This entry is part 4 of 7 in the series 26 ஜூலை 2026

சுத்த உடல்
மோகமும்,ஆசைகளும் பெருகி கிடந்த
மனத்தில் ஓங்கி உயர்ந்திருந்தான்
கடவுள்
அவனிடம் என் உடலை காட்டினேன்
அவன் எதுவும் சொல்லாமல் என் உடம்புக்குள் உறுப்பாகினான்
எண்ணம்,ஆசை,லட்சியம்,ஆன்மீகம், புனிதம்,பாவம்
என்று வகுத்திருந்தலிருந்து அவன் வெளியேறி வெறும் உலடாகி,தசையாகி,உணர்வாகி
பெருகி அடங்கினான்
சுத்த உடல்,சுத்த மெளனம்,சுத்த பிரமை
என என் உடலுக்குள் புதிய வடிவெடுத்து
பயணம் செய்த அவனுக்கு
கடவுள் ஆனேன்
உடல் மட்டுமே ஆன உடலால்

2.
முடை சுற்றி நாற்றமெடுத்த உடலுக்குள்ளும்
வலியின் ஜீவனாய் இருக்கிறான்
கடவுள்

Series Navigationகனவு இருந்தது.குதிரைச் சம்மட்டி