நிலா

author
0 minutes, 1 second Read
This entry is part 1 of 5 in the series 27 ஆகஸ்ட் 2023


ஆர் வத்ஸலா
நிலவைத் தொட்ட மணித்துளியை
சிறைப்படுத்தி காட்டியது
தொலைக்காட்சி
சிறு வயதில் நிலாச்சோறு தின்றதை
அசை போட்டார்
அப்பா
சோஃபாவில் சாய்ந்தபடி
கைகொட்டி கொண்டாடினான்
மகன்
‘பாப்கார்ன்’ தின்று
‘கோக்’ குடித்தபடி
“அம்மா, பசிக்குது” என்றான்
நடைபாதையில் உறங்கி எழுந்த
சிறுவன்
நீரற்ற கண்களுடன்
நிலவை வெறித்தாள்
பாப்பம்மா

Series Navigationஇந்திய நிலா தளஆய்வி சந்திராயின் -3 நிலவின் தென் துருவத்தில் முதன்முதல் தடம் வைத்துள்ளது
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *