This entry is part 16 of 20 in the series 29 ஜனவரி 2023

அமீதாம்மாள்

மகள் வீட்டில்

எல்லாருக்கும் கொரொனா

விமானத்தைத் தவறவிட்டு

தவிக்கிறான் மகன் தைவானில்

மனைவி தாலிக்கொடியில்

தாயத்தைக் காணோம்

இலக்கியப் பரிசுக்கு

என் நூல் தேர்வு

இணையத் திருட்டில்

என் இரண்டாயிரம் காணோம்

பள்ளியில் விபத்தாம்

மருத்துவமனையில் பேத்தி

நன்கொடைக்கான என்நூல்

வெளியீட்டில் பத்தாயிரம் திரண்டது

மாத்திரை போதாதாம்

சர்க்கரைக்கு இனி இன்சுலினாம்

கிழிபட்டு கிழிபட்டு

தைக்கப்படுகிறது வாழ்க்கை

வாசலில் நித்தியகல்யாணி

எல்லாநாளுமே

புதுப்புதுப் பூக்களால் சிரிக்கிறது

Series Navigationசருகுதேர் வீதியும் பொது வீதியும்…