சேயோன்

சிட்டுக்குருவிக்கென்ன
கட்டுப்பாடு?
இந்தப் பாடலே அந்த
சிட்டுகளின் தேசத்துக்கு
ஒரு தேசீயகீதமாய்
ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இன்று இதன் சிறகடிப்புகள்
கைபேசிகளில் கூடு கட்டி
உலகத்தின் முகத்தையே
மாற்றிக்கொண்டிருக்கின்றன.
மரக்கிளைக்குருவியும்
மின்னணுக்குருவியும்
போட்டுக்கொண்ட கூட்டணியில்
உலக அரசியலே கதிகலங்கிக்கிடக்கிறது.
முட்டை போட்டு குஞ்சு பொரித்தாலும்
பொரிக்காவிட்டாலும்
பில்லியன் பில்லியன் டாலர்கள்
எங்கோ
ஒரு பக்கம் குவிந்து கொண்டிருக்கிறது.
கீச்கீச்சென்று அவை
கலித்தொகையும் குறுந்தொகையும்
பாடிக்கொண்டிருப்பதால்
காதல் மின்னல்களின் நெய்தலில்
இந்த உலகம் அழகாய் சுழல்கிறது.
எந்தப்பறவை என்றால் என்ன
ஹாஃப் பாயில் என்று வரும்போது
நட்சத்திர ஓட்டல்களின் மேஜைக்கும்
வருவது உண்டு.
மனிதனுக்கு
மரம் மட்டை புழு பூச்சியோடு
இந்த வானம் கூட
தீனியாகும் போது
ஒரு நாள் இந்த உலகமே
காணாமல் போய்விடலாம்.
செவ்வாய்க்கோளின் கூண்டு வீடுகளில்கூட
ஒரு சிறிய கூண்டில்
அது சிறகடித்து சிக்னல்கள்
தந்து கொண்டிருக்கும்.
_____________________________________________________________
சேயோன்.
- இந்திய விண்ணுளவி சந்திரியான் நிலவின் ஒளிபுகா துருவக் குழிகளில் பேரளவு பனிநீர்ப் பாறை இருப்பதைக் காட்டியுள்ளது
- புத்தளம் கப்பலடி பாடசாலையில் முப்பெரும் விழா
- ஆகச் சிறந்த காதல் – ஆகச் சிறந்த அரசியல்
- உலக சிட்டுக்குருவிகளின் நாள்
- அகழ்நானூறு 20
- ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோ நாடகம் – அங்கம் – 2, காட்சி – 1 பாகம் – 1
- குருவியும் சரக்கொன்றையும்
- புதிய குவிகம் ஒலிச்சித்திரம் வெளியீடு
- சினிமாவில் சாயலும் – தழுவலும் – திருட்டும் – எதிர்வினைகளும் ! ரசிகர்களும் வாசகர்களும் சந்திக்கும் புள்ளி ! !
- காலவெளி ஒரு நூலகம்
- கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் நடத்தும் இலவச சிறுகதைப் பயிற்சிப்பட்டறை
- போகம்
- சி.ஜெயபாரதன் அணுசக்தி அனுபவங்கள் -பாகம் – 2
- தில்லிகையின் மார்ச் மாத கூடுகை அழைப்பிதழ்
- அந்தரம்
- பூமியில் உயிரின மூலவிகள் தோற்றம்
- நட்பூ
- நாவல் தினை – அத்தியாயம் ஏழு (CE 5000 CE 1900)
- 18வது திருப்பூர் சக்தி விருது 2023 விழா
- காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா
- பேச்சுரிமை – எழுத்துரிமை – கருத்துரிமை
- வஞ்சனை சொல்வாரடீ, கிளியே