நிலவில் மனிதன் முதல் தடம் வைப்பு
[1969 ஜூலை 20]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
++++++++++++++++
- https://www.space.com/26565-apollo-11-moon-mission-day-2.html
- https://www.nasa.gov/centers/goddard/news/series/moon/first_lunar_program.html
- https://www.timesnownews.com/technology-science/article/watch-chandrayaan-2-launch-live-register-to-watch-the-gslv-blastoff-from-satish-dhawan-space-centre/448129?utm_source=pushengage&utm_medium=pushnotification&utm_campaign=pushengage
- .http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village
- https://en.wikipedia.org/wiki/Apollo_program
- http://spaceq.ca/canadian-engineers-helped-guide-americas-mercury-gemini-and-apollo-programs/?u
- https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwChmQRcbvdJsMGVmhcNvqVwDWW
- https://www.space.com/43018-lunar-orbital-platform-gateway.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20190116-sdc
- https://www.timesnownews.com/technology-science/article/watch-chandrayaan-2-launch-live-register-to-watch-the-gslv-blastoff-from-satish-dhawan-space-centre/448129?utm_source=pushengage&utm_medium=pushnotification&utm_campaign=pushengage
- https://www.history.com/topics/space-exploration/moon-landing-1969
- https://solarsystem.nasa.gov/news/856/nasa-is-aboard-first-private-moon-landing-attempt/
- https://www.bbc.com/news/science-environment-48907836
- National Geographic Celebrating the 50 th Anniversary of Apollo 11 The Moon Our Lunar Companion [July 2019]
++++++++++++++++++++
++++++++++++++++++++++++++++++++
நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில்
கால் வைத்து
ஐம்பது ஆண்டுகள் கடந்து
நாசா மீண்டும்
நிலவுக்குப் பயணம்
செவ்வாய்க் கோளில் குடியேற !
நுண்ணிய ஏழு கருவிகள்
மண்தளப் பரப்பை விரிவாய்ப்
பதிவு செய்யும்.
துருவப் பகுதியில்
ராக்கெட் ஒன்றை நிலவுமேல்
தாக்கிடச் செய்து
தளத்தில் குழி பறித்து
தண்ணீர் உள்ளதா எனக் கருவிகள்
மண்ணுளவு செய்யும் !
வெண்ணிலவில் குடியேறத்
திட்டமிட்டுள்ளது ரஷ்யா !
நிலவில் ஓய்வெடுத்து
நிரந்தர ஆய்வுகள் புரிய ஏதுவாகும் !
செவ்வாய்க் கோள்
செல்லும் விமானிகள் தங்க
ஓய்வுச் சுற்று நிலையம் நிலவைச்
சுற்றி வர நாசா தொடங்கும்
புதிய தோர் திட்டம் !
++++++++++++
NASA named these three astronauts as the prime crew of the Apollo 11 lunar landing mission in May 1969 in Cape Canaveral, Fla. Posing from left to right, are Neil A. Armstrong, commander; Michael Collins, command module pilot; and Edwin “Buzz” Aldrin Jr., lunar module pilot.
