ஆர் வத்ஸலா

கரிசனமாக
விசாரிக்கத்
தெரிந்திருந்திருந்தது
உனக்கு
மௌனமாக
என் வலிகளை
அனுப்பி வைக்கத்
தெரிந்திருந்திருந்தது
உனக்கு
தொடாமல் தோள் கொடுக்கத்
தெரிந்திருந்திருந்தது
உனக்கு
என்னை விட்டு நீ விலகினால்
எனக்கு என்ன ஆகும்
என்பது மட்டும்
தெரியவில்லையே!