மகிழ்திருமேனியின் “ தடையறத் தாக்க “

This entry is part 9 of 41 in the series 10 ஜூன் 2012

ஒரு சாதாரணக் குடிமகனை ஜெட் லீயாக ஆக்கும் கதைகள் சாகாவரம் பெற்றவை. அப்படி ஒரு கதைதான், தடையறத் தாக்க. இம்மாதிரிப் படங்கள், சரியான திரைக் கதையும், பாத்திரங்களும், சம்பவங்களும், தேர்ந்த நடிகர்களும் சேரும்போது, சூப்பர் டூப்பர் வெற்றியாகின்றன. அப்படி ஒரு வெற்றி பெற்ற படம், சமீபத்திய ‘ நான் மகான் அல்ல ‘ இம்மாதிரிப் படங்களுக்கு, ரசிகனை யோசிக்க விடாமல் செய்யும், பர பர காட்சிகள் முக்கியம். எதிர்பாராத திருப்பங்கள் அவசியம். கடைசியில் நாயகன் வென்றே தீர […]

பன்னீர் முத்துக்களைக் காய்க்கும் இளவெயில்

This entry is part 8 of 41 in the series 10 ஜூன் 2012

வானக் கரிய வாவியில் மின்னி நீந்திடும் சிலவேளை வீழ்வதாய்ப் போக்குக் காட்டும் ஊணுண்ணிப் பட்சியென மீன்கொத்தி நிலா மேற்கிலிருந்து கிழக்காய் நகர்ந்து நகர்ந்து கொத்திட காலையில் செவ்வாகாயம் வெறிச்சோடிக் கிடக்கும் இடித்திடித்துக் கொட்டிய நேற்றின் இரவை நனைத்த மழை உனதும் எனதுமான ஏகாந்தப் பொழுதொன்றை நினைவுறுத்திக் கொண்டேயிருந்ததில் அச்சமுற்றிருந்தேன் நான் மின்சாரம் தடைப்பட்டெங்கும் அந்தகாரம் மேவிய பொழுதில் கண்மூடி விழித் திரைக்குள் உனையிறக்கியிருந்தேன் உதறப்பட்ட காலத்தின் துளிகளோடு உன் மீதான எனது சினங்களும் ஆற்றாமைகளும் வெறுப்பும் விலகியோடிப் […]

சூபிஞானி பீர்முகமது அப்பா –விளிம்புநிலை மக்களுக்கான மீட்சி

This entry is part 7 of 41 in the series 10 ஜூன் 2012

பீர்முகமது அப்பாவின் படைப்புலகம் யதார்த்தமும் கனவும் ஒருங்கே உருப்பெற்ற தரிசனமாகும். யதார்த்தம், வாழ்வின் இருப்புகுறித்த நிகழ்வுகளின் தொகுப்பாகவும், கனவுலகம் விரும்புகிற நேசிக்கிற வாழ்க்கையைப் பற்றிய படிமமாகவும், அமையப் பெற்றுள்ளது. கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் இம்மூன்றும் ஒன்றில் ஒன்று கலந்து காட்சி சித்திரங்களாக உரு மாறி இடம் பெயர்கின்றன. பீரப்பாவின் மொழியில் வாழ்வின் இருப்பு திருப்திகரமானதாக இல்லை. துன்பதுயரங்களின் புதர்க்காடாக கிடக்கிறது. இருள் நிறைந்த துக்கத்தின் சாயல்களை அதில் நிறையக் காணலாம். இத்தகைய பிம்பங்களிலிருந்து விடுபடவேண்டி இறையிடம் வேண்டுகிற […]

உருக்கொண்டவை..

This entry is part 6 of 41 in the series 10 ஜூன் 2012

தினம் வந்து கொண்டிருந்த கனவுப்புலியொன்று நனவில் வந்தது ஓர் நாளில். மூளைக்கனுப்பிய நியூரான் சமிக்ஞைகள் தொடர்பில் இல்லையென்று திரும்பி வந்து விட திகைத்து மூச்சடைத்துத் தடுமாறி நின்ற எனை நோக்கி மெல்லக் கொட்டாவி விட்டபடி திரும்பிப் படுத்துக் கொண்டது, வாலசைவில் தன் இருப்பைத் தெரிவித்தபடியே தன் கட்டுக்குள் பிறரை வைக்க நன்றாகக் கற்றிருந்த அந்தப்புலி. எங்கணும் எதிலும் வாலின் நாட்டியத்தரிசனமளித்தும் அற்ற பொழுதுகளில் கூர் பல்லால் ஆசீர்வதித்தும் என் பொழுதுகளை ஆக்கிரமித்திருந்த ஓர் போதில் பயம் கொன்று […]

ராஜதுரோகங்களின் மத்தியில்.. அகிலின் “ கூடுகள் சிதைந்த போது…” சிறுகதைத்தொகுதி..

This entry is part 5 of 41 in the series 10 ஜூன் 2012

கோவை இலக்கியச் சந்திப்பு என்ற இலக்கிய நிகழ்ச்சி மாதந்தோறும் கோவையில் இளஞ்சேரல், பொன் இளவேனில், யாழி, தியாகு போன்றவர்களால் காத்திரமான இலக்கிய விமர்சனங்கள், இலக்கிய உரைகளை முன்வைத்து நடத்தப்படுகிறது. மே மாத நிகழ்வில் கனடாவில் வாழும் அகிலின் “ கூடுகள் சிதைந்த போது..” சிறுகதைத் தொகுப்பு அறிமுகக் கூட்டமாக அமைந்திருந்தது. ஞானி, யுகமாயினி சித்தன், செல்வி, சுப்ரபாரதிமணியன் ஆகியோர் அந்த நூலை பற்றிப் பேசினர். பொதிகைச் சித்தர் சோலை சுந்தரப் பெருமாளின் “ தாண்டபுரம்” நாவலிப்பற்றி விரிவான […]

அரிமா விருதுகள் 2012

This entry is part 4 of 41 in the series 10 ஜூன் 2012

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் அரிமா சுதாமா கோபாலகிருஸ்ணன் வழங்கும் குறும்பட விருதுகள், சக்தி விருதுகளைத் தந்து வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்றோர் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது. பரிசளிப்பு விழா :.18/6/2012 மாலை 6 மணி, மத்திய அரிமா சங்கக் கட்டிடம், ஸ்டேட் பாங்க் காலனி, காந்தி நகர், திருப்பூரில் நடைபெற உள்ளது. . . * சுதாமா கோபாலகிருஸ்ணன் வழங்கும் அரிமா குறும்பட விருது 2012 ============================================================ பெறுவோர்: 1.ச.பாலமுருகன் , கோவை ( […]

சீறுவோர்ச் சீறு

This entry is part 3 of 41 in the series 10 ஜூன் 2012

நகரத்தின் மையப்பகுதியில் பரபரப்பான ஒரு சாலை. போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதி. இடப்புறம் பெரிய காம்பவுண்ட் போட்ட கட்டிடம். அதற்குள்ளே நுழைந்தவுடன் இரு புறமும் அடர்ந்த மரங்கள், செடி கொடிகள்.. மேற்கொண்டு உள்ளே செல்லச் செல்ல பாதை நீண்டு, கட்டிடங்கள் ஒவ்வொன்றாக வரும்.. அக்கட்டிடத்தின் பின் கோடியில் ஒரு பழைய கட்டிடம். வர்ணமெல்லாம் வெளுத்துப் போய், சுவர்கள் பெயர்ந்து தனியாக ஒதுங்கியிருந்தது.. அந்த மொத்தக் கட்டிடமே ஒரு தனித்தீவு போல இருந்தாலும், இந்த பாழடைந்த அறை மேலும் […]

அவன் – அவள் – காலம்

This entry is part 2 of 41 in the series 10 ஜூன் 2012

தெலுங்கில் :G.S. லக்ஷ்மி தமிழாக்கம் : கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com நேரம் – இரவு பத்துமணி. இடம் – பிரைவேட் நர்சிங் ஹோமில் ஒரு ஸ்பெஷல் ரூம். அவன் : மருந்து மயக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்த அவளைப் பார்க்கும் போது அவன் மனம் எங்கேயோ சஞ்சரிக்கத் தொடங்கியது. ஏதேதோ நினைவுகள், அனுபவங்கள். முப்பது வருட தாம்பத்திய வாழ்க்கை அவன் கண் முன்னால் நிழலாடியது. முப்பது வருடங்களுக்கு முன்னால் வாழ் நாள் முழுவதும் பத்திரமாக பார்த்துக் கொள்வான் என்ற […]

நிலைத்தகவல்

This entry is part 1 of 41 in the series 10 ஜூன் 2012

கூச்சல்களும் எதிர்ப்புகளும் நிலைத்தகவல்களிலேயே முடிந்துவிடுகிறது ஆதரவுகளும் அரவணைப்புகளும் ஒருசில லைக்குகளோடு முடிந்துவிடுகிறது பெண்ணியமும் ஆணியமும் ஆங்கில விசைப்பலகையின் விசை கொண்டு தமிழுருவில் எழுதப்பட்ட வலைப்பதிவோடு முடிந்துவிடுகிறது அவலங்களும் அராஜகங்களும் பின்னூட்டங்களிலும் எதிர்வினைகளிலுமே தீர்ந்து விடுகிறது எனக்கென்னவாயிற்று, ஒரு கையில் கோப்பைத்தேநீருடன் நானெழுதிய இந்தக்கவிதை(?) பிரபல வாரப்பத்திரிக்கையில் வெளிவந்தால் மட்டும் எனக்குப் போதுமென்றாகிவிட்டது. – சின்னப்பயல் (chinnappayal@gmail.com)

தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்

This entry is part 37 of 41 in the series 10 ஜூன் 2012

அன்புடன் தோழர்களுக்கு வணக்கம் எழுத்து பதிப்பகத்தின் தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம் ராணிபேட்டை, சென்னை, மதுரை,சிவகங்கை, சேலம், புதுச்சேரி, திருச்சி, கும்பகோணம், போளூர், காரைக்குடி, திருவொற்றியூர் இலங்கையில் ஹட்டன், கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு நகர்களைத் தொடர்ந்து ஆரணியில் எதிர்வரும் 16 -06 -12   அன்று நிகழவிருக்கும்  விமர்சன கூட்டத்திற்கு உங்களை அன்புடன் பங்கேற்க அழைக்கிறோம். நண்பர்களுக்கும் நிகழ்வை குறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ளவும்.