கால் செண்டர் உலகில் மென்பொருள் ரோபோக்கள் அழைப்பவர் மற்றும் சேவை அளிப்பவர் இரு சாராருக்கும் பயந்தரும் ஒரு தொழில்நுட்பம் என்றுதான் சொல்ல வேண்டும், விற்பனை உலகில் இவை சரியாகப் பயன்படுகிறதா? உண்மையில் விற்பனையாளருக்கு உதவுகிறதா? நுகர்வோரை நச்சரிக்க உதவுகிறதா? விற்பனை உலகில் உதவியாளர்களின் வேலைக்கு ஆபத்தா?பெரும்பாலும் இன்று விற்பனை மென்பொருள் ரோபோக்கள் சில வலைத்தளங்சளைத் தவிர்த்து, சரியாகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எதிர்காலத்தில் இவை மனித உணர்வுகளை மதிக்க கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். இல்லையேல், இது […]
தமிழகத்தில் தேர்தல்கள் பொதுவாகவே திமுகவை சுற்றி சுழன்றிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அவ்வாறு சொல்வதற்கு காரணம் திமுகவுக்கு தமிழ்நாட்டில் சுமார் 25 சதவீதமே வாக்குக்கள் உண்டு என்பதால்தான். தமிழ்நாட்டில் யார் ஜெயிப்பார்கள் என்பது திமுகவுக்கு எதிர் வாக்குகள் சேர்ந்து நிற்கிறதா அல்லது சிதறியிருக்கிறதா என்பதை வைத்தே முடிவு செய்யலாம். திமுகவுக்கு எதிரான வாக்குக்களையும் அது எப்போது கூட்டணியில் சேர்த்துகொள்கிறதோ அப்போது திமுகவுக்கு வெற்றியும் கிடைக்கும். உதாரணமாக பாமகவின் வாக்குகள் அனைத்தும் ஒரு காலத்தில் திமுகவின் வாக்குக்களாக இருந்தவை. […]
சோம.அழகு எளியவர்களிடமிருந்து மிக இயல்பாக போகிற போக்கில் நிதானமாகத் தெறித்து விழும் வார்த்தைகளில் இருக்கும் வலிமையை, தெளிவை, அதில் குறும்புடன் எட்டிப் பார்க்கும் அழகியலை உணர்ந்து ஒரு கணம் ஆடி அசந்து போயிருக்கிறீர்களா? தாம் சொல்வது எவ்வளவு பெரிய விஷயம் என்ற பிரக்ஞையோ அலட்டலோ அதிகப்பிரசங்கித்தனமோ இல்லாமல் ‘இவ்ளோதாங்க வாழ்க்கை…’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி விட்டுப் போகிறவர்களின் அருகில் போதி மரங்களே போன்சாய்களாக மாறிப் போகும் அதிசயத்தைக் காணப் […]
‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் ஊருக்கு இளைத்தவர்களும் உத்தம உபதேசிகளும் மகானுபாவர்கள். மரணத்திற்கான காரணங்களை மனப்பாடமாய் அறிந்தவர்கள். இன்னாரின் சாவுக்கு இன்னின்ன கேடுகளை கிலோ கணக்கில் சந்தையில் விற்பதில் கைதேர்ந்தவர்கள். மனிதநேயம், சமூக அக்கறை, அறச்சீற்றம், என்று எத்தனை கிரீடங்களை கைவசப்படுத்திவிட முடிகிறது! கொள்ளை லாபம்தான்! வெள்ளையும் சொள்ளையுமாய் கடையில் அமர்ந்தபடி வழிபோவோர் வருவோரையெல்லாம் ஆழாக்கில் அளந்துபார்த்தல் அப்படியொரு சுவாரசியமான பொழுதுபோக்கு. ஒரு இறப்பைக்கூட துருப்புச்சீட்டாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். இறந்தவரின் மனைவி, மக்களுக்காக இரு சொட்டு முதலைக்கண்ணீர் வடித்து […]
பி எஸ் நரேந்திரன் Ghazwa-e-Hind என்கிற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாத ஹிந்துக்கள் இந்தியாவில் இருக்கிற வரையில் அவர்கள் பாகிஸ்தானை ஆதரிப்பார்கள். பாகிஸ்தானிகளை ஆதரித்து மீம்ஸ்களும், ஃபேஸ்புக் ஸ்டேட்டஸ்களும் போட்டுத் தள்ளிக் கொண்டிருப்பார்கள். ஏனென்றால் கஸ்வா-எ-ஹிந்த் என்கிற வார்த்தையின் பயங்கரத்தை அவர்கள் அறிந்தார்களில்லை. அறிந்து கொள்ளவும் முயன்றார்களில்லை என்பதுதான் பரிதாபம். முதலில் இந்த கஸ்வா-எ-ஹிந்த் என்றால் என்ன என்று பார்க்கலாம். முகமது நபி கூறியதாகச் சொல்லப்படும் இஸ்லாமிய ஹதீஸ் ஒன்று இந்தியாவில் ஹிந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடைய நடக்கவிருக்கும் ஒரு […]
வளவ. துரையன் [’தச்சன்’ இராநாகராஜன் எழுதிய “நீரில் நிழலாய் மரம்” ஹைக்கூ கவிதைத்தொகுப்பை முன்வைத்து] புதுச்சேரியில் நடந்த தமிழ்ச் சிற்றிதழ்கள் மாநாட்டில்தான் நான் முதன்முதலாய் நாகராஜனைச் சந்தித்தேன். அப்பொழுது அவர் ‘தச்சன்’ சிற்றிதழை நடத்தி வந்தார். சிறிதுநேரம்தான் பேசிக்கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள் அவரின் குடும்பம், மற்றும் இலக்கிய ஆர்வம் போன்றவற்றை அறிந்து மகிழ்ந்தேன். அண்மையில் வெளிவந்துள்ள அவரின் ஹைக்கூத் தொகுப்பு நீரில் நிழலாய் மரம்” முக்கியமான ஒன்று. புத்தகம் என்பது ஒரு படிப்பினைத் தரக்கூடியது. […]
கருவண்டு வாசிக்கும் கவிதை ரோஜாக்கள் குளிரெடுக்கும் மண்ணைப் போர்த்திவிடும் புல்வெளிகள் வந்தாரை வணங்க வேலி தாண்டும் அரளிகள் இலைமறைப் பிஞ்சால் ஏமாறும் அணில்கள் கொழுந்து மேடையில் உலாவரும் பூச்சிகள் காய்க்கரம் நீட்டிக் கும்பிடும் முருங்கைகள் வேடிக்கை பார்க்கும் தென்னங் குலைகள் ஊனமற்ற இயற்கை சூழ இல்லம் ஒன்று நடுவே அது என்ன இல்லமாம்? ‘ஊனமுற்றோர் இல்லம்’ அமீதாம்மாள்
– லதா ராமகிருஷ்ணன் ஜெயதேவன் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் ,பண்ணைக்காடு சொந்த ஊராகவும் வத்தலக்குண்டுவை குடியிருப்பு ஊராகவும் கொண்டவர் .,இவர் தொடர்ந்து இயங்கும் கவிஞர் .இவரது கவிதைகள் காக்கைச் சிறகினிலே , உயிர் எழுத்து , கணையாழி , இனிய உதயம் போன்ற இதழ்களில் தொடர்ந்து வருகின்றன . இவரது இதுவரையான கவிதை நூல்கள் விடியலை நோக்கி , சுய தரிசனம் , ஐந்தாவது யுகம், ,இன்றைய செய்திகள் , கண்ணாடி நகரம் ,அம்மாவின் கோலம் ,முச்குலம் என்னும் […]
FEATURED Posted on March 9, 2019 ஸ்பேஸ்-X விண்சிமிழ் பாதுகாப்பாய் கடல் மீது இறங்கியது Space X Rocket Falcon -9 First Launch with Dragon Capsule to International Space Station to dock and return [ February 28, 2019 ] சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear), கனடா +++++++++++++++++ 1. https://www.bbc.com/news/video_and_audio/headlines/47493572/spacex-dragon-capsule-splashes-down-after-iss-mission 2. https://www.aljazeera.com/news/2019/03/spacex-nasa-set-launch-crew-dragon-demo-capsule-190302055324645.html 3. https://www.aljazeera.com/news/2019/03/spacex-nasa-set-launch-crew-dragon-demo-capsule-190302055324645.html 4. https://www.space.com/nasa-spacex-clear-crew-dragon-for-first-launch.html 5. https://nkkn37.wordpress.com/2019/02/28/crew-dragon-demo-1-mission-by-spacex/ 6. https://phys.org/news/2019-03-dragon-capsule-successfully-rocket-spacex.html#nRlv 6(a) https://spacenews.com/nasa-gives-go-ahead-for-spacex-commercial-crew-test-flight/ 7. https://nkkn37.wordpress.com/2019/02/28/crew-dragon-demo-1-mission-by-spacex/ 8. http://spaceref.com/missions-and-programs/nasa/spacex-launches-first-nasa-commercial-crew-demonstration-mission.html 9. http://spaceref.com/international-space-station/space-station-crew-opens-hatch-to-crew-dragon-after-docking.html 10.http://www.spacedaily.com/reports/SpaceX_launches_Dragon_test_capsule_to_ISS_999.html 11. https://www.bbc.com/news/video_and_audio/headlines/47493572/spacex-dragon-capsule-splashes-down-after-iss-mission 12. https://www.bbc.com/news/science-environment-47453951 […]