தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

இலங்கையை சிங்கள நாடாக மாற்ற, தமிழர்களின் மீதமிருக்கும் கலாச்சார அடையாளங்களையும் அழிக்க முயற்சி

வீக்கெண்ட் லீடர் பத்திரிக்கை Vol 2 Issue 31 வடக்கு இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் பயணம் செய்யும்போது, எவ்வாறு அந்த நிலத்தின் மக்கள்தொகை மாற்றம் நடந்திருக்கிறது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியே மிஞ்சும். முழுக்க முழுக்க…

விசுவப்ப நாயக்கரின் மகள்  

தேமொழி விசுவப்ப நாயக்கர் என்பவர் மதுரை நாயக்கர் மன்னர்களுள் ஒருவர். விஜயநகர பேரரசின் பகுதியாக இருந்த தமிழகத்தில், 16 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இருந்து, விஜயநகர பேரரசின் இறையாண்மையை ஏற்றுக்கொண்டு வரி அளித்து, முழு…

தொடுவானம் 67. விடுதி வாழக்கை

  விடுதி வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. அதிகாலையிலேயே உற்சாகத்துடன் எழுந்து வகுப்புகளுக்குச் செல்வது இனிமையான அனுபவம். காலையில் பசியாறும் போது புது நண்பர்கள் கிடைத்தனர். அவர்களில் சில தமிழ் மாணவர்கள் என்னுடன் நெருக்கமானார்கள். அவர்களில்…

அறிவியல் தொழில்நுட்பம்

பிரபஞ்ச சூட்டுத் தளங்களில் விண்மீன்களின் அருகிலே டியென்ஏ [DNA] உயிர் மூலச் செங்கற்கள் உற்பத்தி

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ofFhHcvasHA http://www.educatinghumanity.com/2013/03/Solid-evidence-that-DNA-in-space-is-abundant-video.html https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=NJQ4r81DZtY https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=d-FLa0RKo5c சட்டியில் ஆப்பம் ஒன்றைச் சுட்டுத் தின்ன அண்டக்கோள் ஒன்றை முதலில் உண்டாக்க வேண்டும் ! அண்டக்கோள் தோன்றப் பிரபஞ்சத்தில்…

இலக்கியக்கட்டுரைகள்

சூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில்

முருகபூபதி (அவுஸ்திரேலியா) படித்தோம் சொல்கின்றோம் சூரன் ரவிவர்மா எழுதிய வடக்கே போகும் மெயில் பத்திரிகையாளருக்கும் படைப்பாளிக்கும் இடையே மாற்றமடையும்  உரைநடை தண்ணீரும்  தமிழ் இனமும் இரண்டறக் கலந்த வரலாறும் எமக்குண்டு.                              தமிழ் இலக்கிய…

  ----நாஞ்சில்நாடன் ’ஐஎனும் இந்தச் சொல், இன்று,இங்கு ஒரு தமிழ் சினிமாவின் தலைப்பாக அறியப்படுகிறது. அல்லது நான் என்ற பொருளில் வரும் ஆங்கிலச் சொல் I என்பதை நினைவுபடுத்தும். மேலும் சிலருக்கு கண் எனும்…

சுப்ரபாரதிமணியனின் நான்கு நாவல்கள் ஆய்வரங்கு

  கோவையில் த.மு.எ.சங்க இலக்கியச் சந்திப்பு 158 ம் கூட்டத்தில்.: 3/5/15   தலைமையுரை :  நாவலாசிரியர் சி.ஆர். இரவீந்திரன்   வாழ்க்கை ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன.…

கடிதங்கள் அறிவிப்புகள்

‘ப்ரதிலிபி’ என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவை

வணக்கம். எனது பெயர் சங்கரநாராயணன். நானும் எனது நண்பர்களும் 'ப்ரதிலிபி' என்றொரு இணைய சுய பதிப்பகச் சேவையைத் துவங்கியுள்ளோம் - www.pratilipi.com. எங்கள் தளத்தில் எழுத்தாளர்களும், கவிஞர்களும், கதாசிரியர்களும் தங்கள் படைப்புகளை இலவசமாகவோ, தாங்கள்…

