அசாரே என்ற இயக்கத்தின் ஊற்றுக்கண்ணாக இருப்பது லட்சக்கணக்கான மத்யத்தர வர்க்கத்தின் அரசியல்வாதிகளின் மீதான கோபமும், வேதனையும், கீழ்த்தட்டு மக்களின் கடுமையான அரசு ஊழியர்களின் மீதான கோபமும்தான் , இந்த இயக்கத்தின் வெற்றியின் சின்னமாக தெரிகின்றது. காந்தியின் சிந்தனையும், ஜெயப்பிரகாஷ் நாரயண் போராட்டமும் வெவ்வேறு இலக்கைநோக்கி சென்றது. இன்றைய தேவை, நாணயமான, ஒழுக்கமுள்ள, சமூக சிந்தனைகூடிய தலைமை பொறுப்பை ஏற்று, மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடக்கூடிய மனிதர்களும். அதனால் ஏற்படும் சட்டமன்றங்களும், நாடாளு மன்றங்களும் துவங்கவேண்டும். இன்றைய மந்திரிகள், […]
தேவசர்மாவும் ஆஷாடபூதியும் ஒரு காட்டில் தனியே ஓரிடத்தில் மடாலயம் ஒன்று இருந்தது. அதில் தேவ சர்மா என்னும் சந்நியாசி யொருவன் இருந்தான். அவன் பல யக்ஞங்கன் நடத்தியதற்குப் பிரதியாக பக்தர்கள் பலர் அவனுக்குப் பல நேர்த்தியான ஆடைகள் அளித்திருந்தனர். அவற்றை விற்று அவன் நாளடைவில் பெருஞ்செல்வம் திரட்டினான். பணம் சேரவே, அவன் யாரையும் நம்பவில்லை. எப்பொழுது பார்த்தாலும் பணப்பையைத் தனது அக்குளில் வைத்துக் கொண்டபடியே திரிந்தான். இரவும் பகலும் அது அவனைவிட்டு நீங்கவே நீங்காது. […]
தமிழில் எஸ். ஷங்கரநாராயணன் 3 >>> ஜீவிதத்தில் ஒவ்வொருத்தனுக்கும் பொதுவான சிக்கல் ஒன்று உண்டு. ஒருகாலத்தில் கட்டித்தழுவி கொஞ்சிக்குலாவி, நீ இல்லாமல் நான் இல்லை, என்கிற தினுசில் ஒட்டி உறவாடிய நட்பு, காலாவட்டத்தில் தீயமர்ந்து விடுகிறது. இந்த நட்பை என்ன செய்ய வேண்டும். வலியப்போய் திரும்ப மூட்டறதா, அல்லது அப்பிடியே விட்டுர்றதா என்பது பிரச்னை. இருவருமே ஒரே ஸ்திதியைக் கடைப்பிடிப்பதாய் இருந்தால், அந்தப் பிரிவு இயல்பாய் தண்ணிக்குள் மீனாய் அடங்கிவிடும். ஆனால் ரெண்டில் ஒருத்தர் கிச்னு பிரகாசமாக […]
அது ஒரு கனவுப்பொழுது இலைகளின் மீதமர்ந்து தவழ்ந்த காலம் படர் கொடியின் நுனி பிடித்து ஊஞ்சலிட்ட பருவம் கனவுகளடர்ந்த விடியற்காலைப்பொழுதுகளில் விரலிடுக்குகளிலிருந்து வழிந்து புள்ளிகளால் நீட்சியுறும் கோலம்… கோலப்பொடியாய் நானிருந்த தருணம் சலனமற்ற நீரோடையில் வீழ்ந்த கல்லாய் அலை கழிந்த நேரம் மிதிவண்டியின் மிதியடிகள் எனை நிந்தித்த வேளையில் கனவுலகில் விடியலை துரத்திய பொழுதுகள் வெய்யிலில் குடை நனைத்து ஈரமாய் உலவின காலம் கொப்புளங்கள் செருப்பணிந்து தேய்ந்து இரணமான கணங்கள் எல்லா வலிகளும் அற்றுப்போனதாய் நான் உணர்ந்த […]
என் இரவுகளும் உன் இரவுகளும் நம் காதல் கனவுகள் சொல்லியே கரைகின்றன… கை கூப்பி காதல் சொல்ல நான் தயார் நீ என்னுடைய காதல் கடவுள் என்பதால்… நீண்ட இரவுகள் சில நேரம் கொடியது.. உன் கனவுகள் இல்லாமல் என் இமைகள் வறண்டு விடுவதால்… மார்கழி குளிரும் சில நேரம் காதல் கனவுகள் சொல்கிறது இருக்கமாய் போத்தி கொள்ளும் என் போர்வை நீ ஆகி போவதால் — ராசை நேத்திரன்
முனைவர் மு. பழனியப்பன் சித. சிதம்பரம், பூம்புகார்க்கவிதைகள், முருகப்பன் பதிப்பகம், பழனியப்ப விலாசம், 48. முத்துராமன் தெரு, முத்துப்பட்டணம், காரைக்குடி, 630001- 2011 ஆகஸ்டு, விலை ரு. 60 கவியரங்கம் என்ற கலைவடிவம் மிக்க ஆளுமை உடையதாக சென்ற இருபதாண்டுகளுக்கு முன்னர் அதாவது கவியரசு கண்ணதாசன் காலத்தில் விளங்கியது. மக்கள் முன்னிலையில் கவிதையைப் படைத்து அவர்களின் கைத்தட்டலில் பெருமை பெற்ற சிறப்பினை கவியரங்கங்கள் பெற்றன. பொங்கல், தமிழ்ப்புத்தாண்டு போன்ற சிறப்பு நாள்களில் ஊடகங்களிலும் இவை நடைபெற்றுப் பெருமை […]
ஜென்னைப் புரிந்து கொள்ள விருப்பந்தான். ஆனால் எங்கிருந்து துவங்குவது? ஒரு ஜென் கதை இது: ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்திக்கு வாரிசாக ஒரே மகள். எனவே குழந்தைப் பருவம் முதலே அவள் விருப்பம் எதையுமே ராஜா தட்டுவதில்லை. அதனால் அவளை வழி நடத்துமளவு யாருமே இல்லை. ராணி செய்த முயற்சிகளையும் ராஜா தடுத்து விட்டார். இளம் பெண்ணாக வளர்ந்து விட்ட இளவரசிக்கு ஒரு நாள் ஒரு கண்ணில் அரிப்பும் எரிச்சலும் வந்தது. அந்தக் கண்ணைக் கசக்கிக் கொண்டே […]
குறைந்தது வாரத்திற்கு இரண்டு இலக்கியக்கூட்டங்கள் சின்ன அறையில் எண்ணிக்கைக் குறைவில் வருகையாளர்கள் அவர்களில் அதிகம் எழுத்தாளர்கள் எழுத்தும் வாசிப்பும் தவம் பெரிய அரங்கில் அதிக அளவில் வருகையாளர்கள் சிற்றுண்டி விரும்பிகள் அதிகம் சுட்டுதலும் சுருங்கக்கூறுதலும் குறைவு பெரிய அரங்கில் வழிபாடும் துதிபாடுதலும் அதிகம் அது முகம்காண வந்தக்கூட்டம் வந்து திரும்புவது அதன் வாடிக்கை சிற்றரங்கில் வசைபாடுதலும் கிண்டலும் கேளியும் அதிகம் உட்காருவதில் ஒரு ஒழுங்கில்லை அங்கே எல்லாரிடத்திலும் வெளிப்படுகிறது கோபம் அவர்களின் கோபத்தில் யாரும் தப்புவதில்லை […]
பிச்சினிக்காடு இளங்கோ 1 அட்சயபாத்திரம் அள்ள ஏதுமற்ற வெற்றுப்பாத்திரமாய்… கொட்டிச் சிரித்ததுபோய் வற்றி வதங்கி ஈரமில்லா அருவியாய்… கிளைகளில்லாத மரங்களாய் இலைகளற்ற கிளைகளாய் பச்சையமில்லா இலைகளாய் நிரம்பிய வனமாய்… மலர்களின் இடத்தை முட்கள் அபகரித்துக்கொண்டன வெளிச்சத்தின் தளத்தை இருள் கவ்விக்கொண்டது கரையவேண்டியது இறுகிப்போனது உதிரும் கனிகளின்றி கசக்கும் காய்களோடு நிரந்தரமாய்… சிரிக்காமல் மணக்காமல் நாறிக்கொண்டிருக்கிறது குப்பைத்தொட்டியாய்
வெகு தூரப் பயணம்.. இது… ஆனால் ஒரே இடத்தில் இருந்து கொண்டே பயணம் செய்யும் வினோதம்! இங்கு தான் – கண்கள் இரண்டை மூடினாலும் பார்வை வரும்… ஒளி முதல்கள் இல்லாமலே வெளிச்சம் வரும்… வாய் கூடத் திறவாமலே வார்த்தை வரும்… ஓராயிரம் குண்டுகள் வெடிக்கும் ஆனால் ஒரு சலனமும் இருக்காது… ஒரு மொட்டு மலர்ந்து விட்டால் எத்தனை கோடி சப்தங்கள் இங்கே…! தொலை தூரப் பயணம்… இங்கே தொடுவானில் தொங்கு பாலம் தொங்கும்… அதிலே… “குதி”யிலாமல் […]