File Photo courtesy of NASA | License Photo
Country | United States |
---|---|
Organization | NASA |
Purpose | Crewed lunar landing |
Status | completed |
Program history | |
Cost | $25.4 billion (1961 – 1973)[1]($153 billion 2018)[2] |
Duration | 1961–1972 |
First flight | AS-201, February 26, 1966 |
First crewed flight | Apollo 7, October 11–22, 1968 |
Last flight | Apollo 17, December 7–19, 1972 |
Successes | 16 |
Failures | 2: Apollo 1, Apollo 13 |
Partial failures | 1: Apollo 6 |
Launch site(s) | Cape Kennedy Air Force Station LC-34Cape Kennedy Air Force Station LC-37Kennedy Space Center LC-39 |
Vehicle information | |
Vehicle type | Capsule/Lander |
Crew vehicle | Apollo command and service moduleApollo Lunar Module |
Crew capacity | 3 |
Launch vehicle(s) | Saturn IBSaturn V |
வட அமெரிக்கா கண்டுபிடிப்புக்குப் பிறகு மனிதர் புதிதாய்த் தடம் வைத்த அண்டக் கோளம் நிலவு
50 ஆண்டுகட்கு முன்பு மனிதர் முதன்முதல் நிலவில் கால் வைத்தார். அது நமது துணைக் கோள். அருகில் இருக்கும் அண்டம். நிலவு இல்லையேல், அலை இல்லை, பருவங்கள் இல்லை. சூரியனைச் சுற்றிவரும் பூமி தட்ப / வெப்பம் மாறி, தன்னிலை மாறி புதியதோர் குறுகிய பாதையில் சுற்றி, சூழ்வெளி மாறி, வெப்ப கோளமாய் உயிரினத்தை எரித்து விடும். மனிதன் அந்த துணைக்கோளைப் பற்றி ஆழமாய் தெரிந்து கொள்ள வேண்டும். அவ்விதம் நிலவைப் பற்றி அறியும் போது, மனிதன் நமது பிரபஞ்சம் எவ்விதம் தோன்றியது என்றும் தெரிந்து கொள்ள முடியும். இதுவரை 12 அமெரிக்க விண்வெளித் தீரர்கள்தான் நிலவில் கால் வைத்து, மண் மாதிரிகள் சுமந்து, பூமிக்கு மீண்டுள்ளார்கள். இந்த நிலவுப் பயணத் திட்டங்கள் அபொல்லோ என்ற பெயரில் 1961 – 1972 ஆண்டுகளில் நாசா நிறைவேற்றி வந்தது.
50 வருடங்களாக அடுத்தடுத்து விண்ணுளவிகளும், தளவூர்தி களும் நிலா கோளுக்குப் பன்முறை அனுப்பி, ஆங்கு நீர்ப்பனிக் கட்டிகள் துருவப் பகுதிகளில் இருப்பதை, விஞ்ஞானிகள் அறிந்து விட்டார். நிலவின் மேற்தட்டு தடிமனை [Thickness of the Crust] அளந்து விட்டார். மேற்தளத்தில் உள்ள இரசாயனப் பொருட் களைப் பதிவு செய்துள்ளார். 2019 ஜனவரியில் புதியதோர் விண்ணுளவியை விஞ்ஞானிகள் அனுப்பியுள்ளர். அதுபோல் 2019 /2020 ஆண்டுகளில் நிலவுக்குப் பற்பல விண்ணுளவுச் சிமிழ் களை உலக நாடுகள் மீளாய்வு, மேலாய்வுகள் நடத்தும். அந்த பயணங்கள் யாவும் மனிதரை மீண்டும் அனுப்பி, நிலவுத் தளத்தில் நிலவியுள்ள நிலவுப் பனிக்கப்டியை உருக்குவது, அனுப்புவது, சேமிப்பது, நீரைப் பிரிப்பது போன்ற வினைகள் செய்யப்படும்.
செவ்வாய்க் கோளுக்கு மனிதர் போவதற்கு முன்பு இரண்டு இடைநிலைத் தங்குமிடங்களை நாசா கட்டி முடிக்கத் திட்டங்கள் உள்ளன. முதலாவது, பூமியில் உள்ளதுபோல், நிலவைச் சுற்றி வரும் நுழைவு நிலையம் [Lunar Gateway Station] அமைப்பு. அடுத்து இரண்டாவது நிலவின் தளத்தில் பயணிகள் தங்கவும், ராக்கெட் எரிக்கரு நிரப்பிக் கொள்ளவும் தேவையான நிலவுக் கூடகம் அமைக்கும் திட்டம்.
1957 இல் உலக நாடுகள் வியப்புறும் வண்ணம் முதன்முதல் மனிதர் இல்லாது, புவியைச் சுற்றும் ஸ்புட்னிக் -1 [Sputnik -1] துணைச்சிமிழை ரஷ்யா ஏவி அண்டவெளி யுகப் போட்டியைத் துவங்கியது. பிறகு மனிதர் இயக்கும் விண்கப்பல்களை, ரஷ்யா, அமெரிக்கா இருநாடுகளும், பூமியையும், நிலவையும் சுற்றி விஞ்ஞானத் தகவல் அனுப்பி வந்தன. இறுதியில் அமெரிக்கா வின் நீல் ஆர்ம்ஸ்டிராங், மூவர் இயக்கும் அப்பொல்லோ -11 விண்சிமிழில் பயணம் செய்து, நிலவில் தன் முதல் தடத்தை இட்டார். அச்சிறிய மனித தடம், 1969 இன் அசுர மானிடத் தடமாகக் கருதப்படுகிறது.
1969 ஜூலையில் முதன்முதலில் மனிதன் நிலவில் கால்வைத்த வரலாற்று நிகழ்ச்சிக்கு
- பணி புரிந்தவர் : 400,000 பொறியியல் வல்லுநர்.
- தொழிற்துறைகள் : 20,000
- அப்பொல்லோ நிதிச் செலவு : 24 பில்லியன் டாலர் [1969 நாணய மதிப்பு] [150 பில்லியன் டாலர்] [2019 நாணய மதிப்பு]
+++++++++++++++++++++++++++++
நமக்கு நிலவு ஓர் ஆய்வுக்கூடம். சூரிய குடும்ப வரலாற்றின் தொகுப்பகம்; விண் எரிகற்கள், வால்மீன்கள் தாக்கம், பரிதிப் புயலடிப்பு யாவும் அதன் மண் தளத்தில் எழுதப்பட்டுள்ளன. ஒரு நிலவுச் சிற்றூர் [Moon Village] அமைப்பு விஞ்ஞானிகளுக்கு அதன் கோள் பண்பாடுகளைத் தேடி அறியவும், பூர்வீகப் பூமித் தோற்றம் அறியவும் உதவி செய்யும்.
ஈசாவின் குறிக்கோள் : நிலவுப் பயண நிலையம் திறந்த அகில நாட்டுப் பயன்பாடாய்ச் சிறிது சிறிதாய்ப் பெரிதாக வேண்டும் என்பதே. வரும் நாட்களில் மனிதருக்குத் தேவையான தொழில்நுட்ப அமைப்புகள் கட்டப் பட்டு, அவர் பாதுகாப்பாய்ச் சூரிய மண்டலத்துக்கும் அப்பால் செல்லும் பயிற்சியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யான் வொர்னர் [Jan Worner, Director, European Space Agency (ESA)]
நிலவிலே பயண நிலையம் அமைத்தபின் என்ன செய்வது ? ஒன்று மனித விண்வெளித் தேடல் நிறுத்தப் பட்டு எதுவும் நிகழாதிருப்பது. அல்லது அடுத்தோர் நிலையம் அமைப்பது. அதை நினைத்துப் பார்ப்பதே கடினம். அல்லது வேறெங்காவது போவது. நான் உறுதியாக நம்புவது : நிலவே நமது அடுத்த ஆய்வு உலகம்.
நாம் வேறெந்த தூரக் கோளுக்கோ, அல்லது செவ்வாய்க் கோளுக்கோ போகத் துணிவதற்கு முன்னால், மனிதர் தூசித் தளத்தில், பரிதிக் கதிர்வீச்சு மிக்கச் சூழ்வெளியில் மீண்டெழும் பயிற்சியைப் பெறவேண்டும். செவ்வாய்க் கோளுக்கு மனிதரை அனுப்புவதற்கு விண்வெளிப் பயணப் பொறிநுணுக்கத்தில் மன ஊக்கம் அடைய வேண்டும். நிலவுக்குச் சென்று மீள்வதும் ஆபத்தானதுதான். ஒரு நிறைபாடு என்ன வென்றால், நிலவுப் பயணத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், மனிதரை மீட்டுக் கொண்டு வர முடியும். மூன்று நாள் பயணத் தூரத்தில்தான் நிலவு உள்ளது. பாதுகாப்பு மீட்சி முறைகள் எல்லாம் கைவசம் உள்ளன.
இயான் கிராஃபோர்டு [Professor, Planetary Science, University of London]
செவ்வாய்க் கோளைத் தேடிச் செல்லும் நமது ஆர்வத்தைத் திருப்புவதற்கு அல்ல, நிலவுப் பயண நிலையம். 1960-1973 ஆண்டுகளில் அமெரிக்க புரிந்த அப்பொல்லோ மனிதப் பயணங்கள், நிலவைத் தொட்டும் தொடாமல் ஒரு சில நாட்களில் முடிந்து பரபரப்பூட்டியவை; பற்பல விஞ்ஞானப் பயன்கள் அளித்தவை. ஆனால் அண்டவெளி உலகிலே, நீண்ட நாட்கள் பயிற்சி அனுபவம் பெற வாய்ப்புக்கள் கிடைக்க வில்லை.
காத்ரீன் ஜாய் [Lunar Scientist, Manchester University]
அடுத்த நிலவுப் பயண நிலைய அமைப்பு பற்றி ஈசா ஆளுநர்
ஐரோப்பிய விண்வெளிப் பயண ஆணையகத்தின் புதிய ஆளுநர் யான் வொர்னர் [Jan Worner], 150 பில்லியன் டாலர் அகில நாட்டு விண்வெளி நிலையம் முறிந்து, தீப்பற்றிப் பசிபிக் கடலில் வீழ்ந்து, விண்வெளி விமானிகளைத் தனியே தவிக்க விட்ட பிறகு, அடுத்த துணிவு முயற்சி நிலவுப் பயண நிலைய அமைப்பு என்று நினைக்கிறார்.
‘கார்டியன்’ செய்தித்தாள் நிருபரிடம், பொதுத்துறை, தனித்துறைத் தொழில்நுணுக்க அதிபர்கள் முன்பாக, யான் வொர்னர் நிலவுச் சிற்றூர் [Moon Village] பற்றிப் பேசினார். “அகில நாட்டு குழு ஒன்று நிலவின் மறுபுறத்தில், பூவியின் மின்காந்த அடிப்புத் தாக்காதவாறு, ஒருபெரும் தொலைநோக்கிக் கூடத்தைக் கட்ட வேண்டும்.
ஒரு தனிப்பட்ட குழு சூரியக் கதிர்வீச்சு பாதிக்கா நிலவுக் குடியகங்களைச் [Moon Habitats] தூரத்தில் தூண்டிச் சுயமாய் இயங்கும் யந்திரங்கள் [Robots] அமைக்க முடியுமா வென்று பார்க்கலாம். மற்றொரு தொழில்நுணுக்க அமைப்பகம் துருவப் பகுதியிலிருந்து பனிநீர் உருக்கி, ஹைடிரஜன், ஆக்சிஜென் ஆகிய வாயுக்களைப் பிரித்து ராக்கெட் எரிசக்தி ஆக்க முடியுமா வென்று பார்க்கலாம். அடுத்தொன்று நிலாச் சுற்றுப் பயண வசதிகளை ஏற்படுத்தலாம்.
2030 இல் ரஷ்யா நிலவில் குடியேற விண்வெளிப் பயண ஏற்பாடுகள் தொடங்கப் போகிறது. நிலவின் இயல்வளம், தனிமக் கனிவளம் தேடிச் சேமிக்க அது ஏதுவாகும். மேலும் புவியை நெருங்கிய தணிவுச் சுற்று வீதியில் உளவவும், நிலவில் குடியேற்ற வசதி அமைக்கவும், அங்கிருந்து செவ்வாய்க் கோள், மற்றும் சூரிய குடும்பத்தின் பிறக்கோள்களுக்குப் பயண முயற்சி செய்யவும், நிரந்தரமாய் ஆய்வுகள் நடத்தவும் திட்டங்கள் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.
டெமிட்ரி ரோகோஸின், ரஷ்யத் துணைப் பிரதம அமைச்சர். [ஏப்ரல் 11, 2014]
அண்டவெளித் தேடலின் நிரந்தர முதற் படிவைப்பு இந்த நிலவுக் குடியேற்ற அமைப்பு [Moon Colony]. ஆதலால் அந்தக் கூடாரமே எதிர் காலத்தில் வரப் போகும் அண்டவெளிப் பயணங்களுக்குத் தங்கும் ஒரு விண்வெளித் துறைமுகம் [Spaceport] என்று உறுதியாக்கப் படுகிறது. ஆயினும் அங்கு தோண்டி எதிர்பார்க்கும் வைரங்கள், புவிக்கு எடுத்து வரப்பட்டால் அவற்றின் விலை மலிவாக இருக்காது. நிலவில் பல்வேறு இரசாயனக் கலவைகளில் கிடைக்கும் ஆக்ஸிஜனை முதலில் ஆய்வு செய்யத் தொடங்கலாம்.
ஐவன் மோய்செயவ் [Chief Scientist, Institute of Space Policy]
Moon Research Colony
நிலவுக் குடியேற்றம் போன்ற பூதப் பெரும் விண்வெளித் திட்டங்களைத் தனியார் கூட்டு நிறுவகப் பங்கேற்பின்றி வெறும் மாநிலத் திட்ட நிதித் தொகையிலிருந்து மட்டும் நிறைவேற்ற இயலாது. அது போல் செவ்வாய்க் கோள் குடியேற்றம், முரண்கோள்களில் [Asteroids] தாதுக்கள் தேடல் போன்ற பல்வேறு எதிர்காலத் திட்டங்கள் தனியார் கூட்டுமுறையில் அமைக்கப் படுகின்றன.
ஆன்ரே லொலின் [Russian Academy of Cosmonautics Member]
நிலவில் குடியேறத் திட்டமிட்ட விண்வெளி நிபுணர்கள்
1957 இல் சோவியத் ரஷ்யாவின் ஸ்புட்னிக் பூமியைச் சுற்றி வந்து அண்டவெளியுகம் புலர்ந்ததற்கு முன்பே சந்திரக் குடியேற்றம் பற்றி மனிதர் கனவுகளும் புனைகதைகளும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன. 1638 இல் பிஸப் ஜான் வில்கின்ஸ் என்பவர் தன்னூல் “ஒரு புதிய உலகம், மற்றோர் அண்டக்கோள் பற்றிய பேருரை” [A Discourse Concerning A New World & Another Planet] ஒன்றில் “நிலவில் மனித இனம் அமைக்கும் ஒரு குடியேற்றம்” பற்றிக் கூறுகிறார். ரஷ்ய நிபுணர் கான்ஸ்டன்டின் ஸியல்கோவிஸ்கி [1857 – 1935] அதுபோல் நிலவில் ஓரமைப்பை ஏற்படுத்த ஆலோசனையாகக் கூறியிருக்கிறார்.
இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட ஜெர்மன் பூத ராக்கெட் பொறிநுணுக்கம் விருத்தியாகி, 1950 ஆண்டு முதலாகப் பல விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுநர், நிலவுப் பயணங்கள், குடியமைப்பு மாடல்களை பற்றிச் சொல்லியிருக்கிறார். 1954 இல் விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் கிளார்க் [Arthur C. Clarke] காற்று ஊதி அமைத்த ஓர் நிலவுக் குடிமேடையைப் பற்றி எழுதியுள்ளார். அக்குடி மேடைக்கு நிலவுப் புழுதி கணப்புக் கவசமாகப் பூசப் படுகிறது. அவை எஸ்கிமோக்களின் பனிக்கூடம் போல் [Igloo Type Models] உள்ளன. பூமியிலிருந்து விமானிகள் விண்கப்பலில் பயணம் செய்து, நிலவை அடைந்து, எஸ்கிமோ மாடல் குடில்களை அமைப்பதாகப் புனைகதை வடித்துள்ளார். ஜான் ரெயின்ஹார்ட் என்பவர் 1959 இல் நிலவுத் தூசியில் மிதக்கும் ஒரு பாதுகாப்பான நிலவுக் குடிலைப் பற்றி ஆலோசனை கூறியுள்ளார். 1961 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி அமெரிக்க விண்வெளித் தீரர் நிலவில் தடம் வைத்து மீள முதன்முதல் வழிவகுத்து, 1969 இல் மனிதர் உலவ வரலாறு படைத்தார்.
நிலவு நோக்கிச் செய்த முதல் சோவியத் மனிதப் பயணத் திட்டங்கள் பல தோல்வி அடைந்தன. 1972 ஆண்டுடன் நிலவு நோக்கிச் செல்லும் நாசாவின் மனிதப் பயணங்கள் முடிவடைந்தன. 2004 ஆண்டில் ஜார்ஜ் புஷ், இளையவர், அமெரிக்கா 2020 ஆண்டுகளில் மீண்டும் நிலவுப் பயணம் துவங்கி, 2024 இல் நிலவிலே தங்கு தளமொன்று நிறுவத் திட்டமிட்டார். அதுபோல் ஐரோப்பிய விண்வெளிப் பேரவை [European Space Agency] 2025 இல் நிலவிலே ஓர் நிரந்தரக் குடிலை அமைக்கத் தயாராகி வருகிறது. ஜப்பானும், இந்தியாவும் அதுபோல் 2030 ஆண்டுகளில் தமக்கொரு நிலவுக் குடிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.
“நிலவைப் படைத்த நியதி இயக்கங்களே பூமியையும் மற்ற பரிதி மண்டலக் கோள்களையும் ஆக்கியுள்ளன. ஆதலால் நிலவைப் பற்றி ஆராய்வது எல்லாப் பாறைக் கோள்களைப் பற்றி அறியும் பலகணியாக உள்ளது. நிலவின் தளப்பரப்பை உளவித் தேவையான மூல வளங்கள் (Useable Resources Like Water & Hydrogen) உள்ளனவா என்று தேடிச் செல்லும் ஆய்வில் பயன்களை எதிர்நோக்கி யுள்ளோம்.”
டாட் மே (Todd May, Manager Lunar Presursor Robotic Program)
“நாசாவின்
இந்த இரண்டு விண்ணுளவுக் குறிப்பணிகளும் (LRO -Lunar Reconnaissance
Orbiter & LCROSS -Lunar Crater Observation & Sensing Satellite)
நமது அண்டைக் கோளான நிலவைப் பற்றிக் கிளர்ச்சி யூட்டும் புதிய தகவலை
அளிக்கப் போகின்றன. தேவையான தளக் காட்சிப் படப் பதிவுகள் (Images), பாதாள
தளச் சரிவுகள் (Lunar Landscapes) ஒரு மீடர் துல்லிமத்தில் நோக்கப்படும்.
அவ்விதத் தகவல் அடுத்து நாசா குறிவைக்கும் தளங்களுக்கு விபரங்கள் தரும்.
அந்த இரண்டு விண்ணுளவிகளைத் தயாரித்த குழுவினர் உன்னத டிசைன் செய்து
சாதனங்களைப் படைத்துள்ளனர்.
டக்ளஸ் குக் (Douglas Cooke, Associate Administrator of NASA’s Exploration Systems)
“நிலவு தள ஆய்வு விண்கப்பல் (LRO) நுணுக்கமான ஓர் உன்னத விண்ணுளவி. அந்த ஏழு கருவிகளின் விண்சிமிழ் நிலவின் தள மண்டலத்தில் எமக்குப் பல்லாண்டுகள் தேவைப்பட்ட தகவலைத் தொடர்ந்து அனுப்பி வரும்.”
கிரெய்க் டூலி (Craig Tooley, LRO Project Manager at NASA)
“நிலவின் குழிகளை நோக்கி உளவும் “லகிராஸ்” துணைக்கோள் (LCROSS) நிலவைக் கோலாகலமாக நெருங்கப் போகும் (அக்டோபர் 2009) காட்சியையும், அதன் அடித்தளத்திலே நீர் உள்ளதா என்று முதன்முதல் ஆராயப் போவதையும் உலகப் பொதுமக்கள் கண்டு களிக்க எதிர்நோக்கி யுள்ளோம்.”
டானியல் ஆன்டிரூஸ் (Daniel Andrews LCROSS Project Manager NASA)
“நிலவின் தளத்திலே புதைபட்ட பூர்வச் சுவடுகளின் [Fossils] கண்டுபிடிப்பே ஓர் பரபரப்பான, மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது ! ஒருவேளை ஆதியில் உண்டான உயிரினத் தோற்றங்களின் ஆர்கானிக் துணுக்குகளும் அங்கே இருக்கலாம். ஆனால் அவை யாவும் அபூர்வமாகவே இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கிறோம்.”
குயிலர்மோ கன்ஸாஸ், பௌதிகத் துணைப் பேராசிரியர் [Guillermo Gonzalez, Iowa State University]
21 ஆம் நூற்றாண்டில் சந்திரனுக்கு மீண்டும் பயணம் போகும் நாசா !
1969 ஆம் ஆண்டில் விண்வெளித் தீரர் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதலில் நிலவில் பாதம் வைத்துப் பாதுகாப்பாய்ப் பூமிக்குத் திரும்பிய பிறகு அமெரிக்கா மேலும் ஐந்து தடவைகள் சந்திரனில் தடம் வைத்தது. 240,000 மைல் தூரத்தில் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கைத் துணைக் கோள் நிலவு ஒன்றுதான். அநேக முறை 20 ஆம் நூற்றாண்டில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய நாசா மீண்டும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நிலவுப் பயணத்தை மீண்டும் துவக்கி இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறதல்லவா ? பல மில்லியன் டாலர் செலவில் பழைய சாதனங்களைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் நாசா சந்திரனுக்குப் போவதின் காரணம் என்ன ? சோவியத் ரஷ்யாவின் சந்திரத் தளவுளவி இறங்கி நிலவின் மாதிரி மண்ணை அள்ளி வந்தாலும், ரஷ்ய அகிலவெளித் தீரர்கள் நிலவின் தளத்தில் இதுவரைத் தடம் வைக்க வில்லை. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் குழுவின் ஈசா, ஜப்பான், சைனா, இந்தியா ஆகிய ஆறு நாடுகள் சந்திரனைத் தேடிச் சென்று தகவலைச் சேமித்தாலும், அமெரிக்கா ஏன் மறுபடியும் ஏராளமான நிதியைச் செலவழித்து மனிதப் பயணத்தை துவங்குகிறது என்ற கேள்வி எல்லாருக்கும் எழுகிறது !
++++++++++++++++
- https://www.space.com/26565-apollo-11-moon-mission-day-2.html
- https://www.nasa.gov/centers/goddard/news/series/moon/first_lunar_program.html
- https://www.timesnownews.com/technology-science/article/watch-chandrayaan-2-launch-live-register-to-watch-the-gslv-blastoff-from-satish-dhawan-space-centre/448129?utm_source=pushengage&utm_medium=pushnotification&utm_campaign=pushengage
- .http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village
- https://en.wikipedia.org/wiki/Apollo_program
- http://spaceq.ca/canadian-engineers-helped-guide-americas-mercury-gemini-and-apollo-programs/?u
- https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwChmQRcbvdJsMGVmhcNvqVwDWW
- https://www.space.com/43018-lunar-orbital-platform-gateway.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20190116-sdc
- https://www.timesnownews.com/technology-science/article/watch-chandrayaan-2-launch-live-register-to-watch-the-gslv-blastoff-from-satish-dhawan-space-centre/448129?utm_source=pushengage&utm_medium=pushnotification&utm_campaign=pushengage
- https://www.history.com/topics/space-exploration/moon-landing-1969
- https://solarsystem.nasa.gov/news/856/nasa-is-aboard-first-private-moon-landing-attempt/
- National Geographic Celebrating the 50 th Anniversary of Apollo 11 The Moon Our Lunar Companion [July 2019]
++++++++++++++++++++
http://www.bbc.com/future/story/20150712-should-we-build-a-village-on-the-moon [July 13, 2015]
தகவல்:
Picture Credits: NASA, JPL; Time Magazine.
1. Returning to the Moon By: Jeffrey Kluger Time Magazine [March 20, 2006]
2. Apollo Missions (11-17) First Man on the Moon [www.panoramas.dk/]
3. (a) http://www.thinnai.com/science/sc0505022.html [Authors Article on First Moon Landing (May 5, 2002)]
3 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811271&format=html (NASA’s Moon Trip)
3 (c) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40603311&format=html (NASA’s Trip to Moon Again)
4. Return to the Moon Frequently Asked Questions [www.space-frontier.org/projects/moon]
5. NASA How We will Get Back to the Moon [www.nasa.gov./mission_pages/exploration/spacecraft/]
6. BBC Science News: Space Agencies Take New Look at Moon [July 27, 2002]
7. The Space Review- Return to the Moon By: Anthony Young [Jan 3 2006]
8. Moon -Astronomical Data [www.amastro.org/at/mo/mod.html] [May 15, 2001]
9 Space & Earth Explorations : NASA Details Plans for Lunar Exploration Robotic Missions (May 22, 2009)
10 Rocket Launches NEW U.S. Moon Probes By Tariq Malik (June 18, 2009)
11 BBC News – Lift off for NASA’s Lunar Probes By Paul Rincon (June 18, 2009)
12 NASA Lunar Reconnaissance Orbiter Fact Sheets LRO & LCROSS Space Probes (2009)
13 U.S. Lunar Probes Lift off on Mission to Scout Water, Landing Sites (June 22, 2009)
14 http://en.wikipedia.org/wiki/Colonization_of_the_Moon [May 6, 2014]
15. http://www.bbc.com/future/story/20150712-should-we-build-a-village-on-the-moon [July 13, 2015]
16.http://www.moondaily.com/reports/Russia_to_begin_Moon_colonization_in_2030_999.html [May 12, 2014]
19. http://www.news.com.au/technology/science/space/europe-to-build-moon-town-by-2030-in-bid-to-discover-alien-life/news-story/fe74f5e1f00c6730c0c5a4dcb5946395 [January 4, 2016]
20. http://www.space.com/32695-moon-colony-european-space-agency.html [April 24, 2016]
21. http://www.sciencealert.com/europe-plans-to-build-a-moon-village-by-2030-space-agency-announces [January 5, 2016]
22. https://www.space.com/26565-apollo-11-moon-mission-day-2.html
******************
S. Jayabarathan (jayabarathans@gmail.com) July 19, 2019 [R-4]
- ஆத்மாநாம் அறக்கட்டளையின் ஐந்தாவது விருது
- கதவு
- அரை நூற்றாண்டுக்கு முன் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் முதல் தடம் வைத்து புவிக்கு மீண்ட நாள் கொண்டாட்டம்
- அற்புதம்
- குரு அரவிந்தன் எழுதிய ‘ஒரு அப்பா, ஒரு மகள், ஒரு கடிதம்’
- செம்மொழித்தமிழில் அமைதி இலக்கியம்
- கம்பன் அடிப்பொடி புகழ்த்திருநாள் விழா
- குழந்தைகளும் கவிஞர்களும்