மனம் ஒடிந்து போச்சு !

author
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 7 in the series 28 அக்டோபர் 2018

 

மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழ்த் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

 

நீ பொய் சொல்வது

எனக்குத் தெரியா தென்றா

நினைக்கிறாய் ?

உன்னால் அழ முடியாது !

காரணம் நீ

என்னைப் பார்த்து நகைக்கிறாய் .

மனம் உடைந்து போச்சு.

 

மெய்யாக எனக்கு

எப்படிச் சிரிக்க முடியு துனக்கு ?

உன்னால் தான்

குப்புற வீழ்ந்து கிடக்கிறேன்,

தெளிவாய் நீ அதைத்  

தெரிந்து கொண்டுள்ளாய் ! 

காதலன் வாங்கிப் போட்ட

மோதி ரத்தை

மாது நீ, தூக்கி எறிந்தாய் !

நாளொரு பொழுதும்

நடக்கும் வேடிக்கை இது !

தனித்தனி யாய் வாழ்கிறோம் 

எவரும் இல்லை நமது

அருகில் !

“தொடாதே” என்று

தடுக்கிறாய் முணுமுணுத்து !

என் மனம் உடைந்து

போச்சு மாதே !

எப்படிச் சிரிப்பு வருது 

உனக்கு  ?

 

++++++++++++++

Series Navigationபட்டினி கொலை என்னும் பிரிட்டனின் அரசாட்சி சாதனம்குன்றக் குறவன் பத்து
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *