அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர்
ராஞ்சா ராஞ்சா கர்தி நி மே அப்னா ராஞ்சா ஹொய்
நாயகன் ராஞ்சாவை நாளும் பொழுதும் நினைத்து நினைத்து
நானும் ராஞ்சாவாகிப் போனேன்
எனவே என்னை தேவி ராஞ்சா என்று விளித்திடுங்கள்
கதையின் நாயகி ஹீர் என்று என்னை அழைக்கவேண்டாம்
எனக்குள் ராஞ்சா ராஞ்சாவுக்குள் நான்
இனி எந்தவித வேறுபாடும் இல்லை.
- பஞ்சாப் கஜல் கவிஞர் பாபா புல்லே ஷா
நபீல், தக்கார் மாகாணம், ஆப்கானிஸ்தான்
முதலாளி மது பாட்டிலை திறந்தார் என்றால், கூடவே, அவர் கையோடு வாங்கி வந்து இருந்த, மணமணக்கும் அந்த பிரியாணி பொட்டலத்தைத் திறந்தார் என்றால், இனி கச்சேரி களை கட்டப் போகிறது என்றே அர்த்தம்.
நான் எனது ரூபாப்பில், பஞ்சாப் புலவர் பாபா புல்லே ஷா எழுதிய ஒரு பஞ்சாபி காதல் கவிதையை இசையாக வடித்துக்கொண்டு இருந்தேன்.
எனது இசைக்கு ஏற்ப, குல்பாரி எனது கற்பனையில், எனது முன்னே வந்து வந்து அபிநயம் பிடித்து ஆடி, ஆடிப் போனாள்.
என் முன்னே இருந்த முதலாளியோ, அவரது தக்குனூண்டு கால் சராயில், முசுமுசுவென்று முடிகள் வளர்ந்து இருந்த அவரது தொடையைத் தட்டி, எனது ரூபாப் இசையை, ரசித்துக் கொண்டு இருந்தார்.
நான் எனது குல்பாரி கற்பனையை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டேன். திடீரென, முதலாளி, அவரது ஒரு கையை உயர்த்தி, எனது இசையை நிறுத்தச் சொன்னார். நான் உடனே பயந்து போய், நான் வாசித்துக்கொண்டு இருந்த ரூபாப்பை கீழே வைத்தேன்.
ஒரு வேளை, முதலாளி எனது உண்மையான மனதைக் கண்டு பிடித்து விட்டாரோ? எனக்குள் ஒரு உதறல் எடுத்தது.
ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை.
“இந்தப் பாடலின் இசை எனக்கு மிகவும் பரிச்சயமான ஒன்றாக இருக்கிறது. ஆனால், பாடல்தான் எனது நினைவுக்கு வர மாட்டேன் என்கிறது. உன் இசையில் ஒலிக்கும் அந்தப் பாடல் வரிகள்.. என்ன பாடல் வரிகள்?” அவர் என்னை நோக்கி வினவியபோது, நான் “பஞ்சாப் கவிஞர், பாபா புல்லே சாவின் கவிதைப் பாடல் இது அய்யா” என்று சொன்னேன்.
உடனே, உற்சாகத்தின் விளிம்புக்கே சென்றார் முதலாளி. “வாரே வாவ்… என்ன ஓர் கவிதைப் பாடல் இது தெரியுமா? பஞ்சாப்பின் பிரபலமான கதைகளின் ஒன்றான ஹீர்ராஞ்சா என்ற கதையின் நாயகன்தான் ராஞ்சா. அழகான வாலிபன். அவனது அழகைப் புகழ விரும்பிய, பஞ்சாப் கவிஞர், பாபா புல்லே சா, தன்னையே பெண் வடிவம் ஆக்கி, ராஞ்சாவைக் காதலிப்பதாக எழுதிய கவிதை இது… எங்கே இப்போது மறுபடியும், இதே கவிதையை, உனது ரூபாப்பில் வாசி பார்ப்போம்” என்று முதலாளி சொன்னவுடன், நான் மறுபடியும் வாசிக்க ஆரம்பித்தேன்.
