-ரவிஅல்லது எனக்கான சாத்தியக்கூறுகள் வாழ்க்கை முழுவதும் விரவிக்கிடக்கையில் உன்னிடம் நான் பேசியிருக்கலாம். எத்தனையோ பேரிடம் எத்தனையோ மணி நேரம் பேசினேன். உன்னிடமும் சிரித்து மகிழ்ந்து என இதில் ஏதோ ஒரு நிமிடத்தை மன்னிப்பிற்காக நான் மாற்றி இருக்கலாம். தயக்கம் என் வாழ்வின் பல போக்குகளை பலியாக்கி மாறியதை நான் அறிந்தே இருக்கிறேன். என் தயக்க வியாதி உன்னிடம் தயக்க அச்சமாய் வாழ்வோடு உள் உறுத்தலாய் இதுவரை என்னை கொண்டு வந்துவிட்டது. என் உயிர் அசைவின் இறுதி துடிப்பு […]
ரவி அல்லது பாயோடு பாயாக படுத்துக்கிடப்பனுக்கு பணிவிடைகள் செய்யும் பாட்டி ஒரு பொழுதும் சொன்னதே இல்லை நான் உன்னைக்காதலிக்கிறேனென எப்பொழுதும். தோல் போர்த்தி துவண்டு கிடக்கும் கிழவனும் மனதாரக் காதலிக்கிறேனென மருகவில்லை வாழ்வில் ஒருபொழுதும். வார்த்தைகளில் வீழாத அவர்களின் வயோதிகத்திலும் நிரம்பி வழிகிறது காதல் அருந்தி மகிழுமாறு அடுத்த தலைமுறைக்கு நேச நெகிழ்வில். *** -ரவி அல்லது. ravialladhu@gmail.com
சோம. அழகு பேரு பெத்த பேரு – அமேஏஏஏரிக்கா! எந்த மாகாணத்திற்குச் சென்றாலும் ஒரே மாதிரியான அறிவியல் பூங்கா, உயிரியல் பூங்கா, மீன்கள் பூங்கா(acquarium), கண்களுக்குச் சலிப்பைத் தரும் தற்கால கட்டிடக் கலையின் கைங்கர்யத்தில் ஒரே மாதிரியாக நிற்கும் பசுங்காரைத் தொகுதிகள் (cement blocks)….! அரிதினும் அரிதாக Grand Canyon போன்ற வித்தியாசமான நிலப்பரப்புகள், சுதந்திர தேவி சிலை, நயாகரா அருவி… அவ்வளவுதான். சுற்றிப் பார்ப்பதற்கோ ரசிக்கத்தக்கதாகவோ ஒன்றும் கிடையாது. இவர்களது அருங்காட்சியங்கள் கூட சுமார் ரகம்தான். […]
மீனாட்சி சுந்தரமூர்த்தி. கமலம் பட்டுச்சேலை பளபளக்க கழுத்தில் காசுமாலையும் வைரக்கல் அட்டிகையும் கலகலக்க, காதில் வைர லோலாக்கு ஊஞ்சலாடப் பேருந்தில் ஏறினாள். பின்னாலேயே முருகேசன் பட்டு அங்க வஸ்த்திரம்,அகலக்கரை போட்ட வேட்டி, ஜிப்பா சிலுசிலுக்க ஏறினார்.. கும்பிடறேனுங்க ஐயா, அம்மா வணக்கம் என்றார் நடத்துநர் ஓட்டுநர் திரும்பிப் பார்த்து,’ அம்மா வணக்கமுங்க, பெரியம்மா வரலியா? ‘.. மாடு, கண்ணுங்களை யாரு பாக்கறது?அதான் கெழவிய பாத்துக்கச் சொல்லி வந்துட்டோம்.’ கிழவி என்றது மாமியாரைதான். ‘பெரியவரு தேங்கா மண்டியை […]
சசிகலா விஸ்வநாதன் ராம திலகம் நிதானமாக வீட்டை சுற்றி வந்தாள். எல்லாம் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் இருந்தது. ஸ்வாமி மாடத்தில் அமர்ந்து கொண்டு அம்பாள் காமாட்சி இவளையே பார்த்துக் கொண்டு இருப்பதாகத் தோன்றியது. “சட்” என் தன் பார்வையை விலக்கிக் கொண்டாள். அருகில் இருந்த குத்து விளக்கை ஏற்றும் போதும் அவளுடைய பார்வை குறுகுறு வென அவள் மேல் படர்ந்தாற் போல் உணர்ந்தாள். எடுக்கப்பட்ட முடிவுக்கு ஆசி அளிக்கிறாளா? வீடு […]
ரவி அல்லது முக்கோணத்தில்முளைத்திருக்கும்கொம்பான வளைவுகளையும்.சதுரத்தில்நெளிந்திருக்கும்பின்னல்கோலங்களையும் பார்க்கும்பொழுதெல்லாம்அம்மாவின்நினைவு வரும்.அவரைப் போன்றஒருவர்இங்கிருப்பதுசற்றேஆறுதலாகத்தான்இருக்கும்.கடக்கும் கணம்நேசத்தில்ஏக்கமாக மனம் எட்டிப்பார்க்கும்.கவனம் பெறாதமாக்கோலத்தைப்போலகண்டுக்கொள்ளப்படாமல்இங்கு இவர்கள்இருப்பார்களோ என்றகவலையோடுகடப்பதுஒவ்வொரு முறையும்நடந்தேறும்இல்லாமையின்இன்னலின்நெருடலாகஎங்கேயும்எப்பொழுதும். -ரவி அல்லது.ravialladhu@gmail.com
சசிகலா விஸ்வநாதன் பதினெட்டு வயது இளந்தாரி பையன் பல வண்ணங்கள் தெறித்து,பழசான ஆங்காங்கே நைந்து போன கால்சராய்; என்றோ மஞ்சள் வண்ணத்தில் இருந்து இன்று பல வண்ண தெறிப்புகளின் கோலம் வண்ணக் கலவையில் அவசரமாய் முக்கியெடுத்து பிழிந்தும், பிழியாமலும் உலர்த்தினாற் போல், மேற்சட்டை அவன் மார்பு கூட்டை மறைக்க;சட்டையின் நீண்டு தொங்கும் பாகம் கையைத் துடைக்க அவன் மேலிழுக்க ஒட்டிய வயிற்றின் வறுமை காட்டியது. சுவரில் பல்லி போல் ஒட்டிக்கொண்டு, பூரான் போல் உரு மாறி கொள்ளையன் […]
சோம. அழகு அமெரிக்க வாழ் தமிழர்களின் தமிழை வைத்து அவர்களது சொந்த ஊரைக் கண்டுபிடிக்கவே இயலாது. ஏனெனில் எல்லா வட்டார வழக்குகளையும் விழுங்கிவிட்ட ஒரு செயற்கையான மேட்டுக்குடித் தமிழ் அது. குழந்தைகளின் தமிழைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். எங்கேனும் எப்போதேனும் அவர்களிடமிருந்து எட்டிப் பார்க்கும் தமிழில் ர, ட போன்ற எழுத்துகள் அவற்றை ஒத்த ஆங்கில ஒலியைப் பெற்றுவிட்டன. [ல, ள, ழ], [ர, ற] மற்றும் [ந, ன, ண] ஆகியவற்றினுள் வித்தியாசமே இல்லை. நம் […]
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 335ஆம் இதழ், 26 ஜனவரி., 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள் நூல் அறிமுகம் ரசனையைக் களித்தலும் நுட்பத்தை வியத்தலும் – ரமேஷ் கல்யாண் ராவண நிழல் – புதினம் – இரா. சைலஜா சக்தி மனிதர்களின் கதை: நிழல் நிஜம் – அன்பாதவன் அரசியல் முன்னும் பின்னும் – சமத்துவத்தின் வியக்கத்தக்க தோற்றமும் அதன் அரசியலும் – தமிழாக்கம் […]
எங்கோ தலைசாய்த்து பார்க்கின்றது சிட்டுக்குருவி. துணையை தேடுகின்ற காலத்தில் வேதனையை முழுங்கிவிடுகின்றது. ஒற்றைக்குருவியாய் சுள்ளிகள் பொறுக்கி கூடும் கட்ட உடல் வேதனை. மனம் இன்னும் துணை வராமல் காத்திருக்க. பக்கத்து கூட்டில் கொஞ்சி குலாவி மகிழ்ந்து உயிரோடு உயிர் கலந்து சில்லிட்டுப்பறந்தன ஜோடிக்குருவிகள். சிட்டுக்குருவியின் ஏக்கத்தில் என் அக்கா தடவிய ஜன்னல் கம்பிகள் தேய்ந்தே போயின பல வருடங்கள் துணைக்காக காத்திருப்பு வாழ்வின் பெரும் சோகம். ஜாதகக்கட்டில் பல்லாங்குழி விளையாடினார் புரோகிதர் சிகாமணி. சர்ப்ப தோஷம் செவ்வாய் […]