ஜி. ஜே. தமிழ்ச்செல்வி, தமிழ்நாடு நீண்ட தூர பயணம் தான் இதற்கு முன்பும், இதற்கு பின்பும் ஒருவரு மில்லை. தனித்து விடப்பட்டும் தனியன் என்று ஒப்பும் மனமில்லை ! சொந்தம் கொண்டாடும் சொந்தங்களே சொந்தமில்லை. பிடி மண்ணில் ஆசைபட்டு நிற்குமா மனம் ? பொம்மையை இறுகப் பற்றி மழலைக் குணம் ஒவ்வொரு மனிதத்திடமும். காதலன் காதலியையும் காதலி காதலனையும் பொருளாகப் பாவிக்கும் உயர்ந்த குணம் பெற்றோர் பிள்ளைகளையும் உரிமை பாராட்டட்டும். கொத்தடிமைகள் […]
கோ.நாதன் ஊரை உக்கிரமாய் மேய்கிறது ஊரடங்கு இரவு மிகத்தொலைவிலிருந்து வன்முறையின் வேட்டொலிகள் கேட்கின்றன. பின்னர் அதிவேகத்துடன் அபாயயொலி எழுப்பி இராணுவ வாகனங்கள் வீதியை அச்சத்தால் நிரப்புகின்றது. ஒவ்வொரு ஊரின் எல்லாத்தெருக்களையும் இராணுவத்தினுடைய காலடிகள் மிதிக்கப்பட்டிருக்கிறது வீதியில் சொட்டிருக்கும் இரத்தம் உலராத ஈரத்தை நாய்கள் மோப்பத்தில் நக்குகின்றன ஒரு முலையில் வீட்டின் கதவுகள் உடைக்கப்படும் சப்தம் பீதியூட்டியது கடத்தப்பட்ட இளம் தம்பதி பாழடைந்திருந்த கிணற்றுக்குள் பிணமாய் கண்டெடுத்தனர். மின்சாரம் தடைப்பட்டிருந்த இருள் பொழுது கர்ப்பினிப் பெண்ணின் […]
பூவண்ணன் உச்ச நீதிமன்றத்தின் NOTA ஆதரவு தீர்ப்பை வரவேற்ற பா ஜ க வினர் இந்த தீர்ப்பை கட்டாய வாக்குபதிவின் அவசியத்தை,அதனை நிறைவேற்ற முயற்சிக்கும் குஜராத் அரசின் முயற்சிகளோடு இணைத்து பேசினர் குஜராத்தில் மூன்றாவது குழந்தை பெற்ற நகராட்சி ஒன்றிய தலைவர் அதனால் பதவி விலக வேண்டிய செய்தியும் மக்கள் ஆட்சியை வெறுத்து சர்வாதிகாரதிர்க்கான பாதையை விரும்புவர்களை தெளிவாக நமக்கு அடையாளம் காட்டுகின்றன http://indiatoday.intoday.in/story/bjp-councillor-gujarat-forced-to-quit-for-having-third-child/1/313716.html The 45-year-old businessman, who had defeated […]
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா. அந்தி மயங்கும் ஆழ்ந்த இருட்டில் அன்றைய தினம் நீ ஏன் விலகிச் சென்றாய் தயங்கிக் கொண்டு ? வாசற் கதவைக் கடக்கும் போது ஏதோ நினைத்து முகம் திருப்பினாய் ! உள்ளத்தில் இருந்த தென்ன ? ஓரக் கண்ணில் காட்டி விசித்திர மாய்ப் போனாய் சிரித்துக் கொண்டு ! இதயம் நடுங்கி, இங்கே அமர்ந் துள்ளேன் நான் சிந்தித்துக் கொண்டு. […]
வங்க மூலம் –பக்கிம் சந்திர சட்டர்ஜி மொழியாக்கம்-சத்தியப்பிரியன் பிருந்தாவன லீலைகளின் முடிவு. பாகவத புராணத்தில் ஸ்ரீ கிருஷ்ணரின் இளமைக் கால நிகழ்ச்சிகளாக மேலும் சிலவற்றைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. ஒரு முறை யமுனை ஆற்றில் நந்த கோபர் குளித்துக் கொண்டிருந்தார்.வருண பகவானின் ஆட்கள் அவரை பிடித்துக் கொண்டு தங்கள் தலைவன் முன் கொண்டு நிறுத்துகின்றனர். ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களை துரத்திக் கொண்டு சென்று வருண பகவானிடமிருந்து நந்தகோபரை மீட்டு வந்ததாகக் கூறப் படுகிறது.இதன் மூலம் நாம் அறிந்து […]