இப்போது, முதலாளியும், எனது இசைக்கேற்ப பாட ஆரம்பித்தார். நான், ரூபாப் வாசித்துக்கொண்டே முதலாளியைப் பார்த்தேன்.
கள்ளம் கபடம் இல்லாத உள்ளம். என் மீது எவ்வளவு ஆசை வைத்து இருந்தால், என் முன்னே நிர்வாணமாகவே அவரால் நிற்கத் தோன்றி இருக்கும்? நான், ரூபாப் வாசித்துக்கொண்டே, இன்னும் அவரை உற்றுப் பார்த்தேன். கம்பீரமான குரல் அவர் குரல். ஸ்வரங்கள் என்ற அற்புதமான குளத்துக்குள், நீந்தி நீந்திப் போகும் ஒரு அன்னப்பறவை போன்ற அவரது பாவனை.
அவரை, முதலாளியாகப் பெற, உண்மையில் நான்தான் கொடுத்து வைத்து இருக்க வேண்டும். கருணை மிகுந்த அவரின் சந்தோசத்துக்காக, நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எனது உடலையும் அர்ப்பணிக்கலாம். நான் இன்னும் நேர்த்தியாக வாசித்துக்கொண்டே இருந்தேன்.
பாடல் முடிந்தது. முடிந்தவுடன் அவர் “இந்தப் பாடல் பஞ்சாபி பாடல் ஆயிற்றே? உனக்கு எப்படித் தெரிய வந்தது” என்று அவர் கேட்ட போது, நான் பவ்யமாக பதிலளித்தேன்.
“அய்யா.. நான் ஒரு பச்சா பாசி விபச்சாரி. ஒரு நல்ல விபச்சாரிக்கு, வந்து போகும் வாடிக்கையாளர்களின் எல்லா மொழிகளும் தெரிந்து இருக்க வேண்டும் அல்லவா.. அவர் சொல்லித்தரும் எல்லாக் கலைகளும், எனக்கும் தெரிந்து இருக்கவேண்டும் அல்லவா?”. என்னையும் அறியாமல், எனது விழிகளில், கண்ணீர் உருண்டு திரண்டது.
நானே மறைத்த போதும், எனது பதிலில் தெரிந்த எனது விரக்தியை அவர் புரிந்து கொண்டார் போலும். மெல்ல நடந்து எனக்கு மிக அருகில் வந்து நின்றார்.
“ஒரு திருத்தம்… நீ விபச்சாரி அல்ல. நீ எனது ஆசை நாயகி… சில நேரங்களில், சில சூழ்நிலைகளால், சிலரோடு நீ பழக நேர்ந்து இருக்கலாம். ஆனால் அதில் உன் தவறு ஏதும் இல்லை. எப்படி இருந்தாலும், நீ என் ஆசைநாயகி.”
அவர் வார்த்தை குளறியது. நான் ஏதாவது பதில் சொல்வேன் என்று என்னையே பார்த்தார். நான் எந்த பதிலும் சொல்லவில்லை.
திடீரென்று அந்தக் கேள்வியைக் கேட்டார். “நீ எப்போதாவது மது அருந்தியிருக்கிறாயா?”
நான் இல்லை என்று தலையாட்டினேன்.
அவர் எதுவும் பேசாது என் முன்னால் ஒரு கண்ணாடிக் கோப்பையை வைத்தார். அந்தக் கோப்பை நிறைய மது இருந்தது.
“சாப்பிடு என் செல்லம்…” என்று கொஞ்சினார். என் கன்னத்தில் ஒரு முத்தமும் பதித்தார்.
நான் யோசித்தேன். எனது கவலைகளை மறக்க, அந்த மது எனக்கு உதவலாம் என்று தோன்றியது. நான் அதன்பிறகு பதில் பேசாது, அவர் கொடுத்த அந்தக் கோப்பை மதுவை காலி செய்தேன்.
நான் மது அருந்துவதைப் பார்த்த முதலாளி இன்னும் உற்சாகம் ஆனார். இன்னுமொரு கோப்பை மதுவை என் முன்னால் வைத்தார். நான் அதை விரும்பிக் குடித்தேன்.
நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். எனதருகே நெருக்கமாக உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்த முதலாளி, “காதலைப் பற்றி நீ என்னை நினைக்கிறாய்?” என்று கேட்டார்.
எனக்கு உடனே குல்பாரி நினைவுதான் மனதில் வந்து போனது. அவளை நினைத்தவுடன், எனக்கு என்னையுமறியாமல் ஒரு சந்தோசம் வந்தது. எனது கவலைகளை மறந்து நான் பேசினேன்.
“முதலாளி, நான் பாலைவனத்தில் பிறந்தவன். நீங்களும் பாலைவனத்தில் பிறந்தவர்தான். ஏன் நமது சொந்தபந்தங்களும் பாலைவனத்தில் பிறந்தவர்கள்தான். நம் மதம் கூட ஒரு பாலைவனத்தில் பிறந்த மதம்தான்.
இப்படிப்பட்ட பாலைவனங்களை சோலைவனங்கள் ஆக்கியதே, உமர்கயாம், அமீர் குஸ்ரு, ரூமி, சர்மத் கசானி, மிர் சாஹிப் போன்றோர் பாடிய காதல் கவிதைகள்தான்.”
முதலாளி நான் பேசுவதை ஆர்வமாகக் கேட்டுக்கொண்டு இருந்தார்.
“இஸ்லாம் தோன்றிய ஆரம்பத்தில், நமது அரேபிய சொந்தங்கள், இறைவனுக்காக பாடிய கொசிடா கவிதைகளில் கூட, நசீப் என்று சொல்லக்கூடிய முதல் பத்தி வரிகள், கவிதை பாடுபவன் அவனது காதலியோடு வாழ்ந்த சந்தோசங்களையும், அவளைப் பிரிந்த துக்கங்களையுமே பாடும் மரபையும் கொண்டது என்பதை நாம் அறிவோம்.”
நான் அருந்தியிருந்த மது என்னுள் நன்கு வேலை செய்தது. நான் எனது குரலை, இன்னும் கொஞ்சம் உயர்த்திக் கொண்டேன்.
“கடவுளைப் புகழ்ந்து பாடும் தனது கவிதையின், முதல் வரிகளாக, ஏன் காதல் கவிதையாக, அந்த கொசிடாக் கவிஞன் வைக்கவேண்டும்? காரணம், இறைவனே என்றாலும், காதல் மட்டுமே, மனிதர்களை தனது வயமாக்கும்… தனது கவிதையைக் கேட்க வைக்கும் என்ற ஒரு உத்தியினால்தானே?”
“ம்ம்ம் அப்புறம்” நான் பேசுவதை ஆச்சரியாகக் கேட்டுக்கொண்டே சாப்பிட்டு முடித்தார் முதலாளி. நானும் என் கைகளைக் கழுவிக்கொண்டே பேச்சைத் தொடர்ந்தேன்.
“இறைவனைப் பாடிய கொசிடா கவிதைகளின் உள்ளே மறைந்து இருந்த அந்த நசீப் காதல் வரிகளின் மீது ஒரு ஆர்வம் கொண்டு, காலப்போக்கில், நசீப் காதல் வரிகளை மட்டுமே, தனிக்கவிதைகளாகப் பாடும் வழக்கம், சில புலவர்களிடம் ஏற்பட்டுப் போனதற்குக் காரணம், நம் பாலைவன மண்ணும், காதல் என்ற ஒரு பேருணர்ச்சிக்குக் கட்டுப்பட்டதால்தானே?” நான் முதலாளியைப் பார்த்தேன்.
“பலே.. மேலே சொல்லு” என்று என்னை உற்சாகப்படுத்தினார் முதலாளி. நான் தொடர்ந்தேன்.
“நசீப் என்ற அந்த காதல் கவிதைகள், கஜல் என்ற இசைப்பாடல் வடிவமாக மாறிப் போய் இருக்கலாம். நசீப் கவிதைகளுக்கும் கஜல் கவிதைகளுக்கும் இலக்கணம்தான் வித்தியாசம். ஆனால் காதல் உணர்ச்சிகள் ஒன்றுதான்”. நான் முதலாளியைப் பார்த்தேன். அவர் கைதட்டி என்னை உற்சாப்படுத்தினார்.
“காதலுக்குள் மயங்கிய நம் பாலைவன மண்ணின் மன்னர்களும் இருக்கிறார்கள். முதலாளி உங்களுக்குத் தெரியாததல்ல. உங்கள் மூதாதையர்கள், உஸ்பெகிஸ்தான் மண்ணின் மைந்தர்கள். அங்கே இல்லாத காதல் இல்லை.
உஸ்பெகிஸ்தான் சிங்கம் மாமன்னர் பாபரே, அவர் எழுதிய பாப்ரி நாமாவில், அவரது இளவயதுக் காதலை, எழுதிவிட்டுத்தானே சென்று இருக்கிறார்?”
முதலாளி அதை ஆமோதித்தார். “உண்மைதான். பச்சா பாசிக் காதல் தோன்றிய இடமும், எனது மூதாதையர் வாழ்ந்த உஸ்பெகிஸ்தான் மற்றும் அதை அடக்கிய கொராசானில்தான்.”
கண்ணே… நான்தான் அந்த பாபர்.. நீதான் எனது பாப்ரி.”, முதலாளி தனது இரு கைகளையும் என்னை நோக்கி நீட்டிக்கொண்டே, இடி இடியென முதலாளி நகைத்தார்.
நான் மௌனமாக அவரது பாராட்டுக்களை ஏற்றுக்கொண்டேன்.
“எவ்வளவு அறிவு உனக்கு என் காதல் பையனே…” முதலாளி மதுவின் உச்சத்தில் உளறினார். “எங்கே ஒரு காதல் கவிதை பாடு என் காதல் பையனே” என்றார்.
நான் என்ன பாடல் பாடுவது என்று யோசித்தேன். அதுவும் காதல் கவிதை நான் பாடவேண்டும். காதல் என்றவுடன் எனது மனம் நிறைய குல்பாரி வந்து நின்றாள்.
எனக்கு இன்னும் கொஞ்சம் மது சாப்பிடவேண்டும் போலத் தோன்றியது. இந்த முறை, நான் முதலாளியைக் கேட்காமலே, நானே எனது கோப்பையில், மதுவை நிறைத்தேன்.
எனது மதுக்கோப்பையை, மேலே உயர்த்திக்கொண்டே, நான் அரபுக்கவிஞர் உமர்கயாமின் கவிதையை, பாடலாகப் பாடினேன். எனது கண்ணாடிக் கோப்பையின் உள்ளே, குல்பாரி வந்து நடனமாடினாள்.
மரக்கிளைநிழலில், கவிதைநூலோர்கையில்,
மதுக் குவளை, அப்பம்ஒரு துண்டு, பாடும்,
மங்கைநீயென்அருகில் இருந்தால் கானகமும்
சொர்க்கபுரியாய்த் தெரியும்அத்தருணம்!
நான் உற்சாகமாகப் பாடினேன். குல்பாரி என்னை, அவள் அழகால் கிறங்கடித்தாள்.
“அற்புதமான கவிதை.. அற்புதமான உமர்கயாமின் பாடல்.” குல்பாரி மதுபோதையில் உளறிக்கொண்டே என் முன்னால் இப்போது வந்துநின்றாள்.
நான் குல்பாரியைப் பார்த்தேன். அவள் உடம்பில் இப்போது ஒட்டுத்துணி இல்லை. ஏற்கனவே போட்டு இருந்த கால்சராயையும் அவள் இப்போது கழட்டி இருந்தாள்.
அவள் எனது கன்னத்தில் ஒரு ஆழ்ந்த முத்தம் கொடுத்தாள். அந்த முத்தத்தில் அவள் அருந்தியிருந்த மதுவின் வாசம் எனக்குப் புரிந்தது. அவள் கட்டை மீசை, என் கன்னத்தைக் காயப்படுத்தியது.
நான் அவள் நிர்வாணத்தை நேரே பார்த்தேன். வெள்ளை வெளேர் என்று இருந்த அவள் பின்புறம். நான் லேசாக அவள் பிருஷ்டங்களை கையால் தடவிப் பார்த்தேன். என்ன ஓர் ஆச்சரியம்… குல்பாரி ஒன்றும் சொல்லவில்லை.
வெண்ணையும் நெய்யுமாக சாப்பிடுவாள் போலத் தெரிகிறது. அப்படி ஒரு அழகான, மெதுக் மெதுக் என்ற, கோளங்கள் போன்ற ப்ருஸ்டங்கள். எனக்கு அந்தக் கோளங்களை வன்மையாகப் பிசைய வேண்டும் போல ஆசை வந்தது.
குல்பாரி, குனிந்து எனது உதடுகளைத் தேடினாள். குனிந்த அவள் மார்பின் இருபுறமும், சிவந்து போன அவள் மார்பகக் காம்புகள்.
சுற்றிலும் முடிகள் நிறைந்து இருந்தாலும், அதன் கருமை நிறத்தையும் தாண்டி, இரத்தச் சிவப்பில் அந்த இரண்டு மார்பகக் காம்புகள்.
நான் படக்கென்று அவளை இழுத்து, அவள் ஒருபுறத்து மார்பகக் காம்பினை, எனது வாயால் கவ்வினேன். விடாது சுவைத்தேன்.
அவள் இதை எதிர்பார்க்கவில்லை என்று நினைக்கிறேன். சற்று நேரம் கழித்தே, நான் என்ன செய்கிறேன் என்பதை உணர்ந்த அவள், “நீ புதிதாக என்ன செய்கிறாய் அன்பே” என்று கேட்டுக்கொண்டே, கூச்சத்துடன் என்னை கொஞ்சம் நெட்டித் தள்ளினாள்.
நானோ விடவில்லை. நான் சுவைத்த ஒருபுறத்து மார்புக் காம்பை விட்டுவிட்டு, அடுத்த மார்புக் காம்புக்கு தாவினேன். விடாது சுவைக்க ஆரம்பித்தேன். இப்போதும் குல்பாரி சிரித்தாள். ஆனால் இந்தமுறை அவள் என்னை நெட்டித் தள்ளவில்லை. அவள் இப்போது எனது ஆவேச சுவைத்தலை ரசித்தாள் என்றே எனக்குத் தோன்றியது.
நான் எழுந்து அவளை ஆரத்தழுவிக் கொண்டே, அருகில் இருந்த படுக்கையில் தள்ளினேன். அவள் அதை எதிர்பார்த்து இருந்தாள் போலும். அவளும் என்னோடு படுக்கையில் விழுந்தாள்.
நான் எனது பலம் கொண்ட மட்டும் இறுக்கித் தழுவினேன். மார்பு நிறைய முடிகள் நிறைந்த அவளது அந்த பருத்த மேனியை, எனது இருகைகளை இணைத்துத் தழுவுவதே எனக்கு சற்று சிரமம் ஆக இருந்தது. இருப்பினும் நான் விடாது அவளை அணைத்தேன்.
பொதுவாய் முதலாளிதான் என்னை இறுக்கி அரவணைப்பார். அப்போதெல்லாம், நான் பேசாமல் ஒரு புன்முறுவலோடு அதை ஏற்றுக்கொள்வேன். இன்றோ நான், எனது குல்பாரியை இறுக்க அணைத்துக்கொண்டு இருக்கிறேன். அவள் என்னைத் தடுக்கவில்லை. எனது ஆச்சரியம் கலந்த காமம் இன்னும் கூடியது.
நான் அவளது உதடுகளை, ஆவேசமாகச் சுவைக்க ஆரம்பித்தேன். மதுவும், சுருட்டும் கலந்த ஒரு வாசம். பொதுவாய் முதலாளிதான், எனது நாக்கைத் தேடித் தேடி சுவைப்பார். நானோ, இன்று குல்பாரியின் நாக்கைத் தேடுகிறேன்.
குல்பாரி கொஞ்சம் முரண்டு பிடித்தாள். ஆனால் நான் விடுவதாக இல்லை. அவளது மது வாசத்திற்கும், சுருட்டு வாசத்திற்கும் இடையில், நான் குல்பாரியின் நாவைக் கண்டுபிடித்து விட்டேன். நான் ஆசையில் விடாமல் சுவைத்தேன். அவள் கொஞ்சம் கொஞ்சமாக என் இழுப்பிற்கு ஈடு தந்தாள்.
நான் இப்போது படுக்கையில், அவள் மேல் ஏறிப் படுத்தேன். அவள் இதை எதிர்பார்க்கவில்லையோ என்னவோ? “என்ன இது புதுப்பழக்கம்?” என்று கேட்டுக்கொண்டே, அவள் உடம்பின் மேல் இருந்த என்னை, கீழே தள்ள முயற்சித்தாள். நான் அவளை விடாமல் இறுக்கி, அவள் மேலேயே படர்ந்து இருந்தேன்.
அவளது பரந்த உறுதியான தொடை முடிகள், எனது தொடை முடிகளை உரச ஆரம்பித்தது.
இப்போது அவள் தொடைகளுக்கு இடையில், நான் எதையோ தேடினேன். அவளுக்குக் கோபம் வந்து இருக்கவேண்டும். அவள், முடி நிறைந்த அவளது தொடைகளை இறுக்க மூடிக்கொண்டாள். மறுபடியும் என்னைக் கீழே தள்ள முயற்சித்தாள். நானோ விடுவதாக இல்லை.
நான் அவள் தொடைகளுக்கு தொந்தரவு கொடுப்பதை மட்டும் நிறுத்தினேன். ஆனால், அவள் மேலே இயங்குவதை நிறுத்தவில்லை.
“குல்பாரி குல்பாரி” என்று சொல்லிக்கொண்டே, அவள் மேல் நான் கடுமையாக இயங்கினேன்.
முதலில் முரண்டு பிடித்த அவள், கடைசியில் அடங்கினாள். கொஞ்ச நேரத்தில், மயிர் நிறைந்த அவள் தொப்புளுக்குள்ளும், அவள் தொப்புளைச் சுற்றியும், நீர் கசிந்த ஒரு வாசம்.
அவள் அதை ரசித்தாளா அல்லது ரசிக்கவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை. நான், எல்லாம் முடித்து கீழே சரிந்தேன்.
அப்படியே நான் தூங்கியும் போனேன்.
தொடரும்
அழகர்சாமி சக்திவேல்
சிங்கப்பூர்
- கலைகின்ற பொய்கள்
- சாந்தம்மாவும் பரமேசுவரியம்மாவும்
- கவிதை
- வாழ்க்கை
- மழை புராணம்- 12
- வைபவம்
- பச்சா பாசி – அத்தியாயம் நான்கு
- பச்சா பாசி – அத்தியாயம் ஐந்து