ஆத்மாநாம் =========== சுஜாதாவுக்குள் சூல் கொண்ட மேகம் இந்தக் கவிதை. மௌனி ======= ஞான இரைச்சல்களை தின்று விழுங்கியவர். பேயோன் ======== “பின் நவீனத்துவத்துக்கும்” பேன் பார்த்தவர். கி.ராஜேந்திரன் ============= கல்கி வைக்காமல் போன முற்றுப்புள்ளிகளால் கல்கியை நிரப்பியவர் ஜெகசிற்பியன் ============= உணர்ச்சியின் விளிம்புகளை ஊசிமுனையாக்கி..அதில் உலகத்தை நிறுத்தி வைப்பவர். அநுத்தமா ========= ஈயச்சொம்பில் ரசம் வைத்துக்கொண்டே மனித ரசாபாசங்களை தாளித்துக் கொட்டுபவர். அரு.ராமநாதன் =============== கட்டில் மெத்தை எழுத்துக்கள் ஆனால் தூங்குவதற்காக அல்ல. நாஞ்சில் பி.டி […]
ரிஷ்வன் அன்று சனிக்கிழமை, சனிக்கிழமை வந்தாலே எப்பொழுதும் என் மனதில் ஒரு குதுகூலம் பிறந்துவிடும், ஏனென்றால், மறுநாள் விடுமறை என்பதால் அல்ல, அன்று ஆபீஸ் அரைநாள் மட்டுமே, அரைநாள் என்றால், ஏதோ மதியம் ஒரு மணிக்கு வேலை முடிந்துவிடும் என்று நினைக்க வேண்டாம், எப்படியும் எல்லா வேலையும் முடிக்க மணி மூன்று ஆகிவிடும், அதற்குப்பிறகு வீட்டுக்கு சென்று சாப்பிட்டு, சிறிது நேரம் மனைவிடம் சல்லாப்பித்து, மாலை ஒரு சினிமாவுக்கோ அல்லது வெளியில் எங்கேயாவது அழைத்துச் சென்று சுற்றிவிட்டு, […]
அச்சாணி… ஜெயஸ்ரீ ஷங்கர், சிதம்பரம். ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு செல்ல சார்மினார் எக்ஸ்பிரசில் ஏறி அமர்ந்து ..வண்டியும் கிளம்பியாச்சு… பிரயாணம் முன்னோக்கி நகர….மனசு மட்டும் லக்ஷ்மி குடும்பத்தை சுற்றி பின்னோக்கி சென்றது .பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால்….நடந்நிகழ்ச்சிதான்…..இருந்தாலும்…இன்று நினைத்தால்……கூட….எல்லாம்…. நேற்று நடந்தது போல் இருக்கு. வாசல் தெளித்துக் கோலம் போட பக்கெட் தண்ணீரோடு கதவைத் திறக்கும்போது…..அதற்காகவே காத்திருப்பது போல…ஒரு இளம் பெண் அவள் அருகில் கிழிந்த பாவாடையைக் கட்டிக் கொண்டு மேல்சட்டை கூட இல்லாமல் ஒரு ஐந்து வயதுப் […]
கருப்பையன் முனைவர் பட்ட ஆய்வாளர்,(பகுதிநேரம்) மா. மன்னர்கல்லூரி, புதுக்கோட்டை. தமிழ்க்கவிதை மரபில் மறுமலர்ச்சிக் கவிதைகள் என்றொரு வகைமை மகாகவி பாரதியாரில் இருந்துத் தொடங்குவதாகக் கொள்ளாலாம். மக்கள் விரும்பும் மெட்டில், மக்களுக்குத் தேவையான கருத்துக்களை எளிய இனிய முறையில் படைத்தளிப்பது என்பதே மறுமலர்ச்சிக்காலக் கவிதைகளின் இயல்பாகும். அரசர்களை, இறைவுருவங்களை முன்வைத்துப் புனையப்பெற்ற கற்பனை படைப்புகளை, சிற்றிலக்கிய மரபுகளை சாதாரண மக்களின் வாழ்க்கை நிலையைப் பாட மறுமலர்ச்சிக் கவிதைகள் தோன்றின. பாரதியில் இருந்துத் தொடங்கும் இக்கவிதைகள் புதுக்கவிதையின் எழுச்சியாகக் கருதப்படும் […]
படத்துல வர்ற ஒவ்வொருத்தரும் ஆயிரம் பக்கம் வசனம் பேசறது தான் செமசொதப்பலா இருக்கு,ஒரு வேள ஜெயமோகன் தான் வசனம் எழுதுனாரோ படத்துக்கு..? இத எழுதினவுடனே என்னால சிரிப்ப அடக்கவேமுடியல, கொஞ்சம் இருங்க , அடுத்த பாராவுக்கு கொஞ்ச நேரம் ஆகும் எனக்கு வர்றதுக்கு.. :-) அமலா பாலின் முடிக்கற்றைகள் முன் நெற்றியில் கண்களை மறைத்துக்கொண்டு எப்போதும் விழுந்து கிடந்தாலும் அவர் சித்தார்த்தை சீரியஸாக பார்த்து லவ் பண்ணத்தான் செய்கிறார். ஒரு இடத்துல கூட தன்னோட முடிக்கற்றைகளை […]
ஆங்கில மூலம் : ஜார்ஜ் பெர்னாட் ஷா தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா “கடவுள் கொடுத்த கையிலிருந்து மனிதன் ஆயுதத்தைப் பறிக்கக் கூடாது ! போரிட எல்லாருக்கும் உரிமை உள்ளது. எவருக்கும் நியாயப் பற்றிப் பேச உரிமை கிடையாது. மானிடம் என்பது ஆயுத பலம் ! சொர்க்கம் என்பது வெற்றியின் சிகரம். பிரிட்டீஷ் மாமன்னர் மூன்றாம் ஜார்ஜுக்குக் கீழிருந்தவர் நெப்போலியனுக்குப் பீரங்கிகள் விற்றார். வாளின்றி அமைதி விளையாது வையகத்தில் ! என் குருவான […]
மட்டையும் பந்தும் கொண்டு தனக்கான விளையாட்டை ஆரம்பித்துவிட்டது குழந்தை. டெலிவிஷனின் இருபத்து நாலு மணி நேர விளையாட்டுக் காட்சிகளை எள்ளளவும் பிரதிபலிக்கவில்லை அது தன் விளையாட்டில். விளையாட்டின் விதிகளைத் தானே இயற்றிக்கொண்டு குழந்தை ஆடிக்கொண்டிருந்ததில் வீட்டின் வாசல் புதுமையில் பொலிந்துகொண்டிருந்தது. அப்படி இல்லை என்பதாய் உலகம் ஏற்றுக்கொண்ட விதிகளை அதன் அப்பா திணிக்க முற்பட்டபோது குழந்தையைத் தடுக்காதே என்பதாய் விழிகள் விரித்து உதடுகள் குவித்து ” உஷ் ” என்று ஒற்றை விரலில் அம்மா எச்சரிக்கை செய்தது […]
ஞானசுந்தரம் தன் எல்கையைச் சுருக்கிக் கொண்டு வெகு காலமாயிற்று. எல்கையை என்றால் எதுவென்று நினைக்கிறீர்கள்? அவர் உறவுகளுடனான எல்கையையா அல்லது அவரது வாழ்விட எல்கையையா? இரண்டையுமே என்பதுதான் சரி. தன்னுடைய இயல்பே தன்னை இப்படி மாற்றி விட்டதோ என்பதாக அவர் நினைப்பதுண்டு. அதுவாகவே சுருங்கிப் போயிற்றா அல்லது அவராகச் சுருக்கிக் கொண்டாரா? தானேதான் சுருக்கிக் கொண்டோம் என்பதே விடையாக இருந்தது. அதில் ஏதோ பெரிய நிம்மதி இருப்பதாக அவர் உணர்ந்தார். இருக்குமிடமே சொர்க்கம். அதிலும் சும்மா இருப்பதே […]
ஹிரண்யனின் மனவருத்தம் தென்னாட்டில் பிரமதாருப்யம் என்றொரு நகரம் இருக்கிறது. அதன் அருகாமையில் ஒரு சிவன்கோயில் உண்டு. அதை ஒட்டினாற்போல் இருந்த ஒரு மடாலயத்தில் பூடகர்ணன் என்றொரு சந்நியாசி இருந்து வந்தான். சாப்பிடுகிற வேளையில் பிச்சைப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அவன் நகரத்திற்குப் போவான். சர்க்கரையும் வெல்லப் பாகும் மாதுளம் பழமும் கலந்த, வாயில் வைத்தவுடன் கரைகிற, பல இனிய தின்பண்டங்களைப் பாத்திரத்தில் நிறைத்துக் கொண்டு மடத்துக்குத் திரும்பி வருவான். பிறகு விதிமுறைப்படி அவற்றை உண்பான். மிகுதி உணவை வேலைக்காரர்களுக் […]
1916 ஜனவரி 30 ராட்சச வருஷம் தை 17 ஞாயிற்றுக்கிழமை குட்மார்னிங் மேடம். தொப்பியைக் கழற்றிக் கையில் மரியாதையாகப் பிடித்துக் கொண்டு குனிந்து கும்பிடு போட்டான் ஜேம்ஸ். நானும் அந்த துரைசானிக்கு அபிவாதயே சொல்லாத குறையாக எண்சாணும் ஒரு சாணாகக் குறுக ஒரு அவசர நமஸ்காரம் செய்தேன். திருவாளர் மக்கென்ஸி உன் மேல் வெகு கோபமாக இருக்கிறார் என்று தெரியுமா? ஜேம்ஸை பாதி சிரிப்பும் பாதி கண்டிப்புமாக விசாரித்தாள் துரைசானி. அவள் என்னை யாரென்று லட்சியம் கூடச் […]