[Spacetime Crack Defects in Cosmos] சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா பேபி பிரபஞ்சத்தின் பின்னோடி காலவெளி நார்கள் ! தூக்கணங் குருவிக் கூடாய் ஆக்கப் பட்டு பிரபஞ்சத்தில் பற்பல முறிவுகள் ! காலவெளிப் பழுதுகள் ! அகில முட்டைக் கீறல்கள் ! கனத்தவை ! வலுத்தவை ! நீண்டவை ! புழுக்கள் திணிவு மிக்கவை ! இழுக்க இழுக்க ஒளியாண்டாய் நீளும் சேமியா ! ஒளிமந்தை […]
யூசுப் ராவுத்தர் ரஜித் (புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமனாதபுரம் மாவட்டங்களில் இன்றும் வழக்கிலுள்ள சொல் அத்தம்மா. அத்தா என்றால் அப்பா. அத்தாவின் அம்மா அத்தம்மா.) சுப்ஹு தொழுத கையோடு சேர்ந்திருக்கும் அழுக்குத் துணிகளை அள்ளிக் கொண்டு அரசமரக் குளத்திற்குச் செல்வார் அத்தம்மா. கூடவே நானும் செல்வேன். அதிகாலை எழும் பழக்கம் எனக்கு அத்தம்மா கற்றுக் கொடுத்ததுதான். இரவு கொஞ்சம் வெளிச்சத்தைப் பிசைந்துகொண்ட அதிகாலை. அந்தக் குளத்தை ஒவ்வொரு பொழுதும் முதலில் பார்ப்பது சூரியனும் அத்தம்மாவும்தான். ஒரு செம்ப்ராங்கல்லுக்கு அருகில் […]
“கம்பர் போற்றிய கவிஞர்” என்னும் நூலை அண்மையில் கோவையில் நாஞ்சில் நாடனைச் சந்திக்கும்போது அவர் கொடுத்தார். முனைவர் தெ. ஞான சுந்தரம் எழுதிய அருமையான நூல் அது. ஞானசுந்தரம் அவர்களை நான் முன்பே நன்கு அறிவேன். வளவனூர் திருக்குறட் கழகத்திலும், கடலூர் இலக்கியச் சோலையிலும், கிருஷ்ணாபுரம் நடுநிலைப் பள்ளியிலும் அவரை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். நான் எழுதிய “வைணவ விருந்து” எனும் நூலுக்கு அவர்தான் அணிந்துரை எழுதிக் கொடுத்தார். இந்த நூல் அவர் காரைக்குடியில் […]
சானின் பெற்றோர் அடிக்கடி அவனது எதிர்காலம் பற்றி யோசனை செய்த வண்ணம் இருந்தனர். பிரன்சுத் தூதுவர் வீட்டில் செய்யும் வேலை எல்லாவிதத்திலும் சௌகரியமாக இருந்த போதும், அந்த வேலை மூலம் பணம் சேமிக்க முடியவில்லை. வேறு எந்த எதிர்காலமும் இருந்ததாகத் தோன்றவில்லை. அவர்களது வேலை நேர்த்தி பலருக்கும் தெரிய வந்ததன் காரணமாக, பல விதமான வேலைகள் சார்லஸ் சானைத் தேடி வந்தன. அவற்றை ஒத்துக் கொள்வதா வேண்டாமா என்று எண்ணிக்கொண்டு இருந்த வேளையில், […]
(முன்னேறத் துடிக்கும் இளந்தலைமுறையினருக்கு வெற்றிக்கு வழிகாட்டும் வாழ்வியல் தன்னம்பிக்கைத் தொடர் கட்டுரை) முனைவர் சி.சேதுராமன், தமிழாய்வுத்துறைத்தலைவர், மாட்சிமை தங்கியமன்னர் கல்லூரி, புதுக்கோட்டை. E. Mail: Malar.sethu@gmail.com 28. கடவுள் நிலைக்கு உயர்ந்த ஏழை….. “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப் படும்” அடடடே….வாங்க…வாங்க.. என்னங்க திருக்குறளைச் சொல்லிக்கிட்டே வர்ரீங்க…என்னது மனிதனும் தெய்வமாகலாம் அப்படீங்கற தத்துவத்தை இந்தத் திருக்குறள் சொல்லுதா…?ஆமாங்க ஒருத்தர் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தா எல்லாராலும் கடவுளாக வணங்கப்படுவார். அப்படி வாழ்ந்த தத்துவ […]