“யாத்தே யாத்தே” களின் யாப்பிலக்கணம்

This entry is part 16 of 42 in the series 1 ஜனவரி 2012

ஆடுகளத்தில்
தனுஷ் பாடும் பாட்டு
………….
………. …
சில பல ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்னே போய்
குறுந்தொதொகையில்
“கல் பொரு சிறுநுரையார்”
கவிதை எழுதிய போது..
“அணிலாடு முன்றிலார்”
எழுத்துக்கள் எனும்
மயிலிறகினால்
மனம் வருடியபோது….
திடீரென்று
அந்த எழுத்தாணி
அதே சில பல
ஆயிரம் ஆண்டுகளை
விழுங்கியபின்
கோடம்பாக்கத்தில்
“கொல வெறியார்” ஆகி
பாடல் எழுதினால்………….

சிநேகனுக்குள்ளிருந்து
எத்தனை எத்தனை
தனுஷ்கள் கருவுயிர்த்தனர்?

இதோ கேளுங்கள்……

கீது கீது
பேஜாரா கீதும்மே !
கசாப்புக்காரன் கத்தியப் போல
கண்ட துண்டம் ஆக்கினாயேம்மே !

பாடையிலே படுத்து
கெனாவும் கண்டேம்மே!
ஐ லவ்வுன்னு நீயும்
ஸொல்லிப்பிட்டாயேம்மே!

பொட்டுனு விழுந்து
வானமும் ஒடஞ்சு
பொடி பொடி யாச்சும்மே!

காக்கு டெய்லே மூஞ்சி கழுவி
அரிதாரம் போட்டு
ஆடிப்பாத்தேம்மே!

ஸ்டெடியே ஆவலே

ஸ்டெடியே ஆவலே
குவார்ட்டர் கட்டிங்ல
குளிச்சுப் பாத்தேம்மே
ஃபுல்லும் ஏத்தி
புல்லு மேஞ்சு
கவுந்து கெடந்தேம்மே நா.
கவுந்து கெடந்தேம்மே
நெஞ்சுக்கூட்டு மஞ்சாச்சோறு
லப்பு டப்பு லப்பு டப்பு
கூவுது! கூவுதுமே!
அதுலே.. ஓம் பேரு
கேக்குதுமே! கேக்குதுமே!

ஓம்! ஸாந்தி ஓம்! ஸாந்தி!
ஓம்! ஸாந்தி ஸாந்திமே!
வாந்தியெடுத்தால்
ஓம் பேரு எல்லாம்
ஒய்கிப்பூடும்மே
அதனாலெ இனி நா
வாந்தியெடுக்க மாட்டேம்மே!
இனி நா
வாந்தியெடுக்க மாட்டேம்மே!
டீலு போட்டுக்கினேம்மே!
இது ஸத்தியம் ஸத்தியம்
ஸத்தியதானேம்மே!

============================================================
ருத்ரா (என்கிற) “தனுஷ்யபுத்திரன்”

Series Navigation2012 ல் தேவை ஒரு ஃகாட் ஃபாதர்மலைபேச்சு – செஞ்சி சொல்லும் கதை – 7
author

ருத்ரா

Similar Posts

2 Comments

  1. Avatar
    கே. பி. ஆனந்தன் says:

    எவனோ ஒருத்தன் கொலவெறி கொலவெறின்னு பாடிப்புட்டான்னு வேட்டிய மடிச்சு கட்டிட்டு தமிழறிஞங்க அத்தனை பேரும் குதியா குதிக்கிறாய்ங்க. சினிமாவ ஏன்தான் இப்பிடி கட்டிட்டு அழறாங்களோ? கொலவெறி பாடுனவன் ஒண்ணும் தமிழ வாழ வெப்பேன்னோ மக்களுக்கு வழி காட்டுவேன்னோ சொல்லலியே? போவீங்களா, பொத்திக்கிட்டு.

    1. Avatar
      ruthraa says:

      கே.பி.ஆனந்த் அவர்களே

      நீங்களும் அந்த பாட்டின் மேடைமீது தான் நின்று கொண்டிருக்கிறீர்கள் போல் இருக்கிறது.அந்த பாட்டின் வரி ஒன்றை காணோமே என்று தேடிக்கொண்டிருக்கிறோம்.அது உங்கள் கடிதத்தின் இறுதியில் இருக்கிறது…
      …..”போவீங்களா பொத்திகிட்டு…”

      அதிர்ச்சியுடன்
      ருத்ரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *