க்ருஷ்ணகுமார் மதக்காழ்ப்புகளும் மதம் சார்ந்த தவறான தகவல்களும் :- மத ஒற்றுமை மற்றும் மத நல்லிணக்கம் பற்றிப் பேச முனையும் வ்யாசம் மதத்தின் பேரால் நிகழ்ந்த வன்முறைகளைப் பட்டியலிடுகிறது. ஆனால் எந்தெந்த மதத்தை / மதத்தைச் சார்ந்தவர்களைக் குற்றவாளிக்கூண்டிலேற்றுகிறது? ஹிந்துஸ்தானத்தில் ஹிந்துக்கள் மாற்று மதத்தவர் பேரில் நிகழ்த்திய வன்முறைச் சம்பவங்களை மட்டும் பத்தி பத்தியாக வ்யாசம் பதிகிறது. அப்படியானால் ஹிந்துஸ்தானத்தில் மாற்று மதத்தவர் ஹிந்துக்களின் மீது வன்முறைகளை அறவே நிகழ்த்தியதில்லை […]
அக்னிப்பிரவேசம்-25 தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com பரத்வாஜுக்கு அன்று இரவு எரிச்சலாய் இருந்தது. இலக்கியக் கூட்டத்திற்குப் போகவேண்டும் என்றாலே அவனுக்கு பயம். யாராவது வயதான எழுத்தாளர் தலைமை தாங்கி இலக்கியம் எப்படியெல்லாம் சீர்குலைந்து போகிறது என்று சொற்பொழிவு ஆற்றுவார். அங்கே வருபவர்கள் எல்லோருமே எழுதத் தெரியாதவர்கள் அல்லது எழுதாமல் தடுப்பவர்கள். அப்படிப்பட்ட சொற்பொழிவாளர்களுக்கு நடுவில் அவனுடைய பெயரையும் வலுக்கட்டாயமாக போட்டுவிட்டார்கள். அவனுக்கு முன்னால் மூன்று பேர் பேசினார்கள். அவர்கள் பேசியதெல்லாம் […]
முனைவர்சி.சேதுராமன், இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com இந்தியா உலகிற்கு வழங்கிய செல்வங்களுள் குறிப்பிடத்தக்கது யோகக் கலையாகும். மனிதனின் ஒருங்கிணைந்த ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு உறுதுணையாக விளங்குவது இவ்யோகக் கலையாகும். விலங்கு போன்று வாழ்ந்த மனிதன் ஒவ்வொரு படிநிலையினையும் கடந்து இன்றுள்ள பண்பட்ட நிலைக்கு உயர்ந்துள்ளான். தன்னுள் இருக்கும் ஆன்ம ஆற்றலை அறிந்து அவ்வாற்றலைப் பயன்படுத்தி இறைநிலைக்கு உயருவதற்கு இவ்யோகநெிறயைக் கண்டறிந்து அதனைக் கைக்கொண்டான். இறைவனுடன் ஒன்றிணையும் நிலையே யோகம் எனப்படுகின்றது. இதனைத் தமிழில் தவம் என்பர். இவ்யோகநெறிகள் பலவாகும். […]
து.ரேணுகாதேவி முனைவர் பட்ட ஆய்வாளர் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறை தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் ஒருவர் தம் வாழ்க்கை வரலாற்றைத் தாமே வரையின், அது தன்வரலாறு எனப்படும். ‘ஒரு தனிமனிதனின் வரலாறு அவனால் எழுதப்படும் அளவு முழுமையோடும் உண்மையோடும் வேறு எவராலும் எழுதப்படமுடியாது’ என்கிறார் டாக்டர்.ஜான்சன். (ப.66) தன்வரலாறுகள் வழிப் பதிவாகியுள்ள தீண்டாமை, அடிமை நிலை, மூடநம்பிக்கைகள், சாதிபேதம், மனித இன்னல்கள் ஆகியவற்றை இவ்வாய்வானது எடுத்தியம்புகிறது. மஹர்களின் அடிமைநிலை மஹாராஷ்டிராவில் உள்ள சடாரா என்னும் சிறுநகரத்திலுள்ள பால்தானைச் […]
போதி மரம் – பாகம் ஒன்று – யசோதரா – அத்தியாயம் – 10 சத்யானந்தன் யசோதரா ராணி பஜாபதி கோதமியின் அறைக்குச் சென்ற போது அவர் மலைநாட்டுப் பெண்கள் கொண்டு வந்திருந்த கம்பளி, சால்வைகள், விரிப்புகள், ஜமக்காளங்களைப் பார்த்தபடி இருந்தார். “வா..யசோதரா.. நீயும் தேர்ந்தெடு.. குளிர்கால மாளிகை தயாராகிக் கொண்டிருக்கிறது”. யசோதராவும் மரியாதைக்காக சிலவற்றைத் தேர்வு செய்தாள். மலைப்புரத்துப் பெண்களுக்கு மூக்கு மிகவும் சிறியதாகவும் கூர்மையற்றும் இருந்தது. குள்ளமாக இருந்தனர். அவர்கள் அணிந்திருந்த பாசி மணி மாலைகள் வண்ண […]
