author

பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!

This entry is part 16 of 25 in the series 25 ஆகஸ்ட் 2013

அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்   பாவையை விட்டு வந்து ….பாலையின் சூட்டில் நொந்து தேவையைக் கருத்திற் கொண்டு …தேடினோம் செல்வம் இன்று யாவையும் மறக்கும் நெஞ்சம் ..யாழிசை மழலை கொஞ்சும் பூவையும் மிஞ்சும் பிள்ளை ..பிரிவினைத் தாங்க வில்லை! விடையினைக் கொடுத்த நேரம் …விலகியே நிற்கும் தூரம் தடைகளாய்ப் போன தூக்கம் ..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம் மடையெனத் திறக்கும் கண்ணீர் ..மனத்தினில் கொதிக்கும் செந்நீர் உடைந்திடும் இளமைக் கட்டும் ..உடையினில் வேடம் மட்டும்! வாயினைக் கட்டிப் பூட்டி …வயிற்றினைப் […]

விடுதலை நாள் என்பது விடுமுறை நாள் !

This entry is part 20 of 30 in the series 18 ஆகஸ்ட் 2013

…வழக்கறிஞர் கோ. மன்றவாணன்… ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 15 ஆம் நாளன்று இ;ந்தியா முழுவதும் சுதந்திர நாள் விழா கொண்டாடப்படுகிறது. அன்று காலை அரசு அலுவலகங்களில் பள்ளிகளில் கல்லூரிகளில் கொடியேற்றி இனிப்பு வழங்கப்படுகிறது. உண்மையிலேயே இந்த விழா உணர்வுப்பூர்வமாகக் கொண்டாடப்படுகிறதா? தாய்நாட்டுப் பற்றோடு நடத்தப்படுகிறதா? அரசு அலுவலகங்களில் நடைபெறும் சுதந்திர நாள் விழாக்களில் மேலதிகாரி கொடியேற்றுவார். அந்தந்த அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் அனைவரும் அந்த நிகழ்வுகளில் கலந்துகொள்கிறார்களா? இல்;;;லை என்பதுதான் சரியான பதில். காலை எட்டு […]

இதழ்கள் நோக்கில் விளம்பர வகைகள்

This entry is part 24 of 30 in the series 28 ஜூலை 2013

இராஜா வரதராஜா, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி, தஞ்சாவூர் – 613 005. நாம் வாழும் இவ்யுகமே ஒரு விளம்பர யுகமாகும். எங்கு நோக்கினாலும் கேட்டாலும் விளம்பரங்களைத் தான் காண முடிகின்றது. தனி மனிதன் ஒருவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விளம்பரச் சூழலுக்கு ஆட்பட வேண்டியிருக்கிறது என்பது மறுக்க – மறைக்க முடியாத உண்மையாகும். இதழ்களில் விளம்பரங்கள்: விளம்பரங்கள் இல்லையென்றால் இதழ்களை நடத்த முடியாத சூழ்நிலையைக் காலந்தோறும் இதழ்கள் பல நின்று போனதை வைத்துத் […]

மாயக் கண்ணனின் மருகோன்

This entry is part 4 of 25 in the series 7 ஜூலை 2013

எஸ் ஜெயலட்சுமி                         கண்ணன் என்றாலே நம் நினை வுக்கு வருவது அவனுடைய கள்ளவிழிப் பார்வையும் அவனு டைய மாயச் செய்ல்களும் தான். ஆழ்வார்கள், தங்களுடைய பாசுரங்களிலே அவனுடைய பால லீலைகளைப் பலவிதங்க ளில் பாடி அனுபவித்திருக்கிறார்கள். பெரியாழ்வார் யசோதை யாகவே மாறி கண்ணனுடைய லீலைகளை யெல்லாம் பாடி அனுபவித்திருக்கிறார். பிற்காலத்தில் எழுந்த பிள்ளைத் தமிழுக்கு இவரே முன்னோடி என்றும் சொல்லலாம்.                           […]

ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் – ஒரு பார்வை.

This entry is part 20 of 27 in the series 30 ஜூன் 2013

    – சூர்யநிலா.எழுதப்படும் கவிதைகள் மிகையாகவும் படிக்கப்படும் கவிதைகள் குறைவாகமிருக்கும் காலச் சூழல் இது. எப்படியாவது படித்துவிட வேண்டுமென்ற கட்டாயத்தில் சில தொகுப்புகள் வந்து கொண்டுதானிருக்கின்றன. ஸ்ரீரங்கம் சௌரிராஜன் அவா;களின் ‘உரிய நேரம்’ படித்துவிட கட்டாயப்படுத்தும் தொகுப்புதான். 1971-ஆம் ஆண்டிலிருந்து கவிதைத் தளத்தில் இயங்கி வரும் இவா;-தமது 66-ஆம் வயதினில் ‘உரிய நேரம்’ தொகுப்பினைத் தந்துள்ளார். தனது முதல் தொகுதியான ‘கவசம்’ நூலிலிருந்த கவிதைகளும் இத்தொகுப்பில் இடம் பெற்றிருப்பதால் சற்றொப்ப, இவரின் ஒட்டுமொத்தக் கவிதைத் தொகுப்பாகவும் இதைக் […]

வேர் மறந்த தளிர்கள் – 11,12,13

This entry is part 16 of 27 in the series 30 ஜூன் 2013

11 மலேசியக் கார்   ‘வாடிய பயிர் சூரியனைக் கண்டது போல்’ பசி வயிரைக் கிள்ளிய நேரத்தில் படைக்கப் பட்ட உணவை உண்ண கேட்கவும் வேண்டுமா? அதிலும்,அம்மா தயாரித்த தேநீர் என்றால் பார்த்திபனுக்கு மிகுந்த விருப்பம்.இரண்டு மூன்று கிளாஸ் தேநீரை உருசித்துக் குடிப்பான்.அம்மாவின் கைப்பதம் அவனைக் கிறுகிறுக்கச் செய்துவிட்டிருந்தது! இதை நன்கு தெரிந்து வைத்திருந்ததால் முன்னெச்சரிக்கையாக அம்மா, பெரிய ஜக்கில் தேநீரைக் கலக்கி கொண்டு வந்திருந்தார்.              அப்பாவும் பிள்ளையும் சேர்ந்து தான் பிரட்டிய மீகூனை சுவைத்து […]

லாடம்

This entry is part 6 of 27 in the series 30 ஜூன் 2013

சூர்யா லட்சுமிநாராயணன்   அந்த அரையிருட்டில் முழங்காலுக்‍கு மேல் ட்ரவுசர் போட்டு செல்லும் உருவத்தை பார்த்ததும் தான் தூக்‍கம் கலைந்தது. எப்பொழுதுமே அழகான பெண்கள் புத்துணர்ச்சியை கொடுக்‍கிறார்கள் என்றால் அதில் மிகையில்லை. அலுவலகம் ஆனாலும் சரி, செகண்ட் ஷோ சினிமாவானாலும் சரி விழிப்படைவதற்கு (அரைத்தூக்‍கத்திலிருந்து) உதவுவது அழகான கலகலப்பான பெண்கள் மட்டுமே. அவள் மட்டும் என் அருகில் உட்காருவாள் என்றால் ( 2 சீட் தள்ளி உட்கார்ந்தாலும் பரவாயில்லை) இன்று ஒருநாள் மட்டும்  ஆத்திகனாக மாறி கடவுளுக்‍கு […]

கற்றுக்குட்டிக் கவிதைகள்

This entry is part 13 of 29 in the series 23 ஜூன் 2013

கற்றுக்குட்டி (மலேசியா)   புத்தகக் கடை   குருசாமி புத்தகக் கடை என்று பெயர் போட்டிருந்தது. நுழைந்தார் குப்புசாமி.   கடையின் வாசலில் கடவுள் படங்கள்: காளி, சிவன், முருகன், கணபதி. ஃப்ரேமுக்குள்ளும்  காகிதச் சுருளாகவும்.   நடக்கும் வழியில் நர்த்தன கணபதி, நடராஜர், குழலூதும் கிருஷ்ணன், மண்சிலைகள், வெண்கலச் சிலைகள், ஐம்பொன் சிலைகள். எல்லா சைசுகளிலும்.   கண்ணாடிப் பெட்டிகளில் காமாட்சி விளக்குகள், வெள்ளிக் கமண்டலங்கள், தூவக்கால்கள், ஊதுபத்தி ஸ்டாண்ட்.   புத்தகம் எங்கே என்று […]

மனதாலும் வாழலாம்

This entry is part 12 of 29 in the series 23 ஜூன் 2013

ராஜாஜி ராஜகோபாலன் நித்யா நிச்சயம் காத்திருப்பாள். வாசல் கதவுகளோடு தன்னையும் சேர்த்துப் பிணைத்தபடி காத்திருப்பாள்; நினைவுகள் மட்டும் இவனோடு சேர்ந்து பயணித்துக்கொண்டிருக்கும். தேவன் பயணம் செய்துகொண்டிருந்த ஆட்டோ அவனுடைய மனோவேகத்தோடு போட்டிபோட முயல்வதுபோல் ஒடிக்கொண்டிருந்தது. ரோட்டில் மட்டுமல்லாமல் நடைபாதைகளிலும் தெருவோர வியாபாரிகளின் முதுகுகளிலும்கூட ஏறி ஓடுவதுபோலிருந்தது. இந்த இருவரையும் இருபது ஆண்டுகள் பிரித்துவைத்த அதே விதிதான் இனியும் இவர்கள் பிரிந்திருப்பது நியாயமல்ல; மீண்டும் சந்தித்துக்கொள்ளும் காலம் வந்துவிட்டதென்பதைத் தீர்மானித்திருக்கவேண்டும். தேவன் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டான். நித்யா இப்போது எப்படி […]

கற்றுக்குட்டிக் கவிதைகள்

This entry is part 23 of 23 in the series 16 ஜூன் 2013

(மலேசியா)   யாருக்குத் தெரியும்? நேற்று கம்பத்தின் ஒதுக்குப்புற வீட்டில் கொள்ளை. இந்திய மூதாட்டி தினைத்துணையாய் தினைத்துணையாய் சேர்த்து வைத்த காசு திருடப்பட்டது.   அது இளைய மகன் கார் வாங்கக் குறிவைத்த காசு. கேட்டு அலுத்துவிட்டான். தன்னை அம்போ என்று விட்டுக் காதலியுடன் ஓடிப்போனான். “கொள்ளையிலே போக” என சபித்தாள்.   கொள்ளையில்தான் போயிற்று.   கழுத்துச் சங்கிலியை இறுகப் பிடித்தாள். அறுத்தெடுத்ததில் குரல்வளையில் பெரும்காயம்.   ஆனால் மூதாட்டியின் கவலையெல்லாம் அவள் பொத்திப்பொத்தி வைத்திருந்த […]