பூமியைச் சுற்றிவரும் நிலவின் சுற்றுப்பாதை நிகழ்வை முதன்முதல் சூரிய ஒளியில் படமெடுத்த நாசாவின துணைக்கோள்

author
0 minutes, 20 seconds Read
This entry is part 4 of 8 in the series 5 நவம்பர் 2023

https://youtu.be/_7pZAuHwz0E
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

++++++++++++++++

image.png

**********

சுழலும் புவிக் கோளைச்
சுற்றும் நிலவின் பின் முகத்தை
நாசா துணைக்கோள்
முதன்முதல் படமெடுக்கும் !
இதுவரை தெரியாத பின்புறம்
இப்போது கண்படும்  !
சைனா  2020 இல் நிலவின்
பின்புறம் காண விண்ணுளவி அனுப்பும்.
அண்டவெளிப் பயணம் செய்து
விண்வெளியில் நீந்தி
வெற்றி மாலை சூடி மறுபடி
மண்மீது கால் வைத்தார்
சைன விண்வெளித் தீரர் !
அமெரிக் காவின்
விண்வெளி வீரர் போல்
விண்சிமிழில் ஏறி
வெண்ணிலவில் தடம் வைக்க
முயற்சிகள் நடக்கும் !
நிலவைச் சுற்றி வந்து
மனிதரில்லா விண்சிமிழ் ஒன்று
புவிக்கு மீண்டது .
இன்னும்
ஐந்தாறு ஆண்டுகளில்
சாதனை யாகச் சைனத் தீரர்
பாதம் பதிப்பர்
நிலவின் களத்திலே
நீல் ஆர்ம்ஸ் டிராங் போல !

++++++++++++++++++++

ஒரு மில்லியன் மைல் தூரத்தில் எடுத்த பூமியும், நிலவும் விண்வெளியில் சுற்றும் மெய்யான இந்த நிகழ்ச்சியைக் காணும் போது, ஓர் புல்லரிப்பை உண்டாக்கு கிறது.  நான் காலையில் புரியும் அனுதின நடைப் பயிற்சி கூட இப்படத்தில் ஒரு வேளை பதிவாகி இருக்கலாம். !  இப்படத்தை டிஸ்கவர் விண்ணுளவி காமிரா நான்கு மணிநேரப் பதிப்பில் அடுத்தடுத்து எடுத்த காட்சிகளைத் தொகுத்து நாசா வெளியிட்டுள்ளது.

கட்டுரை ஆசிரியர்

நிலவு பூமிக்கும் துணைக்கோளுக்கும் இடையே நகர்ந்ததை டிஸ்கவர் விண்ணுளவி இரண்டாம் முறை 2016 ஜூலை 5 இல் கண்டது.  முதல் முறை புவி – நிலவுப் படப் பிடிப்பு [First Lunar Photobomb] சென்ற ஆண்டு [2015] ஜூலை 16 இல் நேர்ந்தது.  நிலவு குறுக்கிடும் சமயம், சூரிய ஒளி பூமி மீது படும் போது,  நாசாவின் டிஸ்கவர் துணைக் கோளின் [Deep Space Climate Observatory Satellite (DSCOVR)] காமிரா பிடித்த படம் இது.

ஆடம் ஸ்போ [டிஸ்கவர் திட்ட விஞ்ஞானி, நாசா விண்வெளிப் பயண மையம்]

முதன்முறை நிலவின் பின்புறம் சூரிய ஒளியில் கண்டுபிடிப்பு.

பூமியும், நிலவும் விண்வெளியில் சுற்றும் மெய்யான இந்தக் காட்சி ஓர் புல்லரிப்பை உண்டாக்குகிறது !  இதுவரை எந்த நாடும் தொலைநோக்கி மூலமாகவோ, விண்ணுளவிக் காமிராவோ, சூரிய வெளிச்சத்தில் நிலவின் பின்முகத்தைக் கண்ட தில்லை.  காரணம் நிலவு தன்னச்சில் சுழலாமல், ஒரு முகம் காட்டியே பூமியைச் சுற்றி வருகிறது.  இதுவரை யாரும் பூமி தன்னச்சில் ஒருநாள் சுழல்வதையோ, நிலவு பூமியைச் சுற்றி வருவதையோ கண்டதில்லை. இதுவரை பூமியும், நிலவும் ஒரே சமயத்தில், சூரிய ஒளியில் சார்புநிலை வேகத்தில் சுற்றி வருவதை யாரும் கண்டதில்லை.  இப்போது நாசாவின் துணைக்கோள் “டிஸ்கவர்”  [DSCOVR] 2015 ஜூலை 16 & 2016 ஜூலை 5 ஆகிய இரண்டு தினங்களில் இருமுறை ஒரே சமயத்தில் பூமி, நிலவுக் கோள்களின் நேர்பார்வை கிடைத்துள்ளது.  அந்த இரண்டு நாட்களில் நிலவு பூமிக்கும் துணைக் கோளுக்கும் இடையே சூரிய ஒளிபட்டு நகர்ந்து சென்றிருக்கிறது.  அப்போது துணைக்கோள் பூமியிலிருந்து சுமார்  ஒரு மில்லியன்  தூரத்தில் சூரியனைச் சுற்றி வந்திருக்கிறது.

image.png

Relative Size of Planets

அந்த சுற்று வீதியில் சுற்றிய வண்ணம், டிஸ்கவர் துணைக்கோள் தேசீயக் கடல்நிலை & சூழ்நிலை ஆளுமைக் குழு [National Oceanic & Atmospheric Administration (NOAA)] சூரியப் புயல் கண்காணிப்பு ஆய்வுகள் செய்து வருகின்றன. துணைக்கோளில் விண்வெளிப் படங்களை எடுக்கும் நாசாவின் காமிரா எபிக் [EPIC – Earth Polychromatic Imaging Camera] எனப்படுவது.  நிலவின் இந்தக் குறுக்கீடு நிகழ்ச்சி [Lunar Photobomb] என்று குறுப்பிடப் படுகிறது.  சூரிய ஒளியில்சுழலும் பாதிப் பூமி தெளிவாய்த் தெரியும் போது ஓஸோன் திணிவு, தாவரப் பசுமை வளர்ச்சி [Vegetation], முகில் உயரம், சூழ்வெளி வாயுக் கலவைகள் [Aerosols]  கண்காணிக்கப் படுகின்றன.  டிஸ்கவர் துணைக்கோள் சூழ்வெளிக் கண்காணிப்புத் திட்டங்கள் நாசா, நோவா, அமெரிக்க விமானப் படையினர் [NASA, NOAA, U.S. AIR FORCE] கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.

************************************

Series Navigationமுதல் ஆழ்வார்கள்  கண்ட அரன் [பொய்கையாழ்வார்]கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ – 2023
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *