வால்ட் விட்மன் வசனக் கவிதை -37 என்னைப் பற்றிய பாடல் – 30

This entry is part 22 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

(Song of Myself)

கடவுளைப் பற்றி .. !

 Image

 (1819-1892)

(புல்லின் இலைகள் -1)

மூலம் : வால்ட் விட்மன்
தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

நான் சொல்லி இருக்கிறேன்

ஆத்மா உடம்பை விட மிஞ்சிய தில்லை !

உடம்பும் அதன் ஆத்மாவை விட

உயர்வான தில்லை !

இறைவன் கூட

ஒருவன் சுயத்துவத் துவக்கு

மேலான தில்லை !

இரு நூறடி தூரம்

மனித அனுதாப மின்றி நடக்கும்

ஒருவன்,

தன் சவப் போர்வையில்

மரணம் நோக்கி

விரைபவன் !

நீயோ, நானோ கையில் காசின்றி

பூமியில்

ஒரு சிறு பகுதியை வாங்கலாம்.

கண் ஒன்றால் நோக்குவது

காலம் பூராவும் கற்ற

கல்வி அறிவைக் குழப்பி விடும் !

 

 

வணிகமோ, ஊழியமோ எதுவு மில்லை

பணி செய்பவன்

உயர வில்லை என்றால் !

பிரபஞ்ச ஆழியின் அச்சாணி

வளையம் சுமக்க

மென்மை யான உலோகம்

கிடையாது !

ஆடவர், மாதருக்குச் சொல்கிறேன்:

உமது ஆத்மா குளிர்ச்சியுடன்

அமைதி யாக நிற்கட்டும்,

கோடிக் கணக்கான

பிரபஞ்சங்களின் முன்பாக.

மனித இனத்துக்கு

இனியோர் அறிவுரை சொல்வேன்:

கடவுளைப் பற்றி

மிக்க ஆர்வம் கொள்ளாதீர் !

இறைவன் பற்றியும்

மரணம் பற்றியும் நான் எவ்விதப்

புரிதலில் உள்ளேன்

என்றெவனும்

ஊகிக்க இயலாது !

++++++++++++++++++++++

தகவல்:

  1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]
  2.  Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm
    Cowley [First 1855 Edition] [ 1986]
  3. Britannica Concise Encyclopedia [2003]
  4. Encyclopedia Britannica [1978]
  5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]
  6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/
    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************
jayabarat@tnt21.com [S. Jayabarathan] (August 14, 2013)
http://jayabarathan.wordpress.com/

Series Navigationகருத்தரங்க அழைப்புவிரதமிருப்பவளின் கணவன் ; தூங்காத இரவுகள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *