இனி, துயரீடு கேட்டுப் போராடலாம்….

கோ. மன்றவாணன்       வழக்கம் போலவே வளவ. துரையன் அய்யா அவர்கள் ஒரு பதிவை அனுப்பி இருந்தார். அதில் நிவாரணம் என்ற சொல்லின் தற்காலப் பயன்பாடு தவறானது என்று கிருஷ்ணசாமி தியாகராசன் என்பவர் எழுதி இருந்தார். “நிவாரணம் என்றால் அழித்தல் என்று…

பேரிடர் கண்காணிப்பு, பேரிடர் பாதுகாப்பு

சி. ஜெயபாரதன், கனடா https://youtu.be/Xe8fIjxicoo https://youtu.be/H1LHgyfPPQ8 2020 ஆண்டின் முதற்பகுதியில் மெதுவாய்த் தோன்றி காட்டுத் தீபோல் நாட்டில் பரவி உலகப் போராய் மூண்டு விட்ட கொரோனா ஆட்கொல்லி நச்சுக் கிருமியால் உலக மாந்தர் பேரிடர் உற்று அனுதினம் பெருந்துயர் அடைந்து வருகிறார். …

ஜீவ அம்சம்

ஸிந்துஜா  "குட்டியக்  கொண்டு போய் ஸ்கூல்ல விட்டுட்டு வரியா?" என்று அண்ணாமலை வீட்டுக்குள் வந்த குஞ்சம்மாவைப் பார்த்துக் கேட்டார். குஞ்சம்மா  சுகுணாவின் வீட்டில் சமையல் வேலை பார்க்கிறாள். அண்ணாமலை சுகுணாவின் தந்தை. பெங்களூரில் இருக்கும் மகளைப் பார்த்து விட்டுப் போகலாம் என்று மதுரையில் இருந்து அன்று காலையில்தான்…

நாடு கேட்கிறது

வைரஸ் தீ... விட்டில் மக்கள்.... இது காட்டுத் தீ அல்ல வீட்டுத் தீ என்ன செய்வது? விறகாகி எரிவதா? விலகி அணைப்பதா? சாம்பலாவதா? சரித்திரமாவதா? அடுத்த தலைமுறைக்கு நாம் விதையா? சிதையா? இதோ.... நாடு கேட்கிறது பொருள் கேட்கவில்லை ‘புரிந்துகொள்’ என்கிறது…
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

நாவினால் சுட்ட வடு பொருளிழந்த நிலையில் ஒரு வார்த்தை பொருள்முதல்வாதப் பயன்பாடுகள் சில கருதி திரும்பத்திரும்ப உச்சரிக்கப்படும்போதெல்லாம் உயிர் துளைத்து உட்புகுந்து வரவாக்கும் ரணம் வழக்கமாகிவிட்ட பின்னரும் _ வெடித்துமுடித்து வீதியோரம் வீசியெறியப்பட்டிருக்கும் குருவி வெடிகளைக் காணும்நேரம் குலைநடுங்கி யதிர்வதுபோல் அஞ்சி…
அப்பால்…..

அப்பால்…..

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ’கடவுளையே கதிகலங்கச்செய்துவிட்டது பார் கொரோனா’ என்று கெக்கலிப்பார் சிலர். ’கடவுளே கொரோனா’ என்று கும்பிடுவார் சிலர். கண்பொத்தி யுள்ளே பூஞ்சையாய் ஒடுங்கிக் கிடக்கிறார் பார்’ என்பார் சிலர். ’கணக்கற்றோரின் கனவுகளையும் கவலைகளையும் சுமந்து சுமந்து களைத்துப்போயிருப்பார் கொஞ்சம்…

தமிழர் புத்தாண்டு சித்திரை முதலா ? தைத் திங்கள் முதலா ?

[படம் – தமிழ் இந்து. காம் – நன்றி ]சி. ஜெயபாரதன், கனடா+++++++++++++ தமிழர் புத்தாண்டுசித்திரை முதலா ?தைத் திங்கள் முதலா ?ஓயாத சொல்லடிப் போர் !இதற்கோர் தீர்வு ?ஒரு கல்லடியில் வீழ்ந்தனஇருமாங் கனிகள் ! தைத் திங்கள் தமிழாண்டுதப்புத் தாளம் ஆனது…

அமைதியை நோக்கியே அத்தனை புயல்களும்

ஒரு நிறுவனத்தின் வெற்றி என்பது வாகனங்களைக் கையாளும் லாவகத்தில்தான் இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து ஒரு பிரமுகர் வருகிறாரென்றால் விமானம் தரையிறங்குமுன் நம் வாகனம் அங்கே நிறுத்தப்பட்டிருக்க வேண்டும் சரக்குகளை எங்கு அனுப்பவேண்டும், எங்கிருந்து எடுத்துவர வேண்டும், ஊழியர்கள் எந்தெந்த இடத்தில் தயாராக இருக்கவேண்டும்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 220 ஆம் இதழ் இன்று (12 ஏப்ரல் 2020) வெளியாகியுள்ளது. இதழை solvanam.com என்ற முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: குளக்கரை – உலக நடப்பு பற்றிய குறிப்புகள்- கோரா மகரந்தம்- ஆக்க பூர்வச் செய்திகள் – கோரா, பானுமதி ந. அறிவிப்பு: ராபர்டோ பொலான்யோ சிறப்பிதழ் கவிதைகள்: இரா. கவியரசு – இரு கவிதைகள் சுனிதா ஜெயின் -இரு கவிதைகள் கட்டுரைகள்: நீ உன்னை அறிந்தால் – பானுமதி ந. உ.வே.சாமிநாதையரின் சங்கடங்கள் – கிருஷ்ணன் சங்கரன் நுண்கிருமியிடம் தோற்ற உலக ஏகாதிபத்திய வெறி – மைத்ரேயன் கண்ணீரின் குருதியின் சுவை - கமலதேவி நண்பனா, வாதையா? – மைத்ரேயன் 20xx- கதைகள்: முன்னுரை - அமர்நாத் புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி- கோபி சரபோஜி உயர்ந்த உள்ளம் – ரா.கிரிதரன் சிறுகதைத் தொகுப்பின் விமர்சனம் – பாவண்ணன் கதைகள்: முறைப்படியான ஒரு பதில் – ஹாஜின் (இங்கிலிஷ் மூலம்) தமிழில்: மைத்ரேயன் நண்பன் – ஸிக்ரிட் நூன்யெஸ் – தமிழாக்கம்: பாஸ்கர் நடராஜன் மிகப்பெரிய அதிசயம் - அமர்நாத் கொடிப்பூ மாலை – பாலாஜி பிருத்விராஜ் சின்ன உயிர் நோகாதா – வாரணாசி நாகலட்சுமி (தெலுங்கு மூலம்) தமிழில்: ராஜி ரகுநாதன் கண்காட்சி – ராம்பிரசாத் நவம் – லோகேஷ் ரகுராமன் தளத்துக்கு வருகை தந்து படித்த பிறகு, உங்கள் மறுவினைகளை அந்தந்தப் படைப்புகளின் கீழேயே எழுதித் தெரிவிக்கலாம், அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். முகவரி: solvanam.edtior@gmail.com…

எனக்கு எதிர்கவிதை முகம்

நந்தாகுமாரன் ஒரு எதிர்கவிதையின் விஷமத்தனம்உங்களுக்கு அவ்வளவு எளிதில்புரிந்துவிடலாகாதுஅதன் உள்மூச்சுஉங்களை மோப்பம் பிடிக்கும் போதேஅதன் வெளிமுச்சுநெருப்பு கக்கத் தயாராவதைக்கண்டுபிடித்தாலும்கண்டு கொள்ளாதீர்கள்அதன் குதர்கமும் குரூரமும்உங்களைப் பிடித்துக் கடித்தாலும் சரிஅமைதியாக இருங்கள்உங்களுக்குத் தான் எதுவுமே ஆகாதேநீங்கள் தான் சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவைதடுப்பூசி போட்டிருக்கிறீர்களேஒரு கவிதையைப் போன்றேஒரு…