ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2015

This entry is part 11 of 23 in the series 11 அக்டோபர் 2015

             செந்தமிழ் அறக்கட்டளை ,மணப்பாறை    ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்-2015 தொடர்ந்து ஐந்தாம் ஆண்டாக நடைபெற்ற ஜெயந்தன் படைப்பிலக்கியப் போட்டியின் முடிவுகளை அறிவிப்பதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். கவிதை ——– சாத்தானும் சிறுமியும் – யூமா வாசுகி பாம்பாட்டி தேசம்- கரிகாலன் சிறுகதை ——— பிணங்களின் கதை- கவிப்பித்தன் மெல்பகுலாஸோ- மாதங்கி   நாவல் ——- கருடகம்பம்- இளஞ்சேரல் மகாகிரந்தம்-எச்.முஜீப் ரஹ்மான் சிறப்பு விருது ———— நான் வடசென்னைக்காரன் – பாக்கியம் சங்கர் (கட்டுரைகளால் ஆன கதைகள்) லண்டாய்- […]

கொலஸ்ட்ரால் கொழுப்புகள் பலவிதம்

This entry is part 12 of 23 in the series 11 அக்டோபர் 2015

                             நாம் கொலஸ்ட்ரால் பற்றி சரிவர அறிந்து கொள்ளாமல் உள்ளோம். பொதுவாக இதை கொழுப்பு என்று கூறி, இது உடல் நலத்துக்கு கெடுதி என்று மட்டும் தெரிந்து வைத்துள்ளோம். கொலஸ்ட்ரால் என்பது உண்மையில் என்னவென்பதை சற்று ஆராய்வோம். கொலஸ்ட்ரால் என்பது லைப்பிட் ( Lipid ) என்னும் கொழுப்பு போன்ற ஒரு பொருள். இது நம்முடைய கல்லீரலில் உற்பத்தியாகிறது. கொலஸ்ட்ரால் இல்லாமல் நாம் உயிர் வாழ முடியாது. உடலுக்குத் தேவையான மொத்த கொலஸ்ட்ராலில் 80 சதவிகிதம் […]

அந்தரங்கங்கள்

This entry is part 13 of 23 in the series 11 அக்டோபர் 2015

  தேவகுமார (தேவ்) என்ற டேவிட்டின் கதை எமது திருமணமாகி முப்பது வருட நிறைவு நாளுக்காக பிள்ளைகளால் ஒழுங்கு செய்யப்பட்ட அந்த விருந்திற்கு, நானும் மாலினியும் சென்றபோது எதிர்பாராமல் எனது வாழ்கையில் இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பாக, இரண்டு வருட காலம் என்னுடன் உறவில் இருந்த எமிலியை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பம் வருமென நான் எதிர்பார்க்கவில்லை. பழையனவாக நினைத்து புதைத்தது, துளிர்த்து மீண்டும் செடியாகியதுபோல், எதிர்பாராமல் நிகழும் சம்பவங்களின் கோர்வைதானே இந்த மனித வாழ்க்கை. சிட்னியில் ஜுலை மாதம் […]

உதிர்ந்த செல்வங்கள்

This entry is part 14 of 23 in the series 11 அக்டோபர் 2015

  நிலாவண்ணன்         “இங்கயே ஒக்காருங்க தாத்தா… இன்னும் கொஞ்ச நேரத்தில கல நிகழ்ச்சி ஆரம்பிச்சுடுவாங்க… நான் போயி தம்பி தங்கச்சிய கூட்டியாந்துடறேன்..!” பேத்தி பரிமளா உட்காரச் சொன்ன இடத்திலேயே அண்ணாமலை கிழவன் பத்திரமாக அமர்ந்து கொண்டார். சின்ன வயதில் அம்மா பக்கத்தில் உட்கார்ந்த அதே தூண் ஓரம். மேடையை நோக்கி இருக்கும். வசதியாகச் சாய்ந்து கொள்ளலாம். அந்த இடத்தை பேத்தி நேற்றே பாய் போட்டு பத்திரமாகப் பிடித்திருந்தாள். அப்படி எல்லை கட்டாதிருந்தால் இந்நேரம் யாராவது ஆக்கிரமித்திருப்பார்கள். […]

குட்டிக் கவிதைகள்

This entry is part 15 of 23 in the series 11 அக்டோபர் 2015

புகை ‘ஓவர் ஸ்டே’ இங்கு பிரம்படிக் குற்றம் ஓடிவிடுங்கள் புகைமார்களே —————–   ஆனந்தம் அந்தப் பெண்ணின் ஆனந்த வாழ்க்கைக்கு அந்தப் பெரியவர் அப்படி வாழ்த்தியதுதான் காரணமாம்   இதோ அந்தம் பெரியவரின் வாழ்த்து   ‘தாய்ப்பாசமுள்ள பிள்ளைகளும் தாய்ப்பாசமற்ற கணவனும் பெற்று வாழ்க வளமுடன்’   அமீதாம்மாள்

மிஷ்கினின் ‘நந்தலாலா’ ஒரு பார்வை

This entry is part 16 of 23 in the series 11 அக்டோபர் 2015

0 “ கிக்குஜீரோ” என்னும் ஜப்பானிய படத்தைத் தழுவியது என்று மீடியாக்கள் வெளிச்சம் போட்ட படம் தான் நந்த்லாலா! இதற்கு முன்னால் வந்த விஷ்ணுவர்தனின் ‘சர்வம்’, ராதா மோகனின் ‘ அபியும் நானும்’ தழுவலைத் தாண்டி தாம்பத்தியமே நடத்தின! அப்போது எந்தக் கூக்குரலும் இல்லை. ஏனென்றால் அவை ஃப்ளாப்! இது எங்கே ஓடி விடப் போகிறதோ என்கிற காழ்ப்பில் குரல் எழும்பி ஒலித்தன. அதனாலெல்லாம் படம் ஓடி விடவில்லை. ரசிக்கப்பட்டது. பின் பாக்ஸ் ஆபிஸ் பூட்சுகளால் நசுக்கப்பட்டது. […]

அ. வெண்ணிலா கவிதைகள் ‘ நீரில் அலையும் முகம் ‘ தொகுப்பை முன் வைத்து….

This entry is part 17 of 23 in the series 11 அக்டோபர் 2015

  ‘ நீரில் அலையும் முகம் ‘ தொகுப்பின் கவிதைகளுக்குத் தலைப்பு இல்லை [ சில கவிதைகளுக்குத் தலைப்பு இருப்பதுதான் சிறப்பு ] . வெண்ணிலா கவிதைகள் எளியவை , நேர்படப் பேசுகின்றன. யதார்த்தம் பளிச்சிடும் இடங்கள் பல. மனைவியைக் கணவன் எப்படி எழுப்ப வேண்டுமென்று சொல்கிறது ஒரு கவிதை. மெல்ல உதடு தொட்டு முத்தமிட்டு , தலையை வருடி அல்லது முகத்தோடு முகம் வைத்து , விரல் பிடித்து நெட்டி எடுத்து என்றெல்லாம் ‘ ஆப்ஷன்ஸ் […]

ஒத்தப்பனை

This entry is part 18 of 23 in the series 11 அக்டோபர் 2015

நவநீ என் வீட்டிலிருந்து பார்த்தால் சுமார் அரை கி.மீ தூரத்தில் தெரியும் அந்த ஒத்தப்பனை (ஒற்றைப் பனை மரம்) என் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியும். சுமார் ஐந்து கி.மீ தூரத்திலிருக்கும் பள்ளியிலிருந்து நான் வரும் அந்த மாலைப் பொழுதுவரை, காலையில் செய்த குழி பணியாரங்களை ஈரத்துணியில் கட்டி கையில் வைத்துக்கொண்டு எனக்காக மிகுந்த ஆவலோடு காத்திருப்பார் என் தாத்தா. ஆம்! அவர் என் தந்தையின் தாத்தா சுப்பராசா (இப்படித்தான் அவரை அழைப்பார்கள்). நான் அவருடைய பேரனின் மகன், […]

கவிதாவின் கவிதைகள் —- ‘ என் ஏதேன் தோட்டம் ‘ தொகுப்பை முன் வைத்து ……

This entry is part 3 of 23 in the series 11 அக்டோபர் 2015

யாழ்ப்பாணத்துக்காரரான கவிதா தற்போது வசிப்பது நோர்வேயில். இவர் நாட்டியத் தாரகையாகவும் தன் கலைப் பயணத்தைத் தொடர்கிறார். ‘ பனிப்படலத் தாமரை ‘ இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு ; இது இரண்டாவது, இதில் 40 கவிதைகளுக்குமேல் உள்ளன. அழுத்தமாகச் சுயம் பேசும் நடை ! பல இடங்கள் கருத்து வெளிப்பாடாக நின்றுவிடுகின்றன. கவிமொழி கூடி வரவில்லை. ‘ சகலமும் நான் ‘ என்ற கவிதையில் சுயம் முன் நிற்கிறது. தன்னம்பிக்கையின் வீச்சாகக் கவிதை தொடுக்கப்பட்டுள்ளது. சூரியனாக , […]

தன்னிகரில்லாக் கிருமி

This entry is part 19 of 23 in the series 11 அக்டோபர் 2015

  யோக நித்திரை கலைந்த போது கடவுள் எதிரே ஒளிதேவன்   “கிருமிகள் நோய் என்னும் இருளை இனிப்பரப்ப முடியாது கவலை நீங்குவீர்”   “இறைவா எப்படி இந்த அற்புதம்?” வியந்தார் ஒளி.   “அவசரப்படாதீர் அற்புதம் இனிமேல் தான் நிகழும்…”   “புரியவில்லை”   “கிருமிகளுக்கு மனிதரை விடவும் வலிய மனசாட்சியை அருளி இருக்கிறேன்”   “நன்றி இறைவா…. இனி இருள் என் வழியில் வராது”   “மனிதனின் உடலை உருக்குலைப்பது இனி என்னால் இயலாது…” […]