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2015

கடந்த ஆண்டு மே 12ம் நாளில் சாலை விபத்தில் மறைந்த ஊடகவியலாளரும் மனித நேயரும் ,கருத்து போராளியுமான பெரியார் சாக்ரடீஸ் அவர்களின் நினைவை போற்றும் வகையில் ஊடகம் மற்றும் பண்பாட்டு துறைகளில் பெரியாரின் பல்வேறுபட்ட…

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015

ஐந்தாம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2014 ஆம் ஆண்டு ( ஜனவரி 2014 முதல் திசம்பர்…

கதைகள்

சும்மா ஊதுங்க பாஸ் -1

ரசிப்பு எஸ். பழனிச்சாமி   சிலர் தகுதி இருந்தும் தனக்கேற்ற வேலையோ, வாழ்க்கையோ கிடைக்காமல் அவதிப் படுவதைப் பார்க்கிறோம். ஆனால் உரிய தகுதி இல்லாமலே சிலருக்கு நல்ல பதவியும் நல்ல வாழ்க்கையும் அமைந்து விடுவதுண்டு.…

ஒரு கோடி மெழுகுவர்த்திகள்

சுப்ரபாரதிமணியன் வலது கை பட்டு மெழுகுவர்த்தி பாக்கெட் கீழே விழுந்த மொசைக் தரைச் சப்தத்தினூடே மின்சாரம் போய் அப்பகுதி இருளடைந்தது .. அவள் நின்றிருந்த சூப்பர்மார்க்கெட் “மாலி”ன் இரண்டாம் தளம் முழுவதும் இருட்டாகி விட்டது.…

சிறுகதைகள் மூன்று

சிறுகதைகள் மூன்று 0 1.திரிபுறம் ரங்காவிற்கு காலையில் இருந்தே மனசு சரியில்லை. ஒரு வாரமாக அவள் வீடு கலைத்துப் போட்ட குருவிக்கூடு மாதிரி இருக்கிறது. இன்று எப்படியும் திரிபுரம் மாமியைப் பார்த்துவிடவேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.…

சிமோனிலா கிரஸ்த்ரா

மாதவன் ஒலிப்பதிவு கருவியை ஆன் செய்து அருகில் வைத்துவிட்டு நான் அவரிடம் கேள்வி கேட்கத்தொடங்கினேன். "உங்கள் இளமைக்காலம் பற்றி சொல்லுங்கள்" அவர் எச்சில் விழுங்கிவிட்டு பதில் சொல்லத்தயாரானார். "ஒரு மிக அழகான மலைகிராமத்தில்தான் நான்…

பாடம் (ஒரு நிமிடக்கதை)

சந்தனா சமையலை முடித்துவிட்டு ஒவ்வொன்றாக உணவு மேசை மீது கொண்டு கொண்டு வந்து வைக்கலானாள். உணவு மேசை முன் நான்கு வயது மகள் வாணி உட்கார்ந்திருந்தாள். துறு துறு கண்கள், பொசு பொசு கன்னம்,…

மிதிலாவிலாஸ்-13

தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி தமிழில்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com அன்றுதான் சித்தார்த்தை நர்சிங் ஹோமிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப் போகிறார்கள். அபிஜித் நான்கு மணிக்கு தான் வந்து விடுவதாகவும், இருவரும் சேர்ந்து சித்தார்த்தை வீட்டில் கொண்டு…

வைரமணிக் கதைகள் – 15 குளிப்பாட்டுதல்

வையவன் தூங்கிக் கண் விழித்ததும் ஜின்னிக்கு சிரிப்புதான். மாயா ஜாலம் போல மனசை மாற்றும் சிரிப்பு. மூன்று மாதம் முடிந்து நான்கு ஓடுகிறது. கைக் குழந்தை. ஷேவிங் நுரையோடு தற்செயலாகத் திரும்பினான் அதியமான். ஜின்னி…

நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் 5

ஜி.ஜே. தமிழ்ச்செல்வி அத்தியாயம் 5 அந்த வீடு நிசப்தமாய் இருந்தது. காரியம் முடிந்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன. ராகவ் வந்திருந்தான். அவன் அக்காவும் உடன் மாமாவும் வந்திருந்தார்கள். ஊதுவத்தி மணம் இன்னும் அந்த வீட்டை…

கலைகள். சமையல்

யாமினி கிருஷ்ணமூர்த்தி – 9

  நாட்டிய சாஸ்திரம் பற்றிய புத்தகங்கள் எப்படிச் சொன்னாலும், அவை எவ்வளவு முழுமையானவையானவையும், அதன் விதிகள் எவ்வளவு தெள்ளத் தெளிவாக வரையறுக்கப்பட்டிருந்தாலும் , நிருத்யம் என்பது நடனம் ஆடுபவர் செய்வதே. அவை எத்தனை புராதனமானவையாயினும்,…

திரை விமர்சனம் – உத்தம வில்லன்

கலைஞானி கமலஹாசன் ஒரு அதிசயம். மொழியும் இசையும் அவரது அங்கங்களை அசைக்கும் விதம், காணக் காண ஆச்சர்யம். உத்தம வில்லன் ஒரு கலைப்படம். கமர்ஷியல் படமல்ல. மனோரஞ்சன் திரையுலக சூப்பர் ஸ்டார். அவரை உருவாக்கிய…

சினிமா பக்கம் – திரை விமர்சனம் இந்தியா பாகிஸ்தான்

0 1.தொழில் போட்டியால் மோதலில் ஆரம்பிக்கும் வக்கீல் ஜோடி காதலில் சிக்கும் கதை 2.இரு இதயங்களை காதலால் இணைய வைக்கும் இந்தியன் பீனல் கோட்! 3.இரு துருவங்கள் காதல் வயப்பட்டு ஒரு துருவமாகும் படம்!…

கவிதைகள்

மழையென்பது யாதென (2)

சேயோன் யாழ்வேந்தன்   மழையென்பது யாதெனக் கேட்கும் மகவுக்குச் சொல்வேன் நீ எனக்கு நான் உனக்கு   மழையென்பது யாதென சின்ன வயது சேயோனிடம் கேட்டால் அம்மா வடை சுடுவதற்கு சற்று முன் வருவதென்பான்…

கலப்பு

நாகபிரகாஷ் காற்றுப்பிடிப்போடான நுறைப்பு பெருக்கமாக கருதப்படும் கோடைக்கால நீர்பிடிப்புப் பகுதியில் நாம் முட்டாள் அவர்களின் மழைமேகங்களில் சாத்தானும் குடியிருக்கக்கூடும் தெய்வங்களுடன் சேர்ந்து மறைவாக நிறையச்சேமிக்கும் பெருந்தனக்காரன் வீட்டில் நீர் காவல் இலவசம் ஊர் தந்தாகவேண்டியது…

பறவை ஒலித்தலின் அர்த்தங்கள்

ஒரு பறவையின் ஒலித்தல் எனக்குப் பல விதங்களில் அர்த்தமாகிறது. பறக்கும் திசையைப் பறக்கையிலே தீர்மானிக்கும் அதன் பறத்தலைப் போல் எதிர்பாராது ஒலித்தலில் அதன் பரிமாணம் விரிகிறது. ஆற்றாமையாயும், ஆனந்தமாயும், துக்கமாயும், ஏமாற்றமாயும் எத்தனையோ அர்த்தங்களில்…

இயல்பான முரண்

சத்யானந்தன் நகரும் புள்ளிகளான தடங்களில் வெவ்வேறு திசையில் நீ நான் பல முனைகளைக் கடந்த போதும் எதிலும் நாம் சந்திக்கவே இல்லை இருந்தும் என் எழுத்துக்கள் சொற்கள் இடைப்பட்டு புள்ளி ஒன்று உன்னாலே முளைத்து…

கவிதைகள்

சாயாசுந்தரம்   1. ஒரு அண்ணனுக்காக ஒரு நிறைவேறா நீண்ட நாள் கனவு... தூக்கி வைத்து கொஞ்ச நிலவு காட்டி சோறூட்ட பங்கு பறித்து சண்டை போட ஜடை பற்றி இழுக்க.. கை பிடித்து…