கு.அழகர்சாமி
விடி
காலை.
சிந்தியிருக்கும் தான்யங்களைச் சீக்கிரமாய்க் கொறிக்கப் பார்க்கும்
அணில்கள்-
படபடத்து இறங்குகின்றன புறாக்கள்
எங்கிருந்தோ.
ஓடிச் சிதறுகின்றன திசைகள் தேட
அணில்கள்.
ஒரு தான்யமும் விட்டு வைக்கவில்லை
புறாக்கள்.
உதிக்கும் சூரியனைக் கொறிக்கிறது முன் கால்களில் தூக்கி
ஓர் அணில்.
கு. அழகர்சாமி