தாகூரின் கீதப் பாமாலை – 54 என் மனதில் இருப்பதை அறிபவன் ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா எனது மனதில் இருப்ப தென்ன உனக்குத் தெரிந்தி ருக்கு மென்று எனக்குத் தெரியும் ! உன்னிட மிருந்து அதை ஒளித்து வைக்க விழைகிறேன் ! அதைக் கவர்ந்து கொண்டன அந்தக் கண்கள் ! அப்படி இல்லை யெனின் நான் செப்புவ தொன்றும் […]
உதயசூரியன் கண்ணீரும் , துக்கமும் இருளை நோக்கி ஓடுகின்றன அவளுக்கு பெற்றோர் இருந்தனர் அண்ணன் இருந்தான் அன்று என் செல்பேசியில் மட்டும் அவளின் அழுகை கேட்டது சில நிமிட மௌனங்கள் சில சமயங்களில் விளங்குவதில்லை நான் இருளை நோக்கி ஓடினேன் இன்று அவளின் இருப்பிடம் தெரியவில்லை என் செல்பேசியில் அவளின் அழுகை கேட்டுக்கொண்டே இருக்கிறது ——————————————— எனக்கு தெரியும் விளக்குக்கும் தெரியும் பூதம் வரப்போவதில்லை என்று நப்பாசைதான் தேய்த்துக் கொண்டிருக்கிறேன் என் பக்கத்தில் கால் மேல் […]
டாக்டர் ஜி.ஜான்சன் அப்போது நான் தமிழகத்தில் சிவகங்கை மாவட்ட திருப்பத்தூரில் பணியாற்றினேன். அது சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை.. அது 300 படுக்கை வசதி கொண்ட பொது மருத்துவமனை. நான்தான் அதன் தலைமை மருத்துவ அதிகாரி. நிர்வாகப் பொறுப்புடன் மருத்துவப் பிரிவையும் நான்தான் பார்த்து வந்தேன். அன்று மாலை என்னைக் காண வந்த நடுத்தர வயதுடைய ஒருவர், கால் வலி என்று கூறி படுக்கையில் தங்க வேண்டும் என்றார். நான் அவரைப் பரிசோதனை செய்ததில் தங்கிப் பார்க்கும் […]
‘நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து………..19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’ வே.சபாநாயகம். எதுவும் சூன்யத்தில் பிறப்பதில்லை. சூன்யத்தில் வாழ்வதுமில்லை. எந்தப் படைப்பும் படைத்தவனிடமிருந்து பெற்றதை உடன் எடுத்துக் கொண்டுதான் வருகிறது. படைத்தவன் குணத்தை அது பிரதிபலிக்கும். அல்லது அவன் எண்ணத்தைப் பிரதிபலிக்கும். படைத்தவனும், அவன் எண்ணங்களும் குணமும் மறுபடியும் சூன்யத்தில் பிறந்த்தில்லை.அதற்கும் முதிய தடங்களைக் காட்டும் சங்கிலித் தொடர் பின்னோக்கிப் போய்க் கொண்டே இருக்கும். அது போலத்தான் படைப்பின் முன்னோக்கிய வாழ்வும். தான் ஒரு […]
வால்ட் விட்மன் வசனக் கவிதை -13 என்னைப் பற்றிய பாடல் – 6 (Song of Myself) (1819-1892) (புல்லின் இலைகள் -1) மூலம் : வால்ட் விட்மன் தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா +++++++++++++++++++++++++++++ இவை யாவும் மெய்யாய் எல்லா மனிதரின் சிந்தனைதான் ! எல்லா காலங் களிலும், எல்லா நாடுகளிலும் உதித்தவை தான் ! எனது மூலப் படைப்புகள் அல்ல உன்னைச் சேரா தாயினும் அவை என்னைச் சேரா தாயினும் ஒன்றும் பயனில்லை ! புதிரில்லை யாயினும், அவை புதிரை விடுவிக்கா திருப்பினும் மதிப்புறுவ தில்லை ! […]