திண்ணையின் இலக்கியத் தடம்-22

This entry is part 8 of 20 in the series 16 பெப்ருவரி 2014

மார்ச் 2 2003 இதழ்:

பரத நாட்டியம் சில குறிப்புகள்-1 வைஷாலி- தமிழ் நாட்டில் பரதக் கலையின் நான்கு ஆசான்கள்- சின்னைய்யா, பொன்னைய்யா, சிவானந்தம் வடிவேலு.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303021&edition_id=20030302&format=html )

சோழ நாடனின் கொடுமுடி கோகிலம் சுந்தராம்பாள் வரலாறு- ஒரு மதிப்புரை- வெளி ரங்கராஜன்- சிறுவயதிலும் மண வாழ்விலும் பட்ட துன்பங்களை மீறி அவர் கலையின் மீது கொண்டிருந்த ஈடுபாடு அதியசயிக்க வைப்பது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303022&edition_id=20030302&format=html )

உலக வளத்தை நோக்கி முதல் அடிச்சுவடுகள்- சுந்தர ராமசாமி- இந்திய படைப்பு வளத்தில் நம் கவனம் பதிவது கூடக் காலப்போக்கில் மங்கி விட்டது என்று சொல்லலாம். தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவரும் இந்தியப் படைப்புகளைக் கூட நம் வாசகர்கள் தேடிப் படிக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303024&edition_id=20030302&format=html )

கிரிக்கெட் நாகரிகம்- காலச்சுவடு கண்ணன்
மத்திய தர வர்க்கத்துக்கு கிரிக்கெட் லெகுவான தேசப் பற்றின் வடிகாலாகி விட்டது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303025&edition_id=20030302&format=html )

விக்ரமாதித்யன் கவிதைகள்- ஒரு வாசிப்பு – சேவியர்-

அன்று மறதியில்
இன்று
போதையில்
செருப்பு தொலைவது மட்டும்
மாறவே இல்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60303023&edition_id=20030302&format=html )

உணவும் உயிரும்- ஜாக் லண்டனின் உயிர் ஆசை – எனக்குப் பிடித்த கதைகள்-50- பாவண்ணன்- காட்டில் வழி தவறிப் போகும் ஒருவன் உணவுக்காகவும் ஒரு ஓநாயிடமிருந்து உயிரைக் காத்துக் கொள்ளவும் போராடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பும் கதை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60303024&edition_id=20030302&format=html )

மார்ச் 9 2003 இதழ்: பரீட்சா நாடகக் குழு வெள்ளி விழாக் கொண்டாடுகிறது – ஞாநி
(www.thinnai.com/index.php?module=displaysection&edition_id=20030309&format=html )

பயணக் குறிப்புகள் 2003- காஞ்சனா தாமோதரன்- தாம் இந்தியா வந்திருந்த போது சமகாலப் படைப்பாளிகளுடனான சந்திப்பு மற்றும் உரையாடல்கள் பற்றிய குறிப்புகளைக் கட்டுரையாகத் தருகிறார் காஞ்சனா.
(/wwwthinnai.com/index.php?module=displaystory&story_id=203030910&edition_id=20030309&format=html)

திறக்கும் கதவுகளும் மூடும் கதவுகளும் (மு.தளயசிங்கத்தின் ‘கோட்டை’- எனக்குப் பிடித்த கதைகள்-51- பாவண்ணன் – ஒரு இளம் கணவன் தன் மனைவிக்குத் தெரியாமல் தன் வீட்டில் தங்கியிருக்கும் இளம் பெண்ணை நெருங்க முயலுகிறான். தனக்குள் உள்ள மனத்தடைகளால் அவனால் முடியவில்லை.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60303092&edition_id=20030309&format=html )

மார்ச் 17, 2003 இதழ்:
பரத நாட்டியம் சில குறிப்புகள்- 2- வைஷாலி- நாட்டியத்தின் உட்பிரிவுகள் மூன்று அவை- நிருத்தம், நிருத்தியம், நாட்டியம்
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303178&edition_id=20030317&format=html )

புலி நகக் கொன்றையை முன் வைத்து ஒரு உரையாடல்- பி.ஏ.கிருஷ்ணன் ஜெயமோகன் நடுவே புலி நகக் கொன்றை நாவலை முன் வைத்து நடந்த மின்னஞ்சல் உரையாடலின் தொகுப்பு. தொகுப்பாளர் அருண்மொழிநங்கை.

(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60303171&edition_id=20030317&format=html )

மோகமும் வேகமும் – த.நா.குமாரசாமியின் ‘சீமைப்பூ’- எனக்குப் பிடித்த கதைகள்-52- பாவண்ணன்- டெல்லியில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் தம் கிராமத்து வீட்டில் மிகவும் சிரமப் பட்டு சீமைப்பூ என்னும் ஊதாப் பூச் செடியை வளர்க்கிறார். ஊரே அதிசயிக்கிறது. உள்ளூர் புரோகிதர் ஒரு நாள் இது ‘கடல் பாலைப்பூ’ குளம் குட்டையில் பூப்பது. இதை வீட்டில் வைப்பது நல்லதல்ல என்று கூறி குளம் குட்டையில் அந்தப் பூக்களைக் காட்ட அவரது கர்வம் அழிகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60303173&edition_id=20030317&format=html )

மார்ச் 23,2003 இதழ்:பன்முகத் தன்மை (pluralism) பற்றி: ஐசையா பெர்லின்- பன்முகத் தன்மையின் எதிரி ‘ஒற்றை உண்மைவாதம்’ (monism) ஆகும். உண்மை ஒன்றே அதன் கீழ் எல்லாமும் திரள வேண்டியது அவசிய, என்பது அந்தப் பழைய கருத்து.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303238&edition_id=20030323&format=html )

நிலையற்ற வாழ்வும் நிறைவேறாத கனவும்- வ.அ.ராசரத்தினத்தின் தோணி- எனக்குப் பிடித்த கதைகள்-53- பாவண்ணன்- கிழக்கிலங்கையைச் சேர்ந்த ராஜரத்தினத்தின் கதையில் வாடகைத் தோணியிலிருந்து சொந்தத் தோணிக்கு மாறுவது அப்பா மகன் இரு தலைமுறைக்கு நிறைவேறாத கனவாக இருக்கிறது. குடிசையின் கூரை ஓட்டை வழி வரும் பொன்னிற சூரிய ஒளித் துண்டு ஒரு படிமமாக இக்கதையில் வருகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60303231&edition_id=20030323&format=html)

மார்ச் 29,2003 இதழ்:

பரத நாட்டியம் சில குறிப்புகள்-3- வைஷாலி- அபினயத்துக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து ஆடப்படும் நடனம் பதம் எனப்படும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203032912&edition_id=20030329&format=html )

இஸ்லாம் அமைதியின் மார்க்கமா- போரின் மதமா? – ஒரு கருத்தரங்கு- அமெரிக்காவின் ‘ப்ரண்ட்பேஜ்’ பத்திரிக்கை நடத்திய கருத்தரங்கின் மொழிபெயர்ப்பு- பகுதி-1
()

ஜார்ஜ் டபிள்யூ புஷ்: தீவிரவாத கிறிஸ்தவ மத அடிப்படைவாதி-காரி ஸ்லோன்- உலகத்தை நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையே நடக்கும் ஒரு ஒழுக்கவியல் ரீதியான போர்க்களமாக புஷ் காண்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20303296&edition_id=20030329&format=html)

சமீபத்திய சிறந்த நூல்கள் – ஒரு பட்டியல் – ஜெயமோகன் – 16 நாவல்கள், 16 சிறு கதைத் தொகுதிகள், 10 கவிதைத் தொகுதிகள், 15 பொது நூல்கள் , 14 மொழிபெயர்ப்பு நூல்கள் ( என் குறிப்பு- திலீப் குமாரிடம் கிடைக்கும் என்று அவரது மைலாப்பூர் முகவரியையும் தந்துள்ளார் ஜெயமோகன். ஆனால் திலீப் குமார் இப்போது புத்தகம் விற்பதில்லை என்பது நமக்கு இழப்பே.)
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60303291&edition_id=20030329&format=html )

இயல்பும் இன்பமும் – மா.அரங்கநாதனின் ‘சித்தி’ – எனக்குப் பிடித்த கதைகள் -54- பாவண்ணன்- ஒரு கிராமப்புறத்தைச் சேர்ந்த இளைஞனின் ஓட்டத் திறமையை ஒரு காவல்துறை அதிகாரியும் நிபுணரும் கணடரிந்து அவனை அகில இந்தியப் போட்டிகளில் பங்கு பெறும் அளவு பயிற்சி தருகின்றனர். உலக அளவுப் போட்டிக்கு முன் அவன் தரும் பேட்டியில் ‘நான் நாட்டின் பெயரை மேம்படுத்துவேன்’ என்றெல்லாம் சொல்லாமல் ‘ஓடுவது எனக்கு மகிழ்ச்சி தரும்’ என்று மட்டுமே சொல்கிறான். பல படைப்பாளிகளும் அது போலத் தான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60303292&edition_id=20030329&format=html )

ஏப்ரல் 6, 2003 இதழ்:
இஸ்லாம் அமைதியின் மார்க்கமா- போரின் மதமா? – ஒரு கருத்தரங்கு- அமெரிக்காவின் ‘ப்ரண்ட்பேஜ்’ பத்திரிக்கை நடத்திய கருத்தரங்கின் மொழிபெயர்ப்பு- பகுதி-2- எந்த மதத்தையும் அதன் புனித நூலிலிருந்து வெட்டியெடுக்கப் பட்ட சில மேற்கோள்கள் மூலம் மதிப்பிடக் கூடாது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20304066&edition_id=20030406&format=html )

பேதம் உணராத குழந்தைமை- அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா’- எனக்குப் பிடித்த கதைகள்- 55- பெரியவர்களின் உலகம் புரியாத சிறுவன் ஒரு மாமா கொடுத்த கடித்தை அக்காவிடம் கொடுத்த பின் அக்கா ஏன் அழுகிறாள் மற்றும் தன்னை ஏன் அப்பா அடித்தார் என்று புரியாமல் அழுதபடி அக்காவின் அரவணைப்பில் கண்ணுரங்குகிறான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60304061&edition_id=20030406&format=html )

ஏப்ரல் 13, 2003 இதழ்:
தமிழ் நாட்டின் கோவில் காடுகள்- 1-எம்.அமிர்தலிங்கம் – கோவில் காடுகள் அந்தந்த கிராமத்தில் கிராம தெய்வம் வசிக்கவென்று மனிதர் தொடாமல் விடப்பட்டிருக்கும் பகுதி.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20304135&edition_id=20030413&format=html)

மறக்கப் பட்ட புன்னகை- எம் எஸ் கல்யாணசுந்தரத்தின் படைப்புகள்- ஜெயமோகன் – எம் எஸ் கல்யாணசுந்தரத்தின் ஆக்கங்களின் கருக்கள் அக்காலகட்டத்துக்குரியவை. ஆனால் அவற்றை இன்று வரை பழையவை ஆகாமல் காக்கும் அம்சம் இந்த நகைச்சுவைக் கூறு தான்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60304131&edition_id=20030413&format=html)

ஆசான் விருது ஏற்புரை- சுந்தர ராமசாமி- கருப்பையில் வளரும் குழந்தை தன் நாபிக் கொடி வழியாகத் தாயுடன் கொண்டிருக்கும் பிணைப்பு போல் கலைஞன் அவன் வாழும் காலத்துடன் பிணைக்கப் பட்டிருக்கிறான் என்ற என் அடிப்படை நம்பிக்கையிலேயே என் படைப்புகள் அனைத்தும் உருவாகி இருக்கின்றன.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60304132&edition_id=20030413&format=html )

கடவுளும் குழந்தையும் – பி.எஸ். ராமைய்யாவின் “நட்சத்திரக் குழந்தைகள் ‘ -எனக்குப் பிடித்த கதைகள் -55- பாவண்ணன்- ‘நாம் ஒரு நிஜம் சொன்னால் புதிதாக ஒரு நட்சத்திரம் பிறக்கிறது’ என்று அப்பா சொன்னதை நம்பிய குழந்தை ஒரு எரி நட்சத்திரம் விழுவதைப் பார்த்து ‘யாராவது பொய் சொல்லி நட்சத்திரம் விழுந்து விட்டதோ’ எனக் கவலையாய் அழுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60304133&edition_id=20030413&format=html )

ஏப்ரல் 19,2003 இதழ்:

என்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு- எஸ்.அருண்மொழி நங்கை- வண்ணதாசன், நாஞ்சில் நாடன் முதலியோர் படைப்புகளில் காணப்படும் வாழ்க்கை மீதான கலை ரீதியான விமர்சனமோ கோணங்கி பா.வெங்கடேசன் போன்றவர்களின் எழுத்திலே இல்லை. தயவு செய்து பாவனை செய்யாதீர்கள். ஸ்டண்ட் அடிக்காதீர்கள். உழைத்து, தியானித்து, ஆத்மார்த்தமாக எழுதுங்கள்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=203041910&edition_id=20030419&format=html )

ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை- சுந்தர ராமசாமி- பொதுவாகத் தமிழர்கள் மிகுந்த தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள் என்பது என் எண்ணம்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20304192&edition_id=20030419&format=html )

இஸ்லாம் அமைதியின் மார்க்கமா- போரின் மதமா? – ஒரு கருத்தரங்கு- அமெரிக்காவின் ‘ப்ரண்ட்பேஜ்’ பத்திரிக்கை நடத்திய கருத்தரங்கின் மொழிபெயர்ப்பு- பகுதி-3-இறுதிப் பகுதி- மத விஷயத்தில் கட்டாயத்துக்கு இடமில்லை- குர்ரான்- 2:256
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20304193&edition_id=20030419&format=html )

தமிழ் நாடின் சுற்றுச் சூழல் பாரம்பரியம் – டாக்டர் நந்திதா கிருஷ்ணா- மிக முக்கியமான சுற்றுச்சூழல் பாரம்பரியம் தமிழ்நாட்டின் கோயில் காடுகளைப் பராமரிக்கும் பாரம்பரியமாகும்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20304196&edition_id=20030419&format=html )

அழுக்காறும் ஆவேசமும் (எஸ்.பொன்னுதுரையின்- அணி- எனக்குப் பிடித்த கதைகள் -57- பாவண்ணன்- யாழ்ப்பாணத்தில் ஒரு முடிதிருத்துபவரின் மகன் இளைஞன். லெனின் படத்தைக் கடையில் மாட்டும் அளவு இடது சாரி. அவன் உள்ளாட்சித் தேர்தலில் மூன்று முறை போட்டியிட்டுகிறான். மூன்றாம் முறை இரண்டு வாக்கு வித்தியாசத்தில் அவன் ஜெயித்ததால் வெறி கொண்ட ஒரு மேல்ஜாதி ஆள் அவனைச் சுட்டுக் கொல்கிறார்.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60304192&edition_id=20030419&format=html )

ஏப்ரல் 27,2003 இதழ்:

மு.வ. ஒரு படைப்பாளியா?- நாகரத்தினம் கிருஷ்ணா- ஒருவன் படைப்பாளியா இல்லையா என்பதைத் தீர்மானிப்பது விமர்சகர்கள், வாசகர்கள், காலம் என எல்லோரின் பங்களிப்பும் அதற்கு உண்டு.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60304271&edition_id=20030427&format=html )

“நீங்கள் அதன் மேல் தான் நிற்கிறீர்கள்’- அ.முத்துலிங்கம்- நேர்காணல் – ஜெயமோகன்
கடைசி நாள்
கரைக்கு வந்தோம்
அலை மட்டும் திரும்பப் போயிற்று
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60304272&edition_id=20030427&format=html )

அன்பாலான உலகம்- து.ராமமூர்த்தியின் ‘அஞ்ஞானம்’ – எனக்குப் பிடித்த கதைகள் -58- பாவண்ணன்- பாட்டியின் மரணத்தை ஒட்டி சந்திக்கும் திருமணமான சகோதரிக்கும் சகோதரனுக்கும் இடையே ஒட்டுதல் இல்லை. காரணத்தை யோசித்துப் பார்க்கும் போது அவளுக்கு இந்தத் தலைமுறையில் சென்ற தலைமுறையுடன் ஒப்பிடத்தக்க ஒட்டுதல் இல்லை என்று தோன்றுகிறது.
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60304274&edition_id=20030427&format=html )

பாரதி இலக்கிய சங்கம்- சொல் புதிது மீதான விமர்சனம் பற்றிய தொகுப்பு- சிவகாசி திலகபாமா
(www.thinnai.com/index.php?module=displaystory&story_id=60304275&edition_id=20030427&format=html)

Series Navigation
author

சத்யானந்தன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *