Articles Posted by the Author:

 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                          அலகில் மரகத முறிகளும் வயிரமும்                         அபரிமிதம் எரி தமனியம் அடையவும் அரிய தரளமும் அழகிய பவழமும் அரச அரவின் சிகையவும் மலைகொடு கலக மறிகடல் புகவிடுவன கதிர்       கவடு விடுவன இவருழை யினுமுள      ககன தருவனம் இவர்களும் எனவரு      கனக வரை அரமகளிர்கள் திறமினோ.         [41] [அலகில்=அளவில்லாத; அபரிதம்=மிகுந்த; எரி=ஒளி; தமனியம்=பொன்; தரளம்=முத்து; அரச அரவு=பாம்பரசன்; சிகை=உச்சி; இவருழை=இவரிடம்; ககனம்=வானம்; தரு=மரம்; ககனம்=பொன்; வரை=மல்லை]       இப்பாடலில் பெண்களின் […]


 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  வளவ. துரையன் வட பகீரதி குமரி காவிரி                               யமுனை கௌதமை மகரம்மேய்                         தட மகோததி இவை விடாது உறை                               தருண மாதர்! கடை திறமினோ.        [31] [பகிரதி=கங்கை; கௌதமை=கோதாவரி; மகரம் மேய்=மீன்கள் உலாவும் இடம்; தடம்=அகன்ற; மகோததி=கடல்; தருணமாதர்=இளம்பெண்கள்]       வடக்கில் ஓடும் கங்கை, தெற்கே பாயும் காவிரி, யமுனை,  கோதாவரி ஆகிய ஆறுகளையும், மீன்கள் நிறைந்த விரிந்து அகன்ற கடல்களையும், வசிப்பிடமாகக் கொண்ட தேவருலக இளம்பெண்களே! கதவைத் திறவுங்கள். ====================================================================================                          […]


 • தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப் பரணி [தொடர்ச்சி]

                                                                                                                   ஈரும் மதியம்என முதிய மதிவெருவி ராசராச நாயகர் முடிச் சேரும் மதியம் என இளைய மதியொடுற[வு] உடைய மகளிர் கடைதிறமினோ.              [21] [ஈர்மை=வருத்தம்; மதியம்=முழுநிலவு; வெருவி=பயந்து; உறவு=நேசம்]       இளமையான காதலர்கள் தங்களை முழுநிலவு துன்புறுத்தும் என எண்ணி, அதை விடுத்து, இராசமாபுரத்து இறைவரான சிவபெருமான் திருமுடியில் இருக்கும் பிறைச்சந்திரனுடன் சேர்ந்திருக்க விரும்பி இங்கு வந்துவாழும் தேவர் உலகப் பெண்களே! கதவைத் திறவுங்கள். =====================================================================================             போய பேரொளி அடைத்து வைத்த […]


 • தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

  தக்கயாகப்பரணி [தொடர்ச்சி]

  வளவதுரையன்     கடைதிறப்பு கடை என்பதை வாசல் எனப்பொருள் கொண்டு கடைதிறப்பு என்பதை வாசல் திறப்பு எனக் கொள்ள வேண்டும். தக்கனது யாகத்தைச் சீரழித்து அவனை வெற்றி கொண்ட வீர்ராக வரும் வீரபத்திரரின் பெருமையைப் பாடும் பெண்கள் இல்லத்தினுள் இருக்கும் பெண்களிடம் அவர்களின் வாயிலில் நின்று வாசல் கதவு திறக்கப் பாடுவதே கடைதிறப்பு பகுதியாகும்.       இன்றைய கும்பகோணத்திற்கு அருகில் உள்ள தாராசுரம் அந்தக் காலத்தில்  இரண்டாம் இராசராச சோழனின் தலைநகராக விளங்கியது. அந்நகரத்தில் தேவமாதர்களும் கடவுளர்களும் […]


 • ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப் பரணி

  ஒட்டக்கூத்தர் பாடிய தக்கயாகப் பரணி

                                                                                               வளவ. துரையன் தக்கன் [தட்சன்] சிவபெருமானை அவமதித்துச் செய்த யாகத்தைச் சிவபெருமானின் ஆணைப்படி அவரால் உருவான வீரபத்திரர் அழித்து வந்த கதையைப் பாடுவது தக்கயாகப் பரணியாகும். =====================================================================================                         வைரவக் கடவுள் வணக்கம் தற்போது பைரவர் என அழைக்கப்படும் கடவுளே அப்போது வைரவர் எனும் பெயரால் அழைக்கப்பட்டிருக்கிறார்.       தான் மேற்கொளும் செயல் நன்கு நிறைவேறி முடிய கடவுளை வேண்டல் ஒரு மரபாகும். தக்கயாகப் பரணியை எழுதப் புகுமுன் ஒட்டகூத்தர் வைரவக் […]


 • கள்ளா, வா, புலியைக்குத்து

  கள்ளா, வா, புலியைக்குத்து

  தமிழ்த்தாத்தா உ.வே.சா அவர்கள் முதல் முதலில் பதிப்பித்தது சீவகசிந்தாமணியாகும். பதிப்புத்துறை அவருக்குப் புதிய துறையாதலால் “ஆரம்பத்தில் எல்லா விஷயங்களும் தெளிவாக விளங்கவில்லை” என்று அவரே குறிப்பிடுகிறார்.       சில பாடல்களை ஆராயும்போது சில தொடர்களுக்குப் பொருள் புரியாமல் அவரே திகைக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. அத்தகைய நிலை ஏற்படுகையில் அத்தொடர் அவர் மனத்தில் பதிந்துவிடுகிறது.       சிந்தாமணிக் காப்பியத்தில் சீவகன் யாழிசைத்துப் போட்டியில் காந்தருவதத்தையை வென்றான். இதனால் கட்டியங்காரன் பொறாமை கொண்டு அங்கிருந்த மன்னர்களை நோக்கிச் சில சொற்களைக் […]


 • அளித்தனம் அபயம்

  அளித்தனம் அபயம்

                                             இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். இலங்கையைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார். எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்று மாருதி கூறினார். அண்ணனுக்கு மொழிந்த நீதிகள் பயனளிக்காததால் வீடணன் இலங்கையை விட்டு நீங்கி இராமபிரானிடம் அடைக்கலமானார். பின்னர் சுக்ரீவனும், அனுமனும், வீடணனும் உடன் வர இராம இலக்குவர் இருவரும் இலங்கையை அடைய வேண்டி கடற்கரையை அடைந்தனர். அப்பொழுது […]


 • அருளிச்செயல்களில் மச்சாவதாரம்

  அருளிச்செயல்களில் மச்சாவதாரம்

               எம்பெருமானுக்கே பல்லாண்டு பல்லாண்டு எனப் பல்லாண்டு பாடி மகிழ்ந்தவர் பெரியாழ்வார். அதோடு நில்லாமல் கண்ணபிரானைக் குழந்தையாக்கிப் பிள்ளைத் தமிழ் பாடிப் போற்றியவர் அவரே.          பிள்ளைத் தமிழின் பத்துப் பருவங்களில் ஒன்றான செங்கீரைப் பருவத்தைப் பாடும்போது,          நம்முடை நாயகனே, நான்மறையின் பொருளே,                  நாவியுள் நற்கமல நான்முக னுக்குஒருகால்          தம்மனை யானவனே, தரணி தலம்முழுதும்                  தாரகை யினுலகும் தடவி யதன்புறமும்          விம்ம வளர்ந்தவனே, வேழமும் ஏழ்விடையும்          […]


 • 10. வரவுச் சிறப்பு உரைத்த பத்து

  10. வரவுச் சிறப்பு உரைத்த பத்து

                         தலைவன் தான் மேற்கொண்ட செயலை வெற்றிகரமாக முடித்துத் தன் வீடு திரும்புகிறான். அதனால் மிகவும் மகிழ்ந்த தலைவி தன்னை எழில் புனைந்து அவனையே சுற்றிச் சுற்றி வருகிறாள். அதைக் கண்ட மற்றவர்கள் மகிழ்ந்து தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். தலைவனின் வரவினால் ஏற்பட்ட சிறப்பாலேயே இப்பேச்சுகள் அமைந்த பகுதி என்பதால் இப்பெயர் பெற்றது. இதில் முதல் ஐந்து பாடல்கள் தலைவனின் கூற்றாகவும், அடுத்த நான்கு பாடல்கள் தோழி தலைவிக்குச் சொல்வது போலவும், அடுத்த 500-ஆம் பாடல் தோழி […]


 • 9. தேர் வியங்கொண்ட பத்து

  9. தேர் வியங்கொண்ட பத்து

                         தலைவன் எதற்காகச் சென்றானோ அந்த வினை முடித்துத் தேரில் திரும்பி வருகிறான். வலிமையான குதிரைகள் பூட்டப்பட்ட தேர் விரைவாகத்தான் செல்கிறது. இருந்தாலும் அவளைப் போய்ப் பார்க்கும்  ஆசையால் அவன் தேர்ப்பாகனிடம் இன்னும் விரைவாகச் செலுத்துமாறு பணிக்கிறான். இப்படி அவன் தேர்ப்பாகனிடம் கூறும் பத்துப் பாடல்கள் கொண்டதால் இப்பகுதி இப்பெயர் பெற்றது. வியங்கொள்ளுதல் என்பது தேரினைச் செலுத்தும் செயலிலிலே விரைவைக் கொள்ளுதல் என்னும் பொருளைத் தரும். ===================================================================================== 1.சாய்இறைப் பணைத்தோள், அவ்வரி அல்குல், சேயிழை மாதரை […]