மழையில் நனையும் பொம்மைகள்
சட சடவென மழைதூற்றல் ஆரம்பித்துவிட்டது
யானையை ஏந்தி ஓடுகிறான் ஒருவன்
இன்னொருத்தியோ
ஒரு விரலில் மலை தாங்கிய
ஆயர்பாடிக் கண்ணனை வாரி ஓடுகிறாள்
பிடித்துக் கொண்ட மழையில்
ஒன்றுமற்றுப்
கரையப் போகும் பொம்மைகள் அவற்றை
மண்ணாகப் போகும் ஒன்றுமற்ற மனிதர் சுமந்து ஓடுவானேன்!
பரபரத்து எங்கோ குடிசையில் நுழைவானேன்
அதுவும் தப்பித்து விடுவதான இடம் ஒன்று
இருப்பதாய் நினைத்த இடத்திற்கு ஓடும் மனிதர்கள் குறித்து
பொம்மைகள் ஒன்றும் சொல்வதில்லை.
**