This entry is part 7 of 7 in the series 1 மார்ச் 2026

       இரா.ஜெயானந்தன்

தஞ்சாவூர் மராட்டிய ஆட்சியில், இரண்டாம் சரபோஜி காலம் (1798-1832.)

பொன்னான காலம் தமிழ் நாட்டு மக்களுக்கு. 

இவர், மூன்று வேளை வயிறுமுட்ட தின்று, வசந்த மண்டபத்தில் ஆடல் அழகிகளின் நடனத்தை ரசித்து பொழுது போக்கியவர் அல்ல. மாறாக, மறுமலர்ச்சி மன்னர் என ஆங்கிலேயரால் போற்றப்பட்டவர். 

சரஸ்வதி மகால் என்ற நூலகத்தை, அரண்மனையின் ஒரு பகுதியாக மாற்றினார். உலகிலுள்ள முக்கியமான கலை பொக்கிஷங்களை கொணர்ந்து நிரப்பினார். இவருக்கே பத்து மொழிகள் தெரியும். இந்த சரஸ்வதி மகாலில் 4000 க்கும் மேற்பட்ட அரியவகை நூல்களை சேகரித்த வைத்துள்ளார். இன்றைக்கும் வெளிநாட்டு சுற்றுலாவில் வருபவர்கள் தஞ்சை சரஸ்வதி மகாலின் கலை பொக்கிஷங்களை பார்த்து வியக்கின்றனர். 

கலை,மருத்துவம், ஏழைகளின் கல்வி மேம்பாட்டுக்கு, வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டவர் சரபோஜி- 2.

தஞ்சாவூர் நகரத்தை ஒரு கலை பொக்கிஷமாக மாற்றினார். 

நிர்வாக பொறுப்பு, ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியாலும் மிரட்டியும் வாங்கிவிட்டனர். சுல்தான்களின் தொந்தரவு மறுபுறம். இதற்கிடையே தமது ஆட்சி 

ஆனாலும்  தஞ்சை மண்ணை விண்ணுக்கு கொண்டு சென்றவர்.

 அவரது தஞ்சாவூர் கோட்டையை அவர் வசம் வைத்துக்கொள்ள அனுமதித்தனர் ஆங்கிலேயர்கள். அதுவும் அவரது கலை ஆர்வம் மக்களுக்கான வைத்திய முறைகளின் 

ஈடுபாட்டை கவனித்த, அன்றைய ஆங்கில அரசு இவருக்கு தனிச்சலுகை வழங்கியது. 

தஞ்சாவூர் சரபோஜி ராஜா, ஒரு மராட்டிய மன்னராக, தமிழகத்தில் குறிப்பாக அன்றைய ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாநிலத்தை ஆண்டவர். இவர் தஞ்சை மராட்டிய மன்னர்களில்  பத்தாவது மன்னராவார். ங

அவர் ஒரு மன்னராக மட்டமல்ல;

கலை,கலாச்சாரம், பக்தி,மொழி, மருத்துவம், கல்விப்பணி போன்ற மகத்தான பணிகளை செய்தவர். 

ஒரு மன்னர், மக்களுக்கான கண் மருத்துவராக பணியாற்றினார். அந்த காலத்திலேயே கண் புரை, (cataract surgery) செய்துள்ளார். அதற்கான பதிவுகளை தெளிவான ஆங்கிலத்தில் எழுதியும் வைத்துள்ளார். 

இன்றைய மராட்டிய இளவரசர் பாபாஜி ராஜா போன்ஸ்லே அவர்களை, இரண்டு அரசு கண் மருத்துவ நிபுணர்கள் நேரடியாக சந்தித்து  அவரது தாத்தா சரபோஜியின் 

 கண் மருத்துவத்தை பற்றி கேட்டு, அந்த மருத்துவ குறிப்பை வைத்து நீண்ட கட்டுரை எழுதி, அகில இந்திய கண் மருத்துவ இதழில் வெளியிட்டனர். சரபோஜியின் ஆட்சியில், பொது மக்களுக்கான அரசாங்க மருத்துவ மனையை தன்வந்திரி மகாலில் ஏற்படுத்தி,

இயற்கை,  யூனானி, ஆயுர்வேத, அல்லோபதி மருந்துகளை கொடுத்துள்ளதையும், அங்குள்ள மருத்துவ ரிகார்டில் பதிவு செய்துள்ளதை, இன்றைய இளவரசர் ராஜா போன்ஸ்லே, மருத்துவ நிபுணர்களுக்கு காட்டியுள்ளார். 

அரண்மனை தோட்டததில்

 ஒரு பகுதியை, மரு‌த்துவ தாவரங்களை வளர்ப்பதற்காக ஒதுக்கினார். ஆனால், இந்தியாவை ஆண்ட பல மன்னர்கள் அவர்களது தோட்டத்தை அழகிய அந்தப்புரங்களாக மாற்றியுள்ளனர்.

  உலகெங்கும் புகழ்பெற்ற தஞ்சாவூர் ஓவியப்பாணி இவர் காலத்தில்தான் அறிமுகமானது. சித்திர கலைஞர்களுக்கும் தஞ்சாவூர் ஓவியங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கி, அந்த கலையை போற்றினார்.

சோழர்களால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலில், தஞ்சாவூரில் மராட்டிய போன்ஸ்லே வம்சத்தின் வரலாற்றை கல்வெட்டாக செதுக்கியுள்ளார். 

முக்கியமாக, சப்தார்த்த சிந்தாமணி என்ற நூல், உலகப்புகழ் பெற்றது. 

இதில் இடமிருந்து வலமாக படித்தால்

ராமாயணம் படிக்கலாம். வலமிருந்து இடமாக படித்தால் மகாபாரதம் படிக்கலாம். 

பழங்கால பரதநாட்டியத்தை, இவரே முறைப்படுத்தி, அதில் வெளிநாட்டு இசைக்கருவியான வயலின் இசையை புகுத்தி, பரதநாட்டியத்தை உலகப்புகழ் பெற செய்தார். இவர் காலத்தில், தஞ்சாவூரை பார்க்க வந்த வெளிநாட்டு ஆங்கல தலைகள், வயலின் இசையை பரதநாட்டியத்தில் விளையாடுவதை கண்டு வியந்துள்ளனர். மரபான கலையை வளர்தெடுப்பதில் ஆர்வம் காட்டினார். நடன பெண்மனிகளுக்கு,மான்யம் வழங்கி, நிலங்களையும் பரிசாக கொடுத்துள்ளார். அதனால் அக்கலை,

அழியாமல் வாழ்ந்தது. பின்பு வந்த பிரபுத்துவ ஜாமீன்தார்கள் காலத்தில் அந்நாட்டிய பெண்மணிகள் நலிவுற்று, ஜமீன்தார்களின் கைப்பாவையாக மாறினர். மரபான கலை அழிவை நோக்கி சென்றது. நமது காலத்தில் ருக்குமணி அருண்டேல் போன்றவர்களின் முயற்சியால் மீண்டும் அக்கலைக்கு உயிர்கொடுத்து, அதற்கான முறையான அமைப்பை ஏற்படுத்தி (கலாஷேத்ரா) ,அதனை  கலைதுறை படிப்பாக மாற்றி, எல்லோரும் பயிலும் வகையில் அமைத்தனர். இன்று கலாஷேத்ரா இந்திய நாட்டின் கலைக்கான முக்கியமான இடமாக கருதப்படுகின்றது. 

இன்றைய பரதநாட்டிய கலைக்கு புத்துயிர் கொடுத்தவர் சரபோஜி மன்னர். 

சின்னையா, பொன்னையா, சிவானந்தம் மற்றும் வடிவேலு ஆகிய நான்கு சகோதரர்களே இன்றைய பரதநாட்டியத்தின் வழிமுறைகளுக்கு வழிவகுத்தவர்கள். இவர்களை சரபோஜி மன்னர் ஆதாரித்து, அவரது கலா மண்டபத்தில் அமரவைத்து, பரதநாட்டிய கலைக்கு புதிய வடிவம் கொடுக்க செய்தார். 

தஞ்சாவூர் அரண்மனை இசைக்குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி 

இந்திய மற்றும்

 மேற்கத்திய இசைக்கருவிகளையும் 

சேர்த்துக்கொண்டார். 

சரஸ்வதி மகால், கலை பொக்கிஷங்களுக்கு அமைந்த, மாபெரும் கலைக்கூடம். 

மருத்துவத்தை மேம்படுத்த, தனவந்தரி மஹாலை ஏற்படுத்தனார்.அரிய மருத்துவ கையெழுத்து 

ஓலைச்சுவடிகளை சேகரித்தார். 

இவரே சிறந்த ஓவியர், பன்மொழி புலவர். 

ஆங்கிலேயர் காலத்தில், பள்ளிகள் திறக்க ஏராளமான இடங்களை தானமாக கொடுத்தவர். 

இன்றைக்கும் தஞ்சாவூரின் நிலத்தடி 

நீர் வடிகால் அமைப்பு, நன்னீர் வழங்கும் திட்டங்கள் இவர் காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. காவிரி ஆற்று நீரை முறைப்படி கையாண்டு விவசாயம் மக்களுக்கான குடிநீர் விநியோகம் முறையாக நடந்தது. அவரது வரலாறு, இன்றைய ஆட்சியாளர்களுக்கு ஒரு வரலாற்று பாடமாக வைக்கலாம். 

சரித்திரம் சேர,  சோழ,பாண்டிய,  நாயக்க மன்னர்களை பேசும் போது, மராட்டியர்களின் பங்களிப்பை யாரும் மறுக்க முடியாது.

#####################

Series Navigationகதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடல்