எண்ணங்களின் கனத்தில் உடைந்து விழுந்துவிட்டேனா என்று தெரியவில்லை. இல்லை மௌனம்தான் பெருஞ்சுமையாய் அழுத்திற்றோ என்னவோ! ரயில் விபத்தில் சிக்கிக்கொண்ட பெட்டிகள்போல என் எண்ணங்களும் ஒன்றின்மேல் ஒன்று ஏறிக்கொண்டு காயப்பட்டுக் கிடக்கிறது.…
நீ ஊட்டிய அமுதில் என் நகங்களும் பசியாறின உன் தாலாட்டில் இமைகள் சுமையிறக்கின உன் விரல் பிடித்து நடந்தேன் விரல்கள் விழிகளாயின உன் கோழிக் குஞ்சிகளை சாயம் ஏற்றாமல் மேயவிட்டதில்லை மிரண்டன பருந்துகள் பசலையும்…
-எடுக்கப்படாமல் ஒலித்து நிற்கும் தொலைபேசிமணி... ஏகப்பட்ட கேள்விக்கிளை விரிக்கிறது... அச்சம்,எரிச்சல், ஆவல்.... ஏதோ மீதூர , மீண்டும்,மீண்டும்...முயலவேண்டாம்! அந்த முனையில் , உக்கிரமான வாதம் ஓடிக்கொண்டிருக்கலாம் ! உருக்கமான பிரார்த்தனை பக்கத்தில் நடக்கலாம்.. கடன்காரனோ,…
அந்திச்சூரியனும் முழுமதியும் இணையும் இனியதொரு பொழுதின் ஏக்கமும் கூடிக்களிக்கும் குதூகலக் கற்பனையும் சுவையான கருப்பஞ்சாற்றில் ஊறித்திளைத்து கனிவான கற்கண்டாய் உருமாறி கவின்மிகு கருவதனைக் கொள்ளவே தவியாய்த் தவித்து மனம் பனியாய் உருகிப் பார்த்திருக்க....... பதமாய்…
நீலவானம் இலக்கு இருக்கிறதா செல்லும் மேகத்திற்கு பழுத்த இலை உதிர்கிறது இனி அவை எங்கெங்கு பயணப்பட வேண்டியிருக்குமோ அலை மெல்ல கிசுகிசுத்தது கரையோ மறுதலித்தது காற்று வேகமெடுத்தது பூக்கள் ராஜபாட்டை விரித்தது பறவைகள் கூட்டம்…
வெளி அனைத்தையும் உள்ளடக்கி இருக்கிறது உள்ளக்கிடக்கையை முகிலாகித் தணித்தது கூண்டுப் பறவை இறக்கையைக் கோதிக் கொள்ளும் வான விதானத்தைப் பார்த்தபடி கருடன் நிழலைக் கண்டு அஞ்சும் கோழிக் குஞ்சுகள் பரிதி முளைக்கும் வானம் தங்க…
ரெட்டைச்சடையில் திராட்சைக்கண்களுடன் என்னை நீ திருடிச்சென்ற பிறகு இந்த பூங்காவே வெறுமை. பட்டுப்பூச்சிகளும் பட்டுப்போயின. காதலைப்பற்றி உருகி உருகிச்சொல்ல காளிதாசனைத் தான் வாடகைக்குக்கு கூப்பிட்டேன். எழுத்தாணி துருப்பிடித்துக்கிடக்கிறது பாலிஷ் போட வேண்டும் என்றான்.…
விரலுக்குள் மனத்தின் வானவில். கற்பனை செய்ததை கருவாக்கி உருவாக்கும் மயிர்ப்புல் தடவியதில் வனங்கள் உயிர்க்கும். முகங்கள் சிரிக்கும். பூவும் புள்ளும் புது மொழி பேசும். திரைச்சீலையில் சுநாமிகளும் தெறிக்கும். குங்குமக்கடலில் சூரியன் குளிக்கும்.…
உவகையுடன் சட்டம் இயற்றும் நீவிர் அதனை முறிக்கையிலும் பேருவகை கொள்கிறீரே. கடலோரம் விளையாடும் சிறார்கள் மணற்கோபுரங்களைக் கருத்தாய் கட்டி குதூகலத்துடன் அதைச் சிதைக்கவும் துணியும் அச்செயலுக்கொப்பானத்ன்றோ இதுவும். ஆயின்,நீவிர் மண்ற்கோபுரம் அமைக்கும் தருணமதில் கடலன்னையவள்…
மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா காதலில் எனக்கு வேதனை தவிர வேறில்லை ஏது மில்லாக் காதல் எதற்கு ? உன் இதயத்தை அவளுக் களித்து அவளது இதயத்தை…
+++++++++++++++ காதல் உபதேசம் +++++++++++++++ மூலம் : வில்லியம் ஷேக்ஸ்பியர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா முன்னுரை: நாடக மேதை வில்லியம் ஷேக்ஸ்பியர் 154 ஈரேழ்வரிப் பாக்கள் எழுதி யிருப்பதாகத் தெரிறது. 1609…
வையவன் பிறந்தாள் ஒரு பெண் அடுத்தடுத்து ஐந்தாறு பெண்கள் பிறந்த பண்ணை வீட்டின் வழிநடையில் அந்தியிருள் சூழ்ந்த அரைக் கருநிழலில் கூடியிருந்த கும்பல் விலக்கிப் பேறு பார்க்கச்சென்ற மாது நிசி கழிந்து முகம் தொங்கி…
இரவில் ஏன் தூங்கணுமென்பாள் சின்ன மகள். குருவிகள் தூங்குகின்றன என்பேன். நட்சத்திரங்கள் தூங்கவில்லையே என்பாள். நட்சத்திரங்கள் பகலில் தூங்குமென்பேன். ’இரவில் பின் ஏன் தூங்கணும்’- இன்னும் சமாதானமாகாள் சின்ன மகள். ’சரி காத்தால பள்ளிக்கூடம்…
பொம்மை முடித்ததும் மீதம் களிமண்.. தலைக்குள்....! -------------------------------------- களிமண் நிலம்.. புதையலானது.. குயவனுக்கு....! --------------------------------------- தோண்டத் தோண்ட தீரவேயில்லை.... களிமண்..! ---------------------------------------- களிமண்ணும் நீரும். குயவன் கைகளின் அட்சயபாத்திரம்...! ------------------------------------------ களிமண்ணும்.. சக்கரமும்.. குயவனானான்…