உமர் கயாம் ஈரடிப் பாக்கள்

author
0 minutes, 32 seconds Read
This entry is part 1 of 12 in the series 16 ஜூலை 2017

பாரசீக மூலம் :  உமர் கயாம் ரூபையாத்

ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு

தமிழாக்கம் :  சி. ஜெயபாரதன், கனடா.

[88]

காதலி ! நீயும் நானும் விதியுடன் சதி செய்து

சோக வாழ்வு முழுதும் புரிந்து கொள்வோமா

நாமதைத் தூள் துளாய்ச் சிதைத்த பிறகு

நம் இதய விருப்பப்படி வடிக்க வில்லையா !

[88] 

Ah Love! could thou and I with Fate conspire
To grasp this sorry Scheme of Things entire,
Would not we shatter it to bits – and then
Re-mould it nearer to the Heart’s Desire!

[89]

தேய்மை அறியா என்னினிய நிலவு,

திரும்பப் பொங்கி எழும் வான்நிலவு,

எத்தனை தரம் வீணாய் ஒரே பூங்காவில்

எழுவது போல் தெரியுது என் பின்னால் !

[89] 

Ah, Moon of my Delight who know’st no wane,
The Moon of Heav’n is rising once again:
How oft hereafter rising shall she look
Through this same Garden after me – in vain!

[90]

எப்போது அவளைப் போல் தோழி நீ நடப்பாய்

புல் மீது விரிந்த தாரகை விருந்தின ரிடையே

உனதினிய பணியில் சிகரம் தொடுவாய், நான்

புரிந்த தொன்று – வெற்றுக் கிண்ணக் கவிழ்ப்பு !

[முற்றும்]

[90]

And when like her, oh Saki, you shall pass
Among the Guests star-scatter’d on the Grass,
And in your joyous errand reach the spot
Where I made one – turn down an empty Glass!

TAMAM SHUD

[The End]
Series Navigationகவிதை
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *