நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ ஆற்ற அனந்த லுடையாய்! அருங்கலமே தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய். இப்பாசுரத்தில் பெண்களெல்லாம் கிருஷ்ணனைக் கண்டு மயங்கும்போது, அவன் தன்னைக் கண்டு மயங்கும்படியான பெருமை கொண்ட ஒருத்தியை எழுப்புகிறார்கள். பல பிள்ளைகள் படிக்கும்போது ஒருவன் மட்டும் திறமையானவாய் இருப்பது போலே எல்லாப் […]
முனைவர் பா. ஆனந்தகுமார், எம்.ஏ., எம்ஃபில், பிஎச்.டி., தமிழ்ப்பேராசிரியர், தமிழ்த்துறை, காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகம், காந்திகிராமம் – 624 302. தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் போன்று கொங்கு நாடும் தனித்த சமூக, அரசியல், பண்பாட்டு வரலாறுடையதாய்த் திகழ்கின்றது. கொடுமணலும் நொய்யலாறும் கொங்கு நாட்டின் பழமையைப் பறைசாற்றுகின்றன. பழந்தமிழிலக்கியங்கள் தொட்டே கொங்குநாடு பற்றிய இலக்கியப் பதிவுகள் காணக்கிடைக்கின்றன. பெருங்கதை, சீவக சிந்தாமணி முதலான பெருங்காப்பியங்களிலும் வையாபுரிப்பள்ளு முதலான சிற்றிலக்கியங்களிலும் கொங்கு நாட்டைக் குறித்துப் பதிவுகள் உள்ளன. […]
தலைமை : திரு வளவ. துரையன்’ தலைவர், இலக்கியச் சோலை வரவேற்புரை : முனைவர் திரு ந. பாஸ்கரன், செயலாளர், இலக்கியச் சோலை சிறப்புரை : தமிழாகரர் திரு தெ. முருகசாமி, புதுச்சேரி பொருள் : சிலம்பில் ஊழ் நன்றியுரை : திரு இல. இரகுராமன், பொருளாளர், இலக்கியச் சோலை 23-03-2014 ஞாயிறு காலை 10 மணி ஆர்.கே.வி தட்டச்சகம், கூத்தப்பாக்கம் ————————————————————————————————————————————
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=KNJNaIoa5Hk http://www.youtube.com/watch?feature=player_embedded&v=WUB7dRgClSQ http://www.youtube.com/watch?v=iPyRAmviIuE http://www.space.com/22752-voyager-1-goes-interstellar-solar-system-boundary-passed-video.html (கட்டுரை -3) (NASA New Horizon Spaceship to Dwarf Planet Pluto) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா புதுத் தொடுவான் விண்கப்பல் பூதக்கோள் வியாழனைச் சுற்றி ஈர்ப்பு வீச்சில் வேகம் மிகையாகி விரைவாய் உளவப் போகுது புளுடோ வையும் சேரன் என்னும் துணைக் கோளையும் ! முதலிரு வாயேஜர் விண் கப்பல்கள் காணாத புதுமைகள் காணும் ! புளுடோ வுக்கும் […]
-ஷாலி தனது நீங்காத நினைவு-37 ல் சகோ.ஜோதிர்லதாகிரிஜா அவர்கள் மாராப்பு எழுத்தாளர்களைப் பற்றி மடல் எழுதியிருந்தார்.இன்றைய வணிக பத்திரிக்கைகள் அனைத்தும் பெண்களை ‘தன’லட்சுமியாகப் பார்த்தே பணம் பண்ணுகின்றனர்.அன்றைய கால புலவர்கள் மங்கையின் அழகை வர்ணித்து கவி பாடி இலக்கியம் படைத்தனர்.இன்று பெண்களின் சதையே ஊடக சந்தையில் நிறுக்கப்படுகிறது.கூடுதல் எடைக்கு கூட்டமும் அதிகம். “வீதியிலே நீ நடந்தாள் கண்ணு எல்லாம் உன் “மேலே”தான்.”…என்று பாடல் தான் நினைவுக்கு வருகிறது.இதை நன்கு புரிந்து கொண்ட ஊடக […]
வாட்டர்கேட் ஊழல், நிலக்கரி ஊழல், காமன்வெல்த் ஊழல், 2ஜி ஊழல் – இப்படி நம்மைச் சுற்றி எத்தனையோ ஊழல்கள். அவற்றில் குப்பை ஊழலும் ஒன்று. ஆம், நம் நாட்டின் நகரங்களில் சேரும் குப்பைகளை அகற்று வதில் நடைபெற்றுவரும் ஊழல் பற்றி 16.03.2014 அன்று நடிகர் அமீர்கானின் தயாரிப்பு-இயக்கத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டுவரும் சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் தமிழ் ஒளிபரப்பில் அறியக்கிடைத்தபோது அதிர்ச்சியாக இருந்தது. நம் நாட்டின் ஒவ்வொரு நகர்ப்புறத்திலும் தினசரி வெளியேற்றப்படும் திட, திரவ, மக்கும் மக்காக் […]
கடந்த ஐந்தாண்டுகளாக கவிதைத்துறையில் தொடர்ந்து உற்சாகத்தோடு இயங்கிவரும் கவிஞர் நிலாரசிகன். ஏற்கனவே அவர் எழுதி வெளிவந்த வெயில் தின்ற மழை, மீன்கள் துள்ளும் நிசி ஆகிய தொகுதிகளைத் தொடர்ந்து இப்போது கடலில் வசிக்கும் பறவை வெளிவந்திருக்கிறது. எதார்த்தக் காட்சியொன்றை மிகுபுனைவின் வழியாக கனவுக்காட்சியாக விரித்தெடுத்து, அக்காட்சியின் சில கோணங்களைமட்டும் சொற்சித்திரமாக முன்வைப்பவை நிலாரசிகனின் கவிதைகள். இந்த இயங்குமுறை, அவருடைய எல்லாத் தொகுப்புகளிலும் திகட்டாதபடி சீரான அளவில் தொடர்ந்து வெளிப்பட்டபடி இருக்கிறது. அந்த சுவருக்கு […]
” கலைகளில் சிறந்தது எழுத்துக் கலை. தரமானவற்றை எழுதி தமிழ் முரசுக்கு அனுப்புங்கள். ” வை. திருநாவுக்கரசு சொன்னது எனது வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை உண்டு பண்ணியது. நான் வீடு திரும்பியபோது அவர் சொன்னது பொன்மொழியாக செவிகளில் ரீங்காராமிட்டது. நான் ஏன் ஓர் எழுத்தாளனாக உருவாகக் கூடாது என்ற எண்ணம் மனதில் எழுந்தது. எழுத்தாளனாக வேண்டுமெனில், தமிழ் மொழியில் புலமை வேண்டும். நிறைய .தமிழ் நூல்கள் படிக்க வேண்டும். விடா முயற்சியுடன் பொறுமையுடன் எழுத வேண்டும். பள்ளியின் […]
மனம் வின்னென்று ஒரு வலியைப் பரப்பிச் சென்றது. நேற்று இரவு சன் தொலைக்காட்சியின் ஏழுமணிச் செய்தியைக் கேட்டபோது. மேல்செங்கம் வனப்பகுதியில் 5 மான்களைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தைப் பற்றி அந்த செய்தி பின்வருமாறு அறிவித்தது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டத்திற்கு உட்பட்டதான மேல்செங்கம் வனப்பகுதியில் மான் வேட்டையாடிய முன்னாள் துணைக் கமிஷனர் உள்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர். வேலியே பயிரை மேய்ந்த கதை இதுதான் போலும். சமூகப் பொறுப்பில் உள்ளவர்கள்தான் அதிகாரத்தைத் […]
(Children of Adam) (Scented Herbage of My Breast) மெல்லிய இலைகள் (1819-1892) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா என்னிதயத்தின் நறுமணக் கொடி இலைகளை உன்னிட மிருந்து நான் சேர்த்தது சிறப்பாய் ஆய்ந்திடப் பிறகு ! பிரேதக் குழி இலைகள், இறந்த பின்பு என்னுடல் மீது வளரும் இலைகள், நெடுநாள் இருக்கும் வேர்கள், நீண்ட இலைகள் ! அந்தோ ! மெல்லிய இலைகளை உக்கிரக் […]