செல்லப் பிராணியாகவும் பாதுகாப்புக்கெனவும் வளர்க்கும் நாயின் கழுத்தை வெட்டிக் கொன்று உடலை நடுத்தெருவிலும் தலையை உங்கள் வீட்டு முன்னாலும் வைத்து விட்டுப் போனால் உங்களுக்குள் எவ்வாறான உணர்வு எழும்? அவ்வாறே உங்கள் வீட்டு நாயைப் படுகொலை செய்து சடலத்தைப் பார்சல் செய்து நீங்கள் தண்ணீரந்தும் கிணற்றில் போட்டுவிட்டுச் சென்றால் உங்களுக்குள் எவ்வாறான உணர்வு எழும்? ஒரு இனத்தின் பாதுகாப்பு […]

இனிக்கும் நினைவுகள்..

This entry is part 7 of 47 in the series 31 ஜூலை 2011

இனிப்பின் சுவை இதுதான்… சின்ன வயதில்… எங்கள் நினைவில்… சவர்க்கார முட்டையூதி சுவரில் வைத்து உடைத்தோம்… பட்டம் செய்து பறக்க விட்டோம் – அதில் நாமும் கற்பனையில் பறந்தோம்… நிலாச்சோறு சமைத்து வேடிக்கை பார்த்தோம் மழையில் நனைந்து ஓடிப்பிடித்தோம் வாழை நாரில் பூக்கள் தொடுத்து வீணை செய்து கீதம் இசைத்து கூட்டாய் விளையாடினோம்.. முற்றத்து மணலில் வீடு கட்டி உள்ளே சென்றோம் உடைந்ததுவே… வெள்ளத்தில் காகிதக் கப்பல் விட்டு நாமும் சென்றோம் கற்பனையிலே… என்ன சொல்ல, என்ன […]

எனது இலக்கிய அனுபவங்கள் – 9 பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)

This entry is part 6 of 47 in the series 31 ஜூலை 2011

திரைப்பட ரசிகர்களுக்குத் தம் அபிமான நடிகர்களைச் சந்திப்பதில் ஆர்வம் இருப்பதைப் போல, வாசகர்களுக்கும் தம் அபிமான எழுத்தாளர்களைச் சந்திப்பதில் ஆர்வம் இருப்பது இயல்பு தான். அது போன்ற ஆர்வம் எனக்கும் வாசகனாகவும் எழுத்தாளனாகவும் ஆரம்ப நாட்களில் இருந்தது. எனவே அப்போதெல்லாம் சென்னை சென்ற நாட்களில் பல எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன். பத்திரிகை அலுவலகங்களுக்குப் போய் பத்திரிகை ஆசிரியர்களையும் சந்திப்பதுண்டு. ‘ ‘குமுதம்’ அலுவலகம் சென்றால் ஆசிரியர் எஸ்.ஏ.பி யைச் சந்திக்கவே முடியாது. யாராவது உதவி ஆசிரியர் தான் வெளியே […]

ஆட்கொல்லும் பேய்

This entry is part 5 of 47 in the series 31 ஜூலை 2011

எங்கோ ஒரு கங்காய் தென்பட்டது இன்று பரவிப்பரவி பெரும் நெருப்பாய் எ¡¢கிறது தொலைவில் சிறு துளியாய் கண்டது இன்று பெருகிபெருகி பெரும் சாக்கடையாய் நாறுகிறது நமக்குப் பின்னால் தொடர்ந்திருந்த நிழல் ஒன்று இன்று நம்மையே விழுங்க வருகிறது இலட்சத்தில் ஒருவருக்குப் பிடித்த வியாதி படையெடுத்து எல்லாரையும் தொற்றுகிறது கண்ணுக்குத் தொ¢யாது உழன்ற ஒரு அணு வெடித்து சமுதாயத்தையே அழிக்கிறது. கேவலமாக கருதப்பட்டவை இன்று தம்பட்டம் அடித்து கௌரவமாய் கோலோச்சுகிறது சீரழிவது நாமென்று தொ¢ந்தும் வாயில்லாப் பூச்சியாக வாழப்பழகியதால் […]

குங்குமச்சிமிழ்

This entry is part 4 of 47 in the series 31 ஜூலை 2011

  தனிச்சுற்றுக்கு மட்டுமாய் வந்து கொண்டிருந்த ஒரு சிறுபத்திரிக்கையில் ரஞ்சனியின் நீண்ட கவிதை ஒன்று வந்திருந்தது. இதழ் அலுவலகத்திற்கு வந்த நாளில் அவளுடன் சக்திகணபதி என்றொருவர் தொலைபேசியில் பேசினார். அவளின் கவிதை பற்றி அவளுடன் விவாதிக்க விரும்புவதாகவும் முகவரி கொடுத்தால் வீட்டிற்கே நேரில் வருவதாகவும் சொன்னார். இவளுக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருந்தது. இதுவரைக்கும் இவளின் கவிதை பற்றி கடிதமோ ஒரு பாராட்டோ வந்ததில்லை. இந்த தமிழ்ச் சமூகம் கவிதை பற்றிய புரிதல் எதுவுமில்லாமல் வறட்சியாக இருப்பதாக நினைத்துக் […]

நிலாச் சோறு

This entry is part 1 of 47 in the series 31 ஜூலை 2011

பௌர்ணமி இரவில் வெண்மை பொங்க விசாலமாய் தெரிந்தது பால்நிலா.   வெண் சித்திரங்களாய் சிதறிக் கிடந்தன நட்சத்திர கூட்டம்.   மொட்டை மாடியில் சூழ்ந்திருந்த குழந்தை நட்சத்திரங்களுக்கு வாய்க்கொன்றாய் உருண்டை உருண்டையாய் சுவையாய் ஊட்டினாள் நிலாச் சோற்றினை அற்புதப் பாட்டி.   அவளுக்கு மிகவும் பிடித்த அந்த சரவணனிடம் கேட்டாள். நிலாச் சோறு எப்படி என்று.   மிகவும் சுவையாக இருக்கிறது என்றான் கண்களில் நிலா மின்ன பார்வையற்ற அந்தப் பேரன்.     குமரி எஸ். […]