This entry is part 7 of 17 in the series 12 பெப்ருவரி 2023

ஆர் வத்ஸலா

மழை! மழை! மழை!

பிடிவாதமாய்…

நடுத் தெருவில்

உருண்டு புரண்டு

அழுது

அடம் பிடிக்கும்

குழந்தையை போல்

அனைத்து ஜன்னல்களையும்

அடைத்து அறைக்குள்

சிறைப்படுத்திக் கொண்டிருக்கும் நான்

வழக்கம் போல்

வெளியே வந்து

நனையும் வரை

பெய்வதென சபதம் எடுத்தாற்போல்

அதற்கென்ன தெரியும்

கிளம்புகையில்

அவன் சொன்ன சொற்கள்

மூட்டிய நெருப்பை

அவன் கண்ணீரால்

மட்டுமே அணைக்க முடியும் என்றும்

அது வரை தண்ணீரும்

எனக்கு நெருப்புதான் என்றும்

Series Navigationகே. எஸ். சுதாகரின் “பால்வண்ணம்” சிறுகதைத்தொகுப்பு – ஒருகண்ணோட்டம்இருப்பதும் இல்லாதிருப்பதும்