Articles Posted in the " கடிதங்கள் அறிவிப்புகள் " Category

 • காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020)

  காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020)

  வணக்கம்,காற்றுவெளியின் ஆவணிமாத இதழ்(2020) இன்றுமுதல்  மின்னஞ்சல் ஊடாக அனுப்பப்பட்டுவருகிறது.தாமதமானதிற்கு மன்னிக்கவும்.வழமையான சிற்றிதழுக்கான நெருக்கடிகளேயெனினும் மாதாமாதம் தவறாது வந்துகொண்டிருக்கிறது.காற்றுவெளியை நிறுத்திவிடலாமே,தங்களுடன் இணைந்து பணியாற்றலாமே இப்படி நிறையவே அனுபவம்..இம்மாதம் நாம் அறிவித்தபடி மொழிபெயர்ப்புச் சிறப்பிதழாக வருகிறது.படைப்புக்களை அனுப்பிய படைப்பாளர்களுக்கு நன்றி.இவ்விதழில் பெரி.சண்முகநாதன்(நஸீம் ஹிக்மத்/துருக்கி),அ.தமிழ்ச்செல்வன்(கடவுள் என்று..),எம்.எச்.எம்.ஷம்ஸ்/பராக்கிரம கொடிதுவக்கு),முனைவர்.ர.ரமேஷ்(சந்திரா மனோகரன்),வ.ந.கிரிதரன்(பிஷ் ஷெல்லி,கவிஞர்.பைரன்),லதா ராமகிருஷ்ணன்(அன்னா அக்மதோவா),ராஜி வாஞ்சி(பிரான்ஸிஸ் எலன் வாட்கின்ஸ் ஹார்பர்),பேராசிரியர்.மலர்விழி.கே(மூட்னகூடு.சின்னச்சாமி/பா.தென்றல்),தமிழ்க்கிழவி(அஜித்.சீ.ஹேரத்/டீ.பிரீத்தி,எம்.கல்பனா,கூம்பியா,பேராசிரியர்.கிளார்க்),கோகிலவாணி தேவராஜா(லாரா ஃபெர்ஹஸ்/அனிருத்தன் வாசுதேவன்),சுகிர்தா சண்முகநாதன்(ரேசா சைய்ச்சி/பேர்சிஸ்)),முருகபூபதி(அவுஸ்திரேலியாவில்மொழிபெயர்ப்பு முயற்சிகள்),மு.தயாளன்(மாக்சிம்.கார்க்கி),மதுரா(Nichanor parra/ Miller Williams  ),சாந்தா தத்(எம்.எஸ்.சூர்யநாராயணா),க.நவம்(’Things you didn’t do!’),பெரி.சண்முகநாதன்(மஹ்மூத்.தர்வீஷ்)ஆகியோரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.காற்றுவெளி […]


 • எனது அடுத்த புதினம் இயக்கி

  எனது அடுத்த புதினம் இயக்கி

  அன்புத் தோழர்களே,எனது அடுத்த புதினம் இயக்கி. ஆதரவு தாருங்கள் முன்னுரை இன்றைய மதுரைக்குத் தென்கிழக்கில், பன்னிரெண்டு கிலோமீட்டர் தொலைவில், திருப்புவனத்திற்கு அருகே இருக்கும் பள்ளிச்சந்தை மேட்டுத் திடலில், செங்கல் சூளைக்கு மண் எடுப்பதற்காகத் நிலத்தைத் தோண்டிய ஒருவர், மிகப்பெரிய செங்கற்சுவரைப் பார்த்து, அதிர்ந்து போய் ஆராய்ச்சியாளர்களிடம் சொல்ல, அவர்கள் அங்கு சென்று பார்த்தபொழுது அந்த இடத்தில் பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன. மேட்டுத் திடலை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மேலும் ஆராயும் பொழுது, அந்தக் காலத்திலிருந்த செங்கற்சுவரைத் தவிர, உறை கிணறுகள், தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள், சூது, பவளம், பளிங்கு ஆகியவற்றால் செய்யப்பட்ட அணிகலன்கள், எலும்புக் […]


 • சர்வதேச கவிதைப் போட்டி

  சர்வதேச கவிதைப் போட்டி

  திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை  நடத்தும் மாணவ, மாணவியருக்கான மாபெரும் சுதந்திர தின கவிதைப் போட்டி… தலைப்புகள்1. தன்னம்பிக்கை2. மனித நேயம் சிறந்த கவிதைகளுக்கு, முதல் மூன்று பரிசுகளும் மற்றும் சிறப்பு பரிசுகளும் வழங்கப்படும்.கலந்து கொள்ளும் அனைவருக்கும் E-சான்றிதழ் வழங்கப்படும் மாணவர்களுக்கான மாபெரும் இணையவழி கவிதை களம் .. கலந்துகொள்ள விரும்பும் பள்ளி,கல்லூரி மாணவர்கள் பெயரை பதிவு செய்யவும். கவிதைகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி :  15.08.2020 குறிப்பு :கவிதை சொந்த […]


 • புத்தகச் சலுகையும். இலவசமும்

  புத்தகச் சலுகையும். இலவசமும்

  : சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்கள் சிறுகதைகள் தொகுப்பு ” காரிகா வனம் “  ,,  சிங்கப்பூர் எழுத்தாளர்கள் கதைகள் பற்றியக் கட்டுரைகள் கொண்டத் தொகுப்பு ” ஓ.. சிங்கப்பூர் “ இரண்டும் ரூ 250 ரூபாய் விலை. 220 ரூபாய்க்கு என சலுகையில் இவற்றை வாங்குவோருக்கு கீழ்க்கண்டதில் இரு நூல்கள் இலவசம். பழைய இருப்பு நூல்கள் அவை .  ..1. ஜெயமோகன் மொழிபெயர்ப்பிலான “ தற்கால மலையாளக்கவிதைகள் “ ( கனவு  வெளியீடு ) 2. யமுனா ராஜேந்திரனின் இரு நூல்கள்- குழந்தைகளின் பிரபஞ்சம் –திரைப்படக் […]


 • பெரியாரின்   *பெண் ஏன் அடிமையானாள்?* நூல் திறனாய்வுப் போட்டி

  பெரியாரின் *பெண் ஏன் அடிமையானாள்?* நூல் திறனாய்வுப் போட்டி

  நூல் திறனாய்வுப் போட்டிமொத்தம் 103 பரிசுகள் பரிசுத்தொகை ரூ. 27,250பெரியாரின்      *பெண் ஏன் அடிமையானாள்?* என்ற நூல் பற்றிய உங்களின் கருத்துரைகளை A4 அளவில் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதி, அஞ்சல் வழியாகவோ (by post) மின்னஞ்சல் (email) வழியாகவோ அனுப்ப வேண்டும்.போட்டியில் பங்கேற்க வயது வரம்பு இல்லை.முதல் பரிசு ரூ. 1000இரண்டாம் பரிசு ரூ. 750 மூன்றாம் பரிசு ரூ.500நான்காம் பரிசு:  100 பேருக்கு (100 * 250) ரூ. 25000*சிறந்த கட்டுரைகளைத் தொகுத்து நூலாக வெளிக்கொண்டு வரும் […]


 • துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?”

  துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?”

  அன்புமிக்க திண்ணை ஆசிரியர்க்கும் வாசகர்களுக்கும் வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன் குமுதம்-மாலைமதியில் தொடராக வெளிவந்த ‘சிக்குவானா, சிக்குவாளா?’ எனும் எனது துப்பறியும் புதினம் “WHODUNIT – A HE OR A SHE?” எனும் தலைப்பில் என்னால் ஆங்கிலத்தில் பெயர்க்கப்பட்டு அமேசான் கிண்டில் பதிப்பாக வெளிவந்துள்ளது. விரும்புவோர் வாசிக்கலாம்! அதன் லிங்க் கீழே – ஜோதிர்லதா கிரிஜா


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 227 ஆம் இதழ் இன்று (26 ஜூலை 2020) வெளியிடப்பட்டது.  இதழை https://solvanam.com/ என்ற இணைய முகவரியில் படிக்கலாம். இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: அத்வைதம் மறைந்து கொண்டிருக்கும் வேதாந்தமா? – கடலூர் வாசு …என்றார் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி  – ஏகாந்தன் வயாகரா  – நாஞ்சில் நாடன் பைய மலரும் பூ…   குமரன் கிருஷ்ணன் புதியதோர் உலகு – ரட்ஹர் பெர்ஹ்மான் – (தமிழுக்கு மாற்றி எழுதியவர் பானுமதி ந ) மற்றவர்கள் வாழ்வுகள்- 2  – ரிச்சர்ட் ரூஸ்ஸோ – தமிழாக்கம்: மைத்ரேயன் சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை – (பாகம்-4)- ரவி நடராஜன் இரண்டு வடையும் இளையராஜாவும் – கீமூ கவிதைகள்: கல்யாணீ ராஜன் கவிதைகள்   – மொழியாக்கம்: அம்பை புஷ்பால ஜெயக்குமார்- கவிதைகள் இன்பா – கவிதைகள் கதைகள்: தபால் பெட்டி  – இந்தி மூலம்: ப்ரஜேஷ்வர் மதான் (இங்கிலிஷ் வழியே […]


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 226 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 226 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 226 ஆம் இதழ் நேற்று (ஜூலை 12, 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. தளத்தின் முகவரி: solvanam.com இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: யோக்காய் – சுந்தர் வேதாந்தம் சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம் – ரவி நடராஜன் விழித்தெழுந்த அமெரிக்க மக்கள்! – லதா குப்பா பிஞ்ஞகன் – நாஞ்சில் நாடன் கல்லும் மண்ணும் – வ.ஸ்ரீநிவாசன் மற்றவர்களின் வாழ்வுகள் –மைத்ரேயன் பாவண்ணனின் ‘கிருஷ்ண ஜெயந்தி’ – அழியாத வெண்பாத சுவடுகள் – முனைவர் ராஜம் ரஞ்சனி கூட்டு அக்கறைகள் கொண்ட பிரதி – கே.என். செந்தில் கதைகள் மஞ்சள் கனவு – நாச்சு சுதந்திர பூமியில்… (In the Land of the Free) – ராஜி ரகுநாதன் சுடோகுயி – பாகம் 2 – வேணுகோபால் தயாநிதி கேட்கத் தவறிய கிணற்றுத் தவளையின் குரல் –சக்திவேல் கொளஞ்சிநாதன் பங்காளி – இரா. இராஜேஷ் லீலாவதி – எஸ்.எம்.ஏ. ராம் மொழி – மாலதி ராமகிருஷ்ணன் […]


 • துயர் பகிர்தல் – திருமதி பத்மாவதி சோமகாந்தன்.

  குரு அரவிந்தன் எழுத்தாளர் திருமதி பத்மா சோமகாந்தன் அவர்கள் புதன்கிழமை 15-7-2020 மாலை கொழும்பில் காலமாகியதாகத் தெரிவித்திருந்தார்கள். இவர் யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். திருமதி பத்மா சோமகாந்தன், மிகவும் அன்போடும் பாசத்தோடும் பழகக்கூடியவர். மூத்த எழுத்தாளரும், பெண்ணியச் சிந்தனையாளருமான இவர் தனது எழுத்து ஆளுமையால் பெண்களின் முன்னேற்றத்திற்காகப் பல கட்டுரைகளை ஊடகங்களில் எழுதியது மட்டுமல்ல, நூலாகவும் வெளியிட்டிருந்தார். ஈழத்து சோமு என்று இலக்கிய உலகில் அழைக்கப்பட்ட திரு. நா. சோமகாந்தன், திருமதி பத்மா சோமகாந்தன் ஆகிய […]


 • சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்

  சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ்

  அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 225 ஆம் இதழ் இன்று (28 ஜூன் 2020) வெளியாகியுள்ளது. இந்த இதழ் எங்கள் 12 ஆம் ஆண்டின் துவக்கத்தையும் கொண்டாடுகிற ஒரு சிறப்பிதழ். இதை ஸ்பானிய மொழி எழுத்தாளர், ரொபெர்டோ பொலான்யோவை மையமாகக் கொண்ட ஒரு இதழ். இதழை சிறப்புப் பதிப்பாசிரியராக நம்பி கிருஷ்ணன் அவர்களை அழைத்து வழி நடத்தச் சொன்னோம். நிறைய கதைகளும், கட்டுரைகளும் கொண்ட கனமான ஒரு இதழாக இது அமைந்திருக்கிறது. இந்த இதழ் கிட்டும் வலை […]