This entry is part 14 of 16 in the series 9 ஜூலை 2017
மகிழினி காந்தன்
சுவிஸ்
ஈக்களைப்போல்
அலைபாயும் விழிகள்
காற்றில்
விரித்த புத்தகம் போல்
பட படக்கும் நெஞ்சம்
மேல் மூச்சில்
வந்து போகும் சுவாசம்
வெற்றிடத்தில் தேடிப்பார்க்கும்
கைகள்
எதிர்பார்ப்பும் அங்கலாய்ப்பும்
கதிர் கொண்டு கவிழும்
நெற்பயிர்போல்
தாங்காது வீழாது தவிக்கும்
என் நெஞ்சுக்கு
உன் வார்த்தை ஒன்றே
தேற்றும் அமிர்தம்!
Series Navigationநூல்கள், குறும்படம் அறிமுகம் : கனவு இலக்கிய வட்டத்தின் ஜீலை மாதக்கூட்டத்தில்‘மிளகாய் மெட்டி’ ஆசிரியர் : அகிலா அருகாமை உறவுகளின் வாழ